Tuesday, October 30, 2007

'இளம் கணவர்கள் பலருக்கும் செக்ஸ் விழிப்புணர்வு இல்லை'

இந்தியாவில் இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் (செக்ஸ்) குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

பள்ளிகளில் செக்ஸ் கல்விக்கு அரசியல் தலைவர்கள் சிலர் உள்பட பழமைவாதிகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'விடலைப் பருவத்தினர் மற்றும் இளம் பருவத்தினர் மட்டுமின்றி, இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் குறித்த விழிப்பு உணர்வு இல்லை' என்கிறார் சமூக ஆர்வலரும், டெல்லியில் உள்ள 'தர்ஷி' என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராதிகா சந்திரமணி.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், "தர்ஷி அமைப்புக்கு செக்ஸ் தொடர்பான அடிப்படை தகவல்களைப் பெற, தினமும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. இதில், இளம் கணவர்களே அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இத்தகைய அறியாமையால் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.


தற்போது செக்ஸ் கல்வி குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் வரும் 19-ம் தேதியன்று நடைபெறவுள்ள 4-வது ஆசிய பசிபிக் மாநாட்டில், இந்தப் பிரச்சனை வலியுறுத்தப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இனப்பெருக்க உரிமை, செக்ஸ் குறித்த விழிப்பு உணர்வு, பாலின விகிதாச்சாரத்தில் வேறுபாடு, உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகள் இவற்றோடு, செக்ஸ் கல்வி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/

No comments: