கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
No comments:
Post a Comment