Thursday, April 27, 2006

பாட்டிகாடா, பட்டப்ணமா? (பணம் நிம்மதியை தராது)

பட்டிக்காட்டு எலி ஒன்றும், பட்டணத்து எலி ஒன்றும் நண்பர்களாயின. ஒரு நாள், பட்டிகாட்டு எலி பட்டணத்து எலியை விருந்துக்கு அழைத்து வந்தது. இருவரும் வயல்வெளியில் அமர்ந்து நிதானமாக கதிர்களையும் காய்களையும் கொரித்துத் தின்றன. விருந்து முடிந்தவுடன் பட்டணத்து எலி, இதெல்லாம் ஒரு விருந்தா, நண்பரே என்னுடன் வாருங்கள். உங்களுக்கு விருந்து என்றால் என்ன என்று நான் காட்டுகிறேன், என்று கூறியது.

இரு எலிகளும் பட்டணம் நோக்கிச் சென்றன.

பட்டணத்தில் எலி ஒரு பெரிய வீட்டின் பொந்தில் வாழ்ந்து வந்தது. அடுக்களையிலிருந்து வெண்ணெய்க்கட்டி, ரொட்டித்துண்டு, கேக்குகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தன. அந்த நேரம் பார்த்து பூனை ஒன்று அங்கு வரவே எலிகள் ஓடின. சிறுது நேரம் கழித்து மீண்டும் சாப்பிடத் துவங்கின. பூனை அங்கு வரவே ஓடின. இப்படியாக நிம்மதியின்றி சாப்பிட்டு முடித்தன.

பட்டிக்காட்டு எலி, நண்பரே எங்கள் பட்டிக்காட்டு சாப்பாடு சுமாராக இருந்தாலும் நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடுகிறோம், உங்களைப் போல் பயந்து பயந்து சாப்பிடத் தேவையில்லை என்று கூறியவாறே பட்டிக்காட்டை நோக்கிச் சென்றது.

பணம் நிம்மதியை தராது

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

Hi,
Thanks for your comment on Bible Stories. Nice to know you are from Thuckalai (Hope you are from Kanniyakumari Dist).

I am from Muttom.
read http://muttom.blogspot.com