Tuesday, June 26, 2007

ரஜினியின் வெற்றிக்கு அவரது அடக்கமே காரணம் : கருணாநிதி

ரஜினிகாந்தின் வெற்றிக்கு அவரது அடக்கக் குணமே காரணம் என்று 'சந்திரமுகி' திரைப்பட வெற்றிவிழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் 804-வது நாள் வெற்றிவிழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, "இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பல உள்ளங்களில் படமாக பொதிந்திருக்கின்ற நிறை மனிதர், ரஜினி" என்றார்.

ரஜினிகாந்த் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், "ரஜினிகாந்தின் வெற்றிக்கு நடிப்பு, கலை ஆர்வம், ஆற்றல், உழைப்பு மட்டுமின்றி அவரது தன்னடக்கக் குணமே காரணம்" என்று கூறினார்.

மேலும், மராட்டிய மாவீரன் சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்தின் 'சிவாஜி' (திரைப்படம்) ஆகிய மூன்று பெயர்களும் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் செவிடர்களாக இந்தால்தால்தான் சாதிக்க முடியும்; இல்லையேல் வாழ்க்கை வீணாகிவிடும் என்றும், இவற்றை சிவாஜி கணேசன், என்.டி.ஆர், ராஜ்குமார், முதல்வர் கருணாநிதி ஆகியோரிடம் இருந்து தாம் கற்றுக்கொண்டதாக கூறினார்.

இயக்குனர் பி.வாசு, கமலஹாசன், பிரபு, ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசிய இவ்விழாவில், ரஜினிகாந்துக்கு சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட வீரவாளை கருணாநிதி வழங்கினார்.

'சந்திரமுகி'யின் சாதனை தென்னிந்தியாவில் இதுவரை அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டிருந்தது தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம். 1944-ல் வெளிவந்த இப்படம் 784 நாட்கள் ஓடியது.

தற்போது இந்தச் சாதனையை 804 நாட்கள் ஓடிய 'சந்திரமுகி' முறியடித்து, தென்னிந்தியாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2005-ல் வெளிவந்த இப்படம், 'மணிச்சித்திரதாழி' என்ற மளையாள மொழித் திரைப்படத்தின் தழுவல்.

(மூலம் - வெப்துனியா)


for more visit

http://www.uginbruce.co.nr/

http://tamilparks.50webs.com/

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/

http://babyworld.sitesled.com/

No comments: