Saturday, May 10, 2008

தீபாவளிக்குதான் வருகிறார் 'கந்தசாமி'!

இந்த ஆண்டின் முற்பகுதியிலேயே திரைக்கு வரவிருந்த 'கந்தசாமி', தீபாவளிக்குதான் ரிலீசாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கந்தசாமியின் கால தாமதத்துக்குக் காரணம், அப்படத்தை மிக துல்லியமாகவும் நிதானமாகவும் இயக்குனர் சுசி.கணேசன் செதுக்கி வருவதேயாகும்.

விக்ரம், ஸ்ரேயா, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உள்ளிட்ட படக்குழு விரைவில் மெக்சிகோ செல்லவிருக்கிறது.

அங்கே, புகழ்பெற்ற காளைச் சண்டை நடக்கும் மைதானம் முதலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, இயக்குனர் சுசி.கணேசனும், தயாரிப்பாளர் தாணுவும் ஏற்கெனவே மெக்சிகோ சென்றுவிட்டனர்.

'தசாவதாரம்' படத்தில் இடம்பெறும் 10 அவதாரங்களையும் தெரிந்துகொண்டுவிட்ட நிலையில், 'கந்தசாமி'யின் வெவ்வேறு தோற்றங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)


for more visit
http://itpark.50webs.com http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com http://aboutindia.50webs.com
http://babyworld.sitesled.com http://mobilepark.50webs.com
http://collections4u.50webs.com
http://www.funworld.frih.net

No comments: