புளொக் (Blog) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பதிவு
இணையத்தளங்களைப் பாவித்துவரும் ஒரு கனடா நபர் புற்றுநோயால் அவஸ்த்தைப்பட்டு
கடந்த வாரம் மரணத்தைத் தழுவினார்.
இவர் மரணமடைய முன்பதாக கடைசியாக எழுதி தனது புளொக் தளத்தில் சேர்த்த குறிப்பு இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெரக் மில்லர் என்ற 41 வயது நபரே தீவிர புற்றுநோயால் அவதியுற்று “த லாஸ்ட் போஸ்ட்” என்ற பெயரில் கடைசிக் குறிப்பை எழுதியவராவார்.
இதை இலட்சக் கணக்கான இணையப் பாவனையாளர்கள் இதுவரை வாசித்துள்ளனர்.
பிரிட்டிஷ்
கொலம்பியா பகுதியில் கடந்த பத்து வருடங்களாக புளொக் தளங்களை
மிகச்சிறப்பாகப் பாவித்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“நண்பர்களே நான் மரணித்துவிட்டேன். இது என்னுடைய மரணத்துக்கு முன்கூட்டியே நான் எழுதும் கடைசிக் குறிப்பாகும்.
புற்றுநோயின்
தண்டனையால் என்னுடைய உடல் கடைசியில் செயல் இழந்ததும் நான் ஏற்கனவே
தயாரித்து வைத்துள்ள இந்தக் குறிப்பை வெளியிடுமாறு எனது
குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
எமது வாழ்க்கையில் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டங்களை வகுக்கலாம்.
ஆனால் அவை எல்லாம் ஈடேறுமா என்பதை எம்மில் யாராலும் உறுதிகாகக் கூற முடியாது.” என்று அந்த குறிப்பு தொடருகின்றது.
இந்தக் குறிப்பை சுமார் 30 லட்சம் பேர் வாசித்திருக்கலாம் என்று அவரின் மனைவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனேடிய வலைப்பதிவரின் கடைசி வலைப்பதிவை நீங்களும் வாசிக்கப் போகின்றீர்களா? இங்கே கிளிக் பண்ணுங்கள்..

No comments:
Post a Comment