Tuesday, August 23, 2011

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது


அழகே உன் தூக்கமும் அழகு தான்…! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

மேலும் படிக்க இங்கு சுட்டுங்கள்

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு பதிவு நண்பா!

முன் போல தமிழ்த்தோட்டத்தின் பக்கம் வர முடியவில்லை நண்பா.

அவ்வப்போது வந்து தலைகாட்டிச் செல்வதோடு சரி.

என்றும் தமிழ்த்தோட்டத்தை மறவேன்.

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி..

தமிழ்த்தோட்டம் said...

முனைவர் இரா. குணசீலன் அவர்களே, உங்கள் வேலை பளுவை என்னால் உணரமுடிகிறது.. உங்களுக்கு நேரம் கிடைக்கையில் நறுமண பூக