பிறந்த குழந்தைகளுக்கு புட்டி பாலை விட தாய்ப்பாலே சிறந்தது.
ஆனால் நம்மில் எத்தனை தாய்மார்களுக்கு முறையாக தாய்பால் கொடுக்க தெரியும்?
இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் தாய்பால் தரும் பழக்கமே இல்லை என்பது இன்னும் வேதனையான விஷயம். தாய்பாலின் மகத்துவம் தெரியாத பெண்களுக்காக நாங்கள் தரும் சிறப்பு 'டிப்ஸ்' இதோ...
* குழந்தை ஆரோக்கியம் மற்றும் பலத்தோடு வளர ஒரே சரியான உணவு தாய்பால்தான்.
* குழந்தை பிறப்புக்கு பின்வரும் இரத்தப்போக்கு, தாய்பால் தருவதால் நிற்கிறது.
* தொற்று நோய் எதுவும் வராமல் தடுக்கிறது இந்த தாய்ப்பால்.
* தாய்பால் எப்போதும் சுத்தமானது. தயார் நிலையில் இருப்பது, சரியான வெப்பநிலையில் உள்ளது.
* தாய்பால் தருவதன் மூல்ம் சில பெண்கள் உடனடியாக மீண்டும் கருத்தரிக்காமல் தடுக்கப்படுகிறார்கள்.
* இது தாயையும், சேயையும் அணுக்கமாயும், பாதுகாப்பாயும் உணர செய்கிறது.என்ன இக்காலத்து மாடர்ன் மங்கைகளே!தாய்பாலின் மகத்துவத்தை புரிந்துவிட்டீர்களா!
(மூலம் - வெப்துனியா)
1 comment:
oh great welcome Tamil Flowers
Post a Comment