கண்டேன் காதலை, ஆறுமுகம் படங்களை முடித்துவிட்டு திருத்தணிக்காக முண்டாவை முறுக்கிக் கொண்டிருக்கிறார் பரத். பழனிக்குப் பிறகு பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் படம். என்னை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய படம் பழனி என்று கூறுகிறவர், திருத்தணி அந்த இமேஜை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்.
நீங்களும் சின்ன தளபதி பட்டமெல்லாம் போட்டு ரேஸில் குதித்திருக்கிறீர்களே?
சின்ன தளபதிங்கிறது நானா போட்டுகிட்ட பட்டம் கிடையாது. எம்டன் மகன் படத்தில் நடித்த போது ரசிகர்கள் அளித்த பட்டம். அவர்களின் அன்பு வேண்டுகோளுக்காக பழனி படத்திலிருந்து அந்த பட்டத்தை பயன்படுத்துறேன்.
பழனியில் குஷ்பு, ஆறுமுகத்தில் ரம்யா கிருஷ்ணன். சீனியர் நடிகைகளுடன் நடிப்பது எப்படியிருக்கிறது?
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சீனியர்களுடன் நடிக்க முடியலையேங்கிற ஏக்கம் பல பேருக்கு இருக்கு. ஆனா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருக்கிறது. நடிகைகளுடன் மட்டுமில்லை. தம்பிக்கு இந்த ஊரு படத்தில் பிரபு சாருடனும், திருத்தணியில் ராஜ்கிரண் சாருடனும் நடிக்கிறேன்.
கண்டேன் காதலை படத்தில் தமன்னாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களாமே?
கதைக்கு தேவையாக இருந்ததால் அப்படியொரு காட்சியை இயக்குனர் எடுத்தார். முத்தம்னாலும் அதுவும் நடிப்புதானே? ரொம்ப அழகா அந்த முத்தத்தை படமாக்கியிருக்காங்க.
WD
தம்பிக்கு இந்த ஊரு படத்தில் உஙக் டான்ஸ் பிரமாதமாக இருப்பதாக சொல்கிறார்களே?
என்னுடைய நடனம் பேசப்பட முக்கிய காரணம் ஸ்விங்கர்ஸ் நடனக்குழுவும் மாஸ்டர் பிரசன்னகுமாரும்தான். இப்போதும் நேரம் கிடைக்கிற போது டான்ஸ் பயிற்சி எடுத்துப்பேன். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் புது மாதிரியான டான்ஸை முயற்சி பண்ணியிருக்கேன். கண்டிப்பா பேசப்படுற மாதிரி அது இருக்கும்.
ரொமாண்டிக் ஹீரோ மாதிரி இருக்கும் நீங்கள் பத்து பேரை ஒத்தையா அடிக்கிற ஆக்சன் ஹீரோவாக நடிப்பது எப்படி?
பத்து பேரை அடிக்கிறோம்னா அது நம்புகிற மாதிரி இருக்கணும். பைட்ல ஒரு வேகம் இருக்கணும். முக்கியமா அதுக்கேற்ற உடம்பு வேணும். ஆதனால உடம்பை கவனிக்கும் விஷயத்தில் உறுதியா இருப்பேன்.
ரஜினி, கமல் படங்களில் அப்பாஸ் நடிச்சிருக்கார். உன்னைப்போல் ஒருவனில் கணேஷ் ராகவேந்திரா நடிச்சிருக்கிறார். இதுமாதிரி பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கதையும், கேரக்டரும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
இப்போதைய இளம் தலைமுறையில் போட்டி பொறாமை இல்லை. உங்களின் படங்களைப் பார்த்து சக நடிகர்கள் கருத்து சொல்வது உண்டா?
இப்போ நடிக்கிற யங் ஹீரோஸ் எல்லாருமே எனக்கு ப்ரெண்ட்ஸ்தான். படத்தை பார்த்துட்டு ஓபனா கருத்து சொல்வாங்க. பழனி படத்தை பார்த்துட்டு, ரொம்ப நல்லா பண்ற. கமர்ஷியல் உனக்கு பிரமாதமா வருதுன்னு ஃபோன் செய்து விஜய் பாராட்டினார்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia.
Free Collections
2 comments:
//பழனி படத்தை பார்த்துட்டு, ரொம்ப நல்லா பண்ற. கமர்ஷியல் உனக்கு பிரமாதமா வருதுன்னு ஃபோன் செய்து விஜய் பாராட்டினார். //
ஒருத்தன அழிக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷகுல்
Post a Comment