சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007
தேனியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வித்தாள் திருடப்பட்ட விவகாரத்தில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தலைமையாசிரியர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.10ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு நாளை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான கேள்வித்தாள்கள் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள பள்ளி வளாக கட்டடத்தின் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிக்க ரெங்காபுரம் ராதாகிருஷ்ணன்,பாலக்கோம்பை நந்தகோபால் என்ற இரண்டு தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ராஜா என்ற காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து கேள்வித்தாள் திருடப்பட்டது தெரிய வந்தது. அல்லிநகர மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர் சிவபாண்டியன்தான் கேள்வித்தாளை திருடினார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். மேலும் கண்காணிப்பாளர்களாக செயல்பட்ட தலைமையாசிரியர்கள் இரண்டு பேரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவாலாளி ராஜாவும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
visit
No comments:
Post a Comment