Tuesday, March 20, 2007

வரலாறு படைத்தது இந்தியா : 413/5

போர்ட் ஆப் ஸ்பெயின்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 19 மார்ச் 2007

இந்திய பெர்முடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 413 ரன்களை எடுத்து வரலாறு படைததுள்ளது.இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்தியாதான் அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள பெருமையை தட்டிச் சென்றுள்ளது.டாஸ் வென்ற பெர்முடா அணி, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கங்குலி, உததப்பா களம் இறங்கினர். ஆனால் இரண்டாவ்து ஓவரிலேயே உத்தப்பா அவுட் ஆக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இந்நிலையில், கங்குலியுடன் ஜோடி சேர்ந்த சேவாக் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இவரைத் தொடர்ந்து கங்குலி தனது பங்குக்கு 89 ரன்கள் சேர்த்தார. சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். இதையடுத்து களமிறங்கிய யுவராஜ், தோனி கூட்டணி அதிக ரன்கள் சேர்ப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 38.1 ஓவரில தோனி பார்டன் வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிக்க, டக்கர் அழகாக கேட்ச் பிடித்து தோனியை அவுட் ஆக்கினார். இதற்கு முந்தைய ப்ந்தை சிக்ஸருக்கு விரட்டியது போல இந்த முறையும் முயற்சித்து அவுட் ஆனார். தோனி 29 ரன்களுக்கு அவுட் ஆக, யுவராஜ் சிங்குடன் கைகோர்த்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து, யுவராஜ் விஸ்வரூபம் எடுக்க பெர்முடா அணியினர் மிரண்து போயினர். பெர்முடா வீரர்களின் பந்து வீச்சை சிக்சஸர்களும், ப்வுண்டரிகளுமாக விரட்ட ஒரு கட்டத்தில் என்ன் செய்வதென்றே புரியாமல் பெர்முடா வீரர்கள் நிலை குலைந்தனர். யுவராஜ் சிங்கும் சதமடிக்க தவறி விட்டார். அதிரடியாக விளையாடிய இவர் 46 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதுவரை நிதானமாக விளையாடிய சச்சின், தனது அதிரடியை காட்ட பெர்முடா அணியினர் அரண்டு விட்டனர். 29 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சச்சின் களத்தில் இருந்தார். கேப்டன் ஆட்டத்தின் கடைசி பந்தை சிகஸருக்கு விரட்டி 7 ரன்களுடன் ஆட்டம் இழக்காம்ல் இருந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 413 ரன்கள் எடுத்தனர்.414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்கை பெர்முடாவுக்கு இந்தியா நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் 16 சிக்சர்களும், 31 பவுண்டரிகளும் அடித்து இந்தியர்கள் வெளுத்துள்ளனர். பெர்முடா சார்பில் பார்டன் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 ரன்களை உதிரிகளாக பெர்முடா அணியினர் விட்டுத் தந்துள்ளனர். இந்தியா மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அணி இன்று சிறப்பாக செயல்பட்டுள்ள்து. மொத்தத்தில் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
(மூலம் - வெப்துனியா)
visit
http://tamilparks.50webs.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com

2 comments:

Anonymous said...

kathukutti team..

Congrulation to won the WORLD CUP

Anonymous said...

why india not played with Bangladesh