Monday, January 12, 2009

அட... வந்துட்டோம்ல....

அருமை
---------------
எதுவும் இருக்கும் போது
யாருக்குமே புரிவதில்லை
அதன் அருமை
இழக்கும்போது புரியும் அளவுக்கு...

**********************

உடல் வருத்தினாலும்..
உள்ளத்தின் வலிமை
வெற்றி தரும்!
நம்பிக்கைகள் வெற்றி பெற்றால்
வாழ்வே வண்ணமயமாகும்!
நல்ல சிந்தனைகள்...
நல்ல லட்சியங்களைத் தரும்!
நல்ல லட்சியங்கள்..
நல்ல வெற்றிகளைத் தரும்!
நல்ல வெற்றிகள்...
நல்ல வாழ்வினைத் தரும்!


வலி
--------
மனசு
வலிக்கத்தான் செய்தது
மரணிக்கும் உணர்வுகளோடு
கழிந்து போன வேலையில்லாத
நாட்களில்....

***********
நினைவுகள்
----------
என்றுமே மறப்பதில்லை...
சில நேரங்களில்..
மறைக்கப்படும்..
பாசாங்காக...
என்றுமே மரணிப்பதில்லை...
சில பொழுதுகளில் மரத்துப்
போவதுண்டு...
வலியினால்...
என்றுமே நிலைப்பதில்லை
சில சந்தர்ப்பங்களில்
நிலையாமை கொண்டு..
கலையும் கனவுகள்போல
போலியாக பதிவு செய்யும்
நினைவுகள்..
**********

No comments: