Saturday, April 29, 2006

தினமலர் இதழுக்கு நன்றி

எமது வலை தமிழ் சிறுகதை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 22-04-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு

Thursday, April 27, 2006

பாட்டிகாடா, பட்டப்ணமா? (பணம் நிம்மதியை தராது)

பட்டிக்காட்டு எலி ஒன்றும், பட்டணத்து எலி ஒன்றும் நண்பர்களாயின. ஒரு நாள், பட்டிகாட்டு எலி பட்டணத்து எலியை விருந்துக்கு அழைத்து வந்தது. இருவரும் வயல்வெளியில் அமர்ந்து நிதானமாக கதிர்களையும் காய்களையும் கொரித்துத் தின்றன. விருந்து முடிந்தவுடன் பட்டணத்து எலி, இதெல்லாம் ஒரு விருந்தா, நண்பரே என்னுடன் வாருங்கள். உங்களுக்கு விருந்து என்றால் என்ன என்று நான் காட்டுகிறேன், என்று கூறியது.

இரு எலிகளும் பட்டணம் நோக்கிச் சென்றன.

பட்டணத்தில் எலி ஒரு பெரிய வீட்டின் பொந்தில் வாழ்ந்து வந்தது. அடுக்களையிலிருந்து வெண்ணெய்க்கட்டி, ரொட்டித்துண்டு, கேக்குகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தன. அந்த நேரம் பார்த்து பூனை ஒன்று அங்கு வரவே எலிகள் ஓடின. சிறுது நேரம் கழித்து மீண்டும் சாப்பிடத் துவங்கின. பூனை அங்கு வரவே ஓடின. இப்படியாக நிம்மதியின்றி சாப்பிட்டு முடித்தன.

பட்டிக்காட்டு எலி, நண்பரே எங்கள் பட்டிக்காட்டு சாப்பாடு சுமாராக இருந்தாலும் நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடுகிறோம், உங்களைப் போல் பயந்து பயந்து சாப்பிடத் தேவையில்லை என்று கூறியவாறே பட்டிக்காட்டை நோக்கிச் சென்றது.

பணம் நிம்மதியை தராது

Tuesday, April 25, 2006

ஒரு மாணவனுக்கு எண்வகை குணங்கள் தேவை

1 உரக்க சிரிக்க கூடாது
2 புலனடக்கம் கொள்ளல் வேண்டும்
3 யாருடைய ரகசியத்தையும் வெளிப்படுத்தக் கூடாது.
4 அசுத்தமாக இருக்கக்கூடாது
5 கெட்ட நடத்தை கூடாது
6 சாப்பாட்டில் அதிக ஆசை கொள்ளகூடாது
7 கோபம் காட்டக்கூடாது
8 உண்மையில் பற்றுதல் கொள்ள வேண்டும்

Saturday, April 22, 2006

கலர் கலர் வாட் கலர்..........

சிவப்பு:

சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.



பச்சை:

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.



நீலம்:

என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.



இளம் பச்சை:


எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.



ஆரஞ்ச்:

உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.



ரோஸ்:

செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.



ஊதா:

அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.



சாம்பல் நிறம்:

மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.



மஞ்சள்:

இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.



காப்பி கலர்:

நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.



கருப்பு:


இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.


இங்கே சுட்டி புதிய தகவல்களை பெருங்கள்

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.


இஞ்சியை துவையாலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்


இஞ்சி சாற்றில், தேன் கலந்து காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


கலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பித பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.


பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி வாராமல் போகும்.


இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.


இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காயச்சாறு இம் மூன்றையும் கலந்து ஒரு வேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா இருமல் குணமாகும்.

இங்கே சுட்டி புதிய தகவல்களை பெருங்கள்

Friday, April 21, 2006

முடிவில்லாதது (தேர்தல் கவிதை)

முடிவில்லாதது

சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை
இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு
எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை

செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்
ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்
"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே
சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "

"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி
இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"
ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது
தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை

ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்
அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.
கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்
வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
மாறவில்லை வாக்குறுதி மறுபடியும் தேர்தல்
நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி
மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்

தேர்தல் கவிதைகள்

வாக்குறுதி (ஹைகூ )

எலும்புத் துண்டு
ஏழை நாய்
அட இதுவும் பிளாஸ்டிக்

மன்னர்கள்

கையிலே மை
ஊரெல்லாம் பொய்
முடிவுகள் வரும் வரை.

நாங்கள் மன்னர்கள்
ஆனால்
கிரிடம் அவர்கள் தலையில்

கையிலே காசு
விரல் நுனியில் மை
விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.

திருடனா பொறுக்கியா..
தேர்ந்தெடுக்க வாய்ப்பு
ஒரே முடிவு தான்..எனக்கு

நிலம் தருவார் இலவசமாய்
பயிரிட ஆசை தான்
வருவாளா பொன்னி

பட்டினியால் எலிவேட்டை
இனி தினம் மூன்று காட்சி
காணலாம் கலர் டிவியில்

ஓட்டுக்கு நூறு ரூபாய்
வட்டியொடு வசூலிக்க
திறப்பார்கள் கள்ளுக் கடை

Wednesday, April 19, 2006

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை,

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.

சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வரவேண்டும்.

கோபம் அன்பை அழிக்கிறது, செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை, வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.

அலைகடலில் அல்லி வளராது, அன்பு இல்லாத மனதில் நட்பு மலராது.

நாளைய நன்மைக்காக இன்றைய தேவையை குறைத்துக் கொள்.

காலத்தின் மதிப்பு உனக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்கு தெரியும்.

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது, ஆனால் உயிரை கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

வேதனை பொறுத்துக் கொள்பவனே, வெற்றி பெறுவான்.

உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும், நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

நிதானமாக சிந்திக்க வேண்டும், வேகாமாக செயல்பட வேண்டும்.

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகிவிடுகிறது.

அறிவு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரம் போல

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது, உழைப்பினால் அல்ல விடா முற்ச்சியினால்.

நீ வாழ பிறர் வாழ்வை கெடுக்காதே.

பிறருடைய அன்பிற்கு பாத்திரமாவதைவிட, பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.



click here to see more