Wednesday, February 28, 2007

தூய தமிழ் சொற்கள் என்பது எவை?

இதயம் சூரியகாந்தி திருப்தி போன்ற சொற்கள் தமிழ் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.சூரியகாந்தி-பொழுதுவணங்கிஇதயம்-மாங்காயீரல்திருப்தி-பொந்திகைஆனால் சிலர் கூறுகின்றார்கள் இவை தமிழ் இலக்கணத்தின்படி சரியாக இருப்பதால் இவை தமிழ் சொற்கள் என்று. இதில் எவை தூய தமிழ்சொற்கள் எவை வேற்றுமொழி சொற்கள் என்று எவ்வாறு இனங்காணுவது. உங்களுக்கு தெரிந்த தூய தமிழ்ச் சொற்களை நீங்களும் இணையுங்கள்.

visit http://tamilparks.50webs.com for more

Thursday, February 08, 2007

கொல்கட்டாவில் நாளை இந்திய - இலங்கை முதல் ஒரு நாள்!

புதன், 7 பிப்ரவரி 2007
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் கங்கூலியுடன் மீண்டும் இளம் வீரர் ராபின் உத்தப்பா களமிறங்கவுள்ளார்!
இப்போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ள வீரேந்திர சேவாக், நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய - இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்த முக்கிய போட்டித் தொடரில் இரு அணிகளும் தங்களுடைய அணிகளை முழுமைபடுத்திக் கொள்ளும் கடைசி வாய்ப்பாக இதனைக் கருதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் மோசமாக விளையாடிய காரணத்தினால் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், பிறகு அணியில் இருந்தும் நீக்கப்பட்ட வீரேந்தர் சேவாக், உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு நாளை முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் களமிறங்கிய உத்தப்பா சிறப்பாக ஆடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள சேவாக், நாளை சிறப்பாக விளையாடி தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு புதிதாக ஒரு சவால் உருவாகியுள்ளது. அஜீத் அகார்கர், இர்ஃபான் பத்தான், யுவராஜ் சிங் ஆகியோர் நாளை ஆடுவார்களா என்பது உறுதியாகவில்லை. அஜீத் அகார்கருக்கு காய்ச்சல், இர்ஃபான் பத்தானிற்கு தோள்பட்டையில் காயம், யுவராஜ் சிங்கிற்கு முதுகில் பிடிப்பு என்று அணித் தலைவர் திராவிட் கூறியுள்ளார்.
எனவே நாளை களமிறங்கும் அணியை நாளை காலை தான் முடிவெடுத்து அறிவிக்கப் போவதாக திராவிட் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில், கங்கூலியுடன் உத்தப்பாவை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கி, வீரேந்தர் சேவாக்கை நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்க திராவிட் முடிவு செய்துள்ளார்.
இலங்கை அணியும் உலகக் கோப்பைக்கான தனது அணியை முடிவு செய்ய இத்தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அணித் தலைவர் மஹிலா ஜெயவர்தனே, முன்பை விட பலம் வாய்ந்த அணியாகவே இலங்கை அணி இந்தியா வந்துள்ளது என்றும், குறிப்பாக வேகப்பந்து வீச்சில் மிக பலமான நிலையில் இந்திய அணியை சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யாவும், குமார சங்ககாராவும் நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழு சோதனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைத் தொடர்ந்து ஆடவரும் அட்டபட்டுவும், ஜெயவர்தனேயும், உப்புல் தாரங்காவும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க வல்லவர்கள்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை 150 கி.மீ. வேகத்தில் வீசவல்ல லாசித் மலிங்கா தங்களுக்கு முக்கிய பலம் என்று ஜெயவர்தனே கூறியுள்ளார்.
மொத்தத்தில் நாளைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும். பகலிரவுப் போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டியின் பந்துக்குப் பந்து வர்ணனையை ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை வெப்உலகம்.காம் உங்களுக்கு தொடர்ந்து வழங்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அணி :
ராகுல் திராவிட் (அணித் தலைவர்), சௌரவ் கங்கூலி, வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங், அஜீத் அகார்கர், ஜாஹீர் கான், ஸ்ரீசாந்த், முனாஃப் பட்டேல், ராபின் உத்தப்பா, அனில் கும்ளே.
இலங்கை அணி :
மஹிலா ஜெயவர்தனே (அணித் தலைவர்), ஜெயசூர்யா, உப்புல் தாரங்கா, குமார சங்ககாரா, மார்வான் அட்டபட்டு, ரஸ்ஸல் ஆர்னால்ட், திலகரத்னே தில்ஷான், உப்புல் சந்தனா, சமிந்தா பண்டாரா, தில்ஹாரா ஃபெர்னாண்டோ, குலசேகரா, ஃபர்வீஸ் மஹ்ரூஃப், லாசித் மலிங்கா, எல்.பி. சில்வா, நுவான் சோய்ஸா.


visit webulgam for more

Tuesday, February 06, 2007

அரசாங்க வேலையா...... ஆகா ... பேஷ்,,,,,, பேஷ்,,,,,,

பையன் எம்.பி.ஏ. படித்திருக்கிறான். அவன் அப்பா ஒரு லட்சாதிபதி.
அவன் அம்மா வழியில் அவனுக்கு ஏகப்பட்ட சொத்து.
அழகானவன்.
ஒரே ஜாதிதான்.
நல்ல குணம் இருந்தாலும் பெண்ணைப் பெற்ற தந்தை அந்த பையனை மருமகனாக ஏற்க விரும்பவில்லை.

