அணு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து,
அக்கறையுடன் நான்
கரை சேர துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையமால் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழிக் காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!
நன்றி http://tamilthottam.nsguru.com
1 comment:
அன்பின் எல்லைஅம்மா.பாராட்டுக்கள்.
Post a Comment