Friday, January 18, 2008

ரயிலில் 90 நாளுக்கு முன்பே முன்பதிவு: பிப்.1ல் அமல்

ரயிலில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி மீண்டும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பே முன்பதிவு செய்யும் முறை தற்போது அமலில் உள்ளது. இது கடந்த ஆண்டு 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், கம்யூட்டரில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக முன்பதிவு வசதி திட்டம் மீண்டும் 60 நாளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மே மாதத்தில் முன்பதிவு செய்ய விரும்புவோர் பிப்ரவரியிலேயே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)


for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/
http://collections4u.50webs.com/ (Collections 4 U)

No comments: