செல்பேசியில் பேசியபடியே தண்டவாளத்தை அல்லது சாலையைக் கடந்து சென்றவர்கள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர்.
ஆனால் இங்கே ஒரு மூதாட்டி செல்பேசி அழைப்பினால் உயிர் பிழைத்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியமான விஷயம்தானே.
லண்டனில் வாழ்ந்து வரும் சூ எல்லிஸ் என்ற முதாட்டி, சற்று ஓய்வு நேரத்தில் ஒரு சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் தொலைபேசி ஒலிக்க, அதை எடுக்க எழுந்துச் சென்று போனை எடுத்திருக்கிறார்.
போனை எடுத்து பேசுவதற்குள், வீடே அதிரும்படி ஒரு சப்தம் எழுந்தது. என்னவென்று பார்க்க, வீட்டின் சுவரை இடித்துக் கொண்டு ஒரு கார் உள்ளே வந்து சோபாவையும் நசுக்கிவிட்டிருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர், தனது காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்து, கூடுதலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட, பிறகென்ன.. சோபாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளது கார்.
வீடே இடிந்தாலும், நூலிழையில் உயிர் தப்பியதை நினைத்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தார் சூ எல்லிஸ். பிறகு என்ன.. தன்னை தொலைபேசியில் அழைத்து உயிரைக் காப்பாற்றிய தனது சகோதரிக்கு நன்றி மழையாகப் பொழிந்துள்ளார்.
இதுதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியின் பொருளோ.
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
Thanks to Webdunia
No comments:
Post a Comment