பலருக்கும், பல் மற்றும் ஈறுப் பகுதிகளில் பிரச்சினை இருக்கும். பொதுவாக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பற்பசையே வாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். பற்பசை மற்றும் உண்ணும் உணவில் செய்யும் மாற்றங்கால் பெருமளவு பிரச்சினையைத் தீர்க்கலாம்.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர, பசியை உண்டாக்கும். வாய்ப்புண் குணமாகும்.
வாகை வேர்ப் பட்டையை பொடி செய்து, அதைக் கொண்டு பல் துலக்கி வர, பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் உறுதியாகும்.
வாகை வேர்ப் பட்டையை நீர்விட்டுக் காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய்க் கொப்பளித்து வர, வாய்ப்புண், பல் ஈறு உறுதியாகும்.
வாகைப் பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர, அல்சர் எனப்படும் குடல் புண்ணைக் குணப்படுத்தும், குடல் புண் குணமானால் வாயில் புண் வருவது தவிர்க்கப்படும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
No comments:
Post a Comment