ஏன் என்று அறிய ஆவலா இங்கு சுட்டுங்கள்

Monday, February 05, 2007

இந்திய அணியில் மீண்டும் சேவாக்!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இந்திய அணியில் மீண்டும் சேவாக்! இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திரர் சேவாக்கும், வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளார்!
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத சேவாக், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள 4 ஒரு நாள் போட்டிகளில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார், இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்களுக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், முனாஃப் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர், ரமேஷ் பவார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சேவாக் ஒரு சிறந்த வீரர். அவருடைய ஆட்டத் திறன் குறையவில்லை, அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை என்றும், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் நடுக்கள வீரராக களமிறங்குவார் என்றும் திலீப் வெங்சர்க்கார் கூறினார்.
இந்திய அணி :
ராகுல் திராவிட் (அணித் தலைவர்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்கூலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங், அனில் கும்ளே, அஜீத் அகார்கர், ஜாஹீர் கான், முனாஃப் பட்டேல், ஸ்ரீசாந்த்.

visit http://tamilparks.50webs.com for more

காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது!

திங்கள், 5 பிப்ரவரி 2007

தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு தகராறு வழக்கை கடந்த 16 ஆண்டுகளாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பை அளிக்கிறது!

1990 ஆம் ஆண்டு பிரதமராக வி.பி. சிங் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க காவிரி நதி நீர் பகிர்வு தகராறை தீர்த்து வைக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் அது இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதன்படி, ஜூன் முதல் மே வரையிலான நீராண்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்கின்ற அட்டவணையையும் தனது இடைக்கால உத்தரவில் அளித்தது.

இந்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர, கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆயினும், ஒரு நீராண்டில் கூட நடுவர் மன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் அளவை கர்நாடகா திறந்துவிடவில்லை. எப்பொழுதெல்லாம் காவிரி நதி உற்பத்தித் தலங்களில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ, அப்பொழுது மட்டும் அணை நிரம்பி கூடுதலான உபரி நீரை காவிரியில் திறந்துவிட்டு அதனால் மட்டுமே தமிழ்நாடு தண்ணீரை பெற்று வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் அதிக மழை பெய்ததால் கர்நாடகத்தில் காவிரி மீது கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்ததால் தொடர்ந்து உபரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்து அதனால் மேட்டூர் அணை அதன் முழு அளவிற்கு நிரம்பியது.

இந்த நிலையில், நீதிபதி என்.பி. சிங், நீதிபதிகள் என்.எஸ். ராவ், சுதிர் நாராயண் ஆகியோர் கொண்ட காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது.

காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் மாநிலங்கள் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்கின்றன, அதற்கு எவ்வளவு நீர் தேவை, காவிரியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நீர் வருகிறது என்பதனை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நீராண்டில் பெறவேண்டிய தண்ணீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் அமைத்த மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி காவிரி டெல்டா பகுதியில் 24.5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறும் தமிழ்நாட்டிற்கு 395 டி.எம்.சி. தண்ணீரும், 18.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும் கர்நாடகத்திற்கு 250 டி.எம்.சி. தண்ணீரும், கேரளத்திற்கு 33.4 டி.எம்.சி. தண்ணீரும், புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்று மதிப்பீட்டாளர் குழு கூறியுள்ளது.

ஒரு நீராண்டில் சராசரியாக காவிரியில் 740 டி.எம்.சி. தண்ணீர் வரத்து உள்ளது என்கின்ற அடிப்படையில் இந்த பகிர்வு அளவை மதிப்பீட்டாளர் குழு அறித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதித் தீர்ப்பை அளிப்பது மட்டுமின்றி, அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும் என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலங்களும் ஏற்கக் கூடியதாக இருக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் கல்யாணம் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், இடதுசாரிகளும் வலியுறுத்தியுள்ளன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க கர்நாடக தலைநகர் பெங்களூரிலும், மற்ற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

source from webulagam
visit http://tamilparks.50webs.com for more

Saturday, February 03, 2007

படைப்புகள் வலைத்தளத்தில் இலவசமாக வெளியிட வரவேற்கப்படுகிறது

உங்களுக்கு என தனி வலைத்தளம் இல்லைய அல்லது வலைத்தளம் இருந்தும் அமோக வரவேற்பு இல்லையா
கவலையை விடுங்கள்
உங்கள் படைப்புகளை வலைத்தளத்தில் வெளியிட விரும்புகிறீர்களா அதை இலவசமாக தமிழ் தோட்டம் நிருவாகம் செய்து தருகிறது. நீங்கள் உங்கள் படைப்புகளை (உங்கள் பெயர், மற்றும் உங்கள் புகைப்படம் வெளியிட விரும்புவீர்களானால் அதனுடன், உங்களுக்கு வலைத்தளம் இருந்தால் உங்கள் வலைத்தள சுட்டியுடன்) tamilparks at gmail.com அனுப்புங்கள் அது தமிழ் தோட்டம் வலையில் இலவசமாக வெளிவரும். இங்குள்ள சுட்டியின் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு அமோக வரவேற்ப்பு வரப்போகிறது.
http://tamilparks.50webs.com/ உங்களுக்கு இங்கு தமிழில் தட்சு செய்யலாம்

visit http://tamilparks.50webs.com for more about Thenlai Raman Stories, Tamil Jokes, Tamil Articles, Tamil Pothu Areevu.