தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம்(டிராய்)இந்த கட்டண குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் தொலைபேசி சேவை வழங்குவதற்காக,இதுவரை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 37 சதவீதத்திற்கும் அதிகமாக வரி கட்டி வந்தது. இந்த வரியை இனி கட்ட வேண்டாம் என டிராய் இன்று அறிவித்துள்ளது.இந்த வரியை கட்டாததால்,நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படும் என டிராய் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த லாபத்தின் மூலம், தொலைபேசி கட்டணங்களை தற்போது இருப்பதை விட மேலும் குறைக்க முடியும் என்று டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.அதிலும்,குறிப்பாக ஐஎஸ்டி கால் கட்டணங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கட்டண குறைப்புகள் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.
(மூலம் - வெப்துனியா)
visit http://tamilparks.50webs.com for more
1 comment:
oh welcome... now its 1 rupee so can it decrease to 50 paise
Post a Comment