Friday, May 05, 2006

குரங்கு குணம் மாறுது!

ஒற்றுமைக்கு உதாரணமாக பரவைகளில் காக்கையை குறிப்பிடுகிறேம். விலங்குகளில் குரங்குகளை குறிப்பிடலாம். எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லும். மேலும் தன் குழந்தைகளை வயிற்றில் கட்டிக் கொண்டே சுற்றித் திரியும். அதே நேரத்தில் தன்னுடைய இனத்தாருடன் பாசத்துடன் பழகும் தன்மைக் கொண்டது குரங்குகள். இது அனைவரும் அறிந்த ஒன்று.

குரங்குகளைவிட "சிம்பன்சி" என அழைக்கப்படும் மனித குரங்குகள் தன்னுடைய இனத்துடன் அதிக பாசம் கொண்டது. கூட்டமாகவே சாப்பிடும். ஒன்றாகவே வாழும். ஆனால் இந்த குரங்குகளைப் பிடித்து வைத்தால் முன்பு போல் ஒன்றோடொன்று அன்புடன் இருக்குமா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது.

இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க இருபத்து எட்டு மனிதக் குரங்குகளை பிடித்து ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே கூண்டில் அடைத்தனர். அந்தக் காலம் முடிவடைந்த பின் குரங்குகளிடம் சோதனை நடத்தினர்.

முதலில் குரங்குகளுக்கு சாப்பாடு வைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு குரங்குகளும் தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும் தின்று விட்டு மற்ற குரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஆனால் மனிதக் குரங்குகள் உண்மையில் சாப்பாடு கிடைத்தால் தன்னுடைய இன குரங்குகளுக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதே போல வேறு சில சோதனைகளும் குரங்குகளுக்கு வைக்கப்பட்டன.

இந்த சோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறினார்கள்... தெரியுமா?
கூண்டில் அடைபட்ட குரங்குகளுக்கு மனித நேயம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல சோதனைகள் நடத்தினார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் தன்னுடைய தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கோள்ள ஆசைபட்டது. மற்றக் குரங்குகளை பற்றி அது சிறிதும் கவலைப்பட வில்லை.

ஆனால் இந்த சோதனையை காட்டில் உள்ள குரங்குகளுக்கு செய்து பார்த்த போது அவைகள் அனைத்தும் ஒற்றுமையோடு செயல்பட்டன. மேலும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் செயல்பாட்டுக்கும் காட்டில் வாழும் குரங்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த ஆய்வின் முடிவை வைத்து பார்க்கும் போது கூட்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் மனித நேயம் பெரிதும் குறைந்துவிட்டது என எண்ணத் தோன்றுகிறது, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தக் குரங்குகளின் மனித நேய ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

2 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மிருகங்களை கூண்டில் பிடித்து ஆராய்ச்சி என்ற பெயரில் கொடுமைப் படுத்தும் விஞ்ஞானிகளுக்கு மனித நேயம் உள்ளதா என்பதை யாரும் பரிசோதிக்க மாட்டார்களா? மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் முதலில் உண்டானது பின்பு மற்ற மனிதனை விட தான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் உண்டானது அதன் விளைவே இன்று மனிதன் மற்றொரு மனிதனின் உயிருக்கு கொஞ்சம் கூட மதிப்பு தராமல் மதத்தின் பெயரால் படு கொலைகளை நிகழ்த்தும் நிலை.

Anonymous said...

I cannot understand how can "Manitha" neyam be expected from monkeys..