செல்போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவதால் விபத்து ஏற்படுவது, ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழப்பது என செல்போனால் ஏற்படும் ஆபத்துக்கள் நிறைய உள்ளன.
இது மட்டும் அல்லாமல், செல்போன் கதிர்வீச்சுக்களால் நிறைய ஆபத்துகள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், செல்போன் கதிர் வீச்சு காரணமாக புற்று நோய், காது நோய், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் வரும் அல்சீமர், பார்க்கின்சன் போன்ற நோய்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மூளை நரம்புகளை பாதிக்கும் அளவிற்கு செல்போன் கதிர்வீச்சுகள் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
செல்போன் பயன்படுத்தாமல் தவிர்க்க முடியாது. ஆனால் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.
நன்றி, வெப்துனியா
No comments:
Post a Comment