Wednesday, April 09, 2008
'வாசிக்கும்' பாவனா
அத்தனை வேலைகளையும் விட்டு விட்டு முழு மூச்சாக ஒரு மேட்டரில் மூழ்கிப் போயுள்ளார் பாவனா. வீட்டோடு இருந்து வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
கடந்த சில நாட்களாகவே பாவனா புதிதாக எந்த மொழிப் படத்தையும் ஒப்புக் கொள்வதில்லையாம். திருச்சூரில் உள்ள தனது வீட்டில் இருக்கிறாராம். வீட்டுக்கு வரும் போனைக் கூட அவர் எடுப்பதில்லையாம். வெளியில் எங்கும் போவதில்லையாம்.
வீட்டோடு இருந்து வயலினை முழு மூச்சாக கற்று வருகிறாராம் பாவனா. ஒரு தமிழ்ப்படத்தில் வயலின் கலைஞராக வருகிறார் பாவனா.
இதற்காகத்தான் வீட்டோடு இருந்து வயலின் கற்று வருகிறாராம் பாவனா.
சும்மா கற்றுக் கொள்ளாமல், தொழில்முறைக் கலைஞர்கள் வாசிப்பதைப் போல வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் இப்படி விழுந்து விழுந்து வயலின் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.
பாவனாவுக்கு வயலின் கற்றுத் தரும் மாஸ்டர் கோபி, பாவனாவின் வேகத்தையும், அவரது வாசிப்பில் காணப்படும் முன்னேற்றத்தையும் பார்த்து சந்தோஷமாகி விட்டாராம்.
பாவனா இப்போது தமிழைத் தவிர தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி விட்டார். ஒன்டரி படம் ஹிட் ஆனதால் பாவனாவுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் ஸ்டெடியாகி விட்டதாம். தமிழில் தற்போது பாவனா ஜெயம்கொண்டான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர மேலும் இரு தமிழ்ப் படங்களும் உள்ளனவாம்.
for more visit
http://itpark.50webs.com/
http://tamilparks.50webs.com/
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com
http://mobilepark.50webs.com http://collections4u.50webs.com
http://www.funworld.frih.net
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment