காய்கறிகளை நன்கு சமைத்து சாப்பிடுவது மிகவும் தவறு. பல காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடலாம். சிலவற்றை மட்டும்தான் சமைத்து சாப்பிட வேண்டும்.
பச்சை மிளகாயாக இருந்தாலும் சரி, காய்ந்த மிளகாயாக இருந்தாலும் சரி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். உருக்கிய நெய்தான் உடலுக்கு நல்லது. கெட்டியான நெய் உடலுக்கு கெடுதல், அது கொழுப்பை ஏற்படுத்தும்.
பசுமாட்டு நெய் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது உடல் எடையையும் கூட்டாது. ஆனால் எருமை பாலில் எடுத்த நெய் அதிக கொழுப்பு நிறைந்தது. உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் எருமை நெய்யை சாப்பிடலாம்.
உடலுக்குள் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் யோகாவால் சரி செய்ய முடியும். ஆனால் விபத்துகளால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது. அதே சமயம் விபத்தினால் பாதிக்கப்பட்ட கைகளை சரியாக இயக்க ஆசனங்கள் பயன்படும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
No comments:
Post a Comment