மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மார்ச் 2007
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான இந்திய அணி நேற்றிரவு மேற்கிந்திய தீவுகள் புறப்பட்டது. மேற்கிந்திய தீவுகளில் வரும் 13-ம் தேதி 9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு மும்பையில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்த பவார், வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக இந்திய வீரர்கள் பிளேசர் உடையை அணிந்து போஸ் கொடுத்தனர். அதில், பி.சி.சி.ஐ துணைத்தலைவர் நிரஞ்சன் ஷா, பயிற்சியாளர் சேப்பல், உடலியக்க நிபுணர் ஜான் குளோஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அணியின் விபரம் ராகுல் திராவிட் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர் (துணை கேப்டன்), சவுரவ் கங்குலி, சேவாக், அகார்கர், தோனி, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகீர் கான், கும்ப்ளே, முனாஃப் படேல், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பா.
(மூலம் - வெப்துனியா)
visit http://tamilparks.50webs.com for more
2 comments:
இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
என்னுடைய பதிவு - http://sivabalanblog.blogspot.com/2007/02/blog-post_28.html
India will won the World Cup
Post a Comment