Saturday, May 06, 2006

அஸ்பிலியா!

சிம்வன்சீ குரங்குகள் கிருமிக் கொல்லிச் சத்து நிறைந்திருக்கிற ஒரு தாவரத்தின் இலையைத் தேடிப் பிடித்துத் தின்னும் விஶயத்தைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்

கனிந்த பழங்கள், இலைகள், விதைகள் என்று பல வகையான பொருட்களை சிம்பன்சீக்கள் சாப்பிடுகின்றன. எப்போதாவது புதிதாகப் பிடித்த அசைவத்தையும் சாப்பிடுவதுண்டு. அவற்றின் உணவு விருப்பம் பலவகையனது. ஓர் ஆண்டில் அவை கிட்டத்தட்ட 300 வகையான தாவரங்களை ருசி பார்ப்பதுண்டு.

ஆனால், டெய்ஸி குடும்பத்தைச் சேர்ந்த அஸ்பிலியா என்ற இனத்தின் மூன்று வகைச் செடிகளிடம் மிகவும் அக்கறை காட்டுகின்றன. அச்செடிகளிலிருந்து அவை ஒரே ஒரு இலையைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அதை அப்படியே விழுங்கி விடுகின்றன.

இது ஏன் என்ற மர்மத்தை ரோட்ரிக்ஸ் என்பவரின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு அந்த இலைகளை ஆராய்ந்தது. ரசாயனங்கள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது.

பாரம்பரியமன பல ஆப்பிரிக்க மூலிகை மருந்துகளிலும், அஸ்பிலியா இனத்தைச் சேர்ந்த செடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு இனச் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிற மருந்து இடுப்பு வாதம், இடுப்பு நரம்பு வலி, நரம்புத் தலைவலி போன்ற வியாதிகளைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு செடியின் இலைகள் புண்கள், வயிற்றுக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றைத் தீர்க்க உதவுகிறது. அஸ்பிலியாவில், தயாருப்ரைன் ஏ என்னும் கிருமிக் கொல்லிச் சத்து உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களுக்கு வருகிற வியாதிகள்தான் சிம்பன்சீக்களுக்கும் வருகின்றன. எனவே, அவை தமது நோய்க்கு மருந்தாக அஸ்பிலியா இலைகளை சாப்பிடுகின்றன. என்ன பெரிய அறிவு ............இந்த சிம்பன்சீகளுக்கு இல்ல..........

No comments: