Thursday, July 13, 2006

வெற்றி தோல்விகளுக்கு மனமே காரணம்.

நான் தொல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி கூற வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது? நேரம் கிடைக்கவில்லை, ஆகவே நான் இதில் தோல்வி அடைந்துவிடுவோமோ என் மனதில் நினைத்தேன்........ஆனாலும் மனதில் ஒரு வெறி இருந்தது. எப்படியாவது.......... இதை வலையில் வெளியிட வேண்டும் என்று. அது இன்று தான் வெற்றி பெற்றது.

உலக வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். "கல்வி கரையில" என்று இதனாலேதான் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவயதில் பிறந்த வீட்டிலேயுள்ள பெற்றோரிடமும், அங்கேயுள்ள குடும்பத்தாரிடமும் பல செய்திகளை கற்றுக் கோள்கின்றோம். அதன் பின்னர் பள்ளிக்கூடங்களில் சென்று ஒரு பொதுக்கல்வியைப் பெறுகின்றோம். இதன் பின்னர் ஏதாவது ஒரு தொழிலுக்கான சிறப்புக் கல்வியையும் பயிற்சியையும் பெறுகின்றோம். இதனைத் தொடர்ந்து குடும்ப வாழ்வு சமூக வாழ்வு, என பல வகையான அறிவுகளை பெறுகின்றோம்.

உலகில் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளிலே ஈடுபடுவதனால், ஒருவருக்கொருவர் போட்டிகள் இயல்பாகின்றன. இதனால் வெற்றி தோல்விகளும் இயற்கையாகின்றன.

உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்தில் மன உறுதி வேண்டும். இதற்கேற்றப்படி நடந்து கொள்ளவும் முயல வேண்டும். இதைச் சிதைக்கும் அல்லது தடுக்கும் வேறு நோக்கங்களுக்கு முதன்மை தருகின்வர்கள் உலகை சார்ந்த வாழ்வில் வெற்றி பெற முடியாது. வாழ்வின் வெற்றிக்கான செல்வத்தின் பெருக்கத்தையோ, அல்லது ஆதரவான துணை வசதிகலையோ பெற முடியாது.

தாங்கள் உயர்வாகப் போற்றி மதிக்கும் நோக்கங்களையும், பண்புகளையும், கோட்பாதுகளையும் நடைமுரை உலக வாழ்விலேயும் கடைப்பிடிக்க முயல்பவர்கள் பெறும்பாலும் உலகில் தோல்வியையே சந்திப்பார்கள். இவைகளையும் உலகப் போக்கோடு இணைத்துக் கொண்டு உலகத்தோடு, ஒட்டி வாழ்வதிலே கருத்துச் செலுத்தினால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தோல்வியை மறந்துவிடுங்கள்.

தொல்வியைப் பற்றி நினைத்து, வேதனைப்பட்டுப் புலம்புகிறதை அடியோடு மறந்து விட வேண்டும். இனி எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கப் பழ வேண்டும்.

"மாடிப் படியில் ஏறும் போது, மாடிக்குப் போய்ச் சேர்வதையே நினைத்துப் போக வேண்டும். கால் தவறி உருண்டு விழுந்தால் எந்த டாக்டரிடம் போவது என்பதை பற்றி ஏன் நினைக்க வேண்டும்.

No comments: