"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"
ஒரு
சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே
இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும்
வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும்
உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும்
வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும்
எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப்
போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக்
காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி
மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து
அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய்
எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர
போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண்
பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து
கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
1 comment:
அருமையான நோக்கம் நண்பரே..
போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்..
என் மாணவர்களுக்கும் இதனை அறிவித்து அவர்களைப் பங்குகொள்ளச் செய்கிறேன் நண்பரே..
Post a Comment