அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
No comments:
Post a Comment