Thursday, August 14, 2008

நயன்தாரா பாடலுக்கு மலேசியா தடா!

முதன்முறையாக விஷால் - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் 'சத்யம்' படம், தமிழகத்தில் தணிக்கை குழுவின் கத்தரிக்கோலுக்கு அதிக வேலை கொடுத்தது. எனினும், நயன்தாரா(ளம்) அர்ப்பணிப்புடன் நடித்த ஒரு பாடலில் சில காட்சிகள் மட்டும் கத்தரிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பாடலை முழுமையாக வெட்டிப் புறந்தள்ளியுள்ளது, மலேசிய தணிக்கைக் குழு. மலேசியாவில் வெளியாகும் எந்தப் படமும் கடுமையான தணிக்கைக்குப் பிறகே வெளியிட அனுமதிக்கப்படும்.இதனால், அங்கே வெளியாவுள்ள 'சத்யம்' படம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விஷாலுடனான நயன்தாராவின் டூயட் பாடலை முழுமையாக வெட்டியதோடு, படத்தில் வன்முறை அதிகம் என்று கூறி, பல அதிரடி காட்சிகளையும் நீக்கியிருக்கிறது, மலேசிய தணிக்கை வாரியம். கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 'சத்யம்' பிரீமியர் காட்சியில் விஷாலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
(மூலம் - வெப்துனியா)
http://tamilparks.50webs.com
http://itpark.50webs.com
http://mobilepark.50webs.காம்http://babyworld.sitesled.comhttp://collections4u.50webs.com