
தமிழில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் நடிகை பாவனா போராடி வெற்றி கண்டு வருகிறார். இதற்காக நடிப்பிலும் பல புதுமைகளை அவர்செய்து வருகிறார்.
அறிமுகப் படமான 'சித்திரம் பேசுதடி' அவரின் நடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்ட, சமீபத்தில் வெளியான 'ஜெயம் கொண்டான்' படத்தின் மூலம் தனது நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.
ஆனாலும், அவருக்கு உள்ள வருத்தம் எல்லாம் கிசுகிசுக்கள் தான். வளர்ச்சி பிடிக்காத சில நடிகைகள் அவரைப் பற்றி தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்களாம்.
ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த கவலைகளை மறந்து வருகிறார். இதற்காக அம்மணி கவிதை எழுதவும் கற்றுக் கொண்டுவிட்டார்.
படப்பிடிப்பு இடத்தில் மட்டுமில்லாமல் வீட்டிலும் தினம் ஒரு கவிதையாவது எழுதி வைத்துவிட்டுத்தான் தூங்கச் செல்கிறார்.
ஒரு கவிதை, கவிதை எழுதுகிறது!
(மூலம் - வெப்துனியா)
No comments:
Post a Comment