Monday, November 05, 2007

இந்தியா- பாக். இன்று மோதல்: யாருக்கு வெற்றி?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒரு நாள்போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 42 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளது. சோயிப் மாலிக் தலைமையிலான இந்த அணி இந்தியாவுடன் 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை, பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் சச்சின் தெண்டுல்கர் எடை குறைந்த பேட்டுடன் களம் இறங்க உள்ளார்.

அணியிலிருந்து திராவிட்டுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷேவாக், தன் மீதான நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். யுவராஜ்சிங், காம்பிர், உத்தப்பா ஆகியோர் ஆட்டம் மெருகேறியுள்ளது. எனினும் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் பாகிஸ்தான் அணியை சமாளிக்க முடியும்.

பாகிஸ்தானில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு வீரர்கள் ஒருவித பதற்றமும், கவலையும் அடைந்துள்ளனர். எனினும், அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான சல்மான்பட் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக ஆடி வருகிறார். மூத்த வீரர்களான முகமது யூசுப், யூனிஸ்கான் மற்றும் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் அப்ரிடி, மிஸ்பா உல்ஹக் ஆகியோர் எப்போதுமே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர்கள்தான்.

இரண்டு அணிகளுமே சமபலத்துடன் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணி வீரர்கள் விபரம்:

இந்தியா:

டோனி (கேப்டன்), யுவராஜ் சிங், ஷேவாக், கங்குலி, தெண்டுல்கர், கவுதம் காம்பிர், ராபின் உத்தப்பா, ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், பிரவீன்குமார்.

பாகிஸ்தான்:

சோயிப் மாலிக் (கேப்டன்), அப்ரிடி, சல்மான் பட், இம்ரான் நசிர், யாசிர் ஹமீத், யூனிஸ்கான், முகமத் யூசுப், மிஸ்பா உல்-ஹக், பாவட் ஆலம், கம்ரன் அக்மல், சோயிப் அக்தர், உமர் குல், ராவ் இப்திகர், சோகைல் தன்விர், அப்துல் ரக்மான்.

போட்டி அட்டவணை:

நவ. 5: முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தி

நவ. 8: 2-வது ஒரு நாள் போட்டி, மொகாலி (பகல்-இரவு)

நவ. 11: 3-வது ஒரு நாள் போட்டி, கான்பூர்

நவ. 15: 4-வது ஒரு நாள் போட்டி, குவாலியர் (பகல்-இரவு)

நவ.18: 5-வது ஒரு நாள் போட்டி, ஜெய்பூர் (பகல்-இரவு)

நவ. 22-26: முதலாவது டெஸ்ட், டெல்லி

நவ 30-டிச.4: 2-வது டெஸ்ட், கொல்கத்தா

டிச 8-12: 3-வது டெஸ்ட், பெங்களூர்

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ (Tamil Webpage with TamiL ForuM publishing free articles)
http://kanyakumari.sitesled.com/ (Kanyakumari)
http://aboutindia.50webs.com/ (India)
http://babyworld.sitesled.com/ (Only for Parents)

No comments: