Wednesday, February 28, 2007

தூய தமிழ் சொற்கள் என்பது எவை?

இதயம் சூரியகாந்தி திருப்தி போன்ற சொற்கள் தமிழ் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.சூரியகாந்தி-பொழுதுவணங்கிஇதயம்-மாங்காயீரல்திருப்தி-பொந்திகைஆனால் சிலர் கூறுகின்றார்கள் இவை தமிழ் இலக்கணத்தின்படி சரியாக இருப்பதால் இவை தமிழ் சொற்கள் என்று. இதில் எவை தூய தமிழ்சொற்கள் எவை வேற்றுமொழி சொற்கள் என்று எவ்வாறு இனங்காணுவது. உங்களுக்கு தெரிந்த தூய தமிழ்ச் சொற்களை நீங்களும் இணையுங்கள்.

visit http://tamilparks.50webs.com for more

1 comment:

Anonymous said...

தமிழ்ச் சொற்களைத் தமிழ் அல்ல என்று கூறுவது நல்லதன்று. தமிழ்ப் பற்றென்று தமிழ்ச் சொற்களை அறியாது, உங்களது பற்று அளவுகடந்து, தமிழ் மொழியை ஒதுக்கல் ஆகாது. அரைகுறையாகத் தமிழ் பயின்றவர்கள் கூறும் எவற்றையும் தமிழரகாகிய நாம் நம்பிவிடல் ஆகாது.

கீழ்க்காணும் சொற்கள் தமிழ்ச் சொற்கள்

சந்தோசம்
பொக்கிடம்
அபிடேகம் (கும்பாபிடேகம்)
வருடம்
அலுமாரி (பெட்டகம், நிலைப்பேழை)
அலவாங்கு (பாரை?)
சன்னல் (குறுங்கண்); [ சாரளம் என்பது வென்ரிலேற்றர் 'Ventilator']
கல்யாணம்
சூரியன்
சுந்தரம்
விதவை (விடுவை, கைம்பெண் என்றும் அழைப்பார்கள்)
வாரம்
சமுத்திரம்
தீபம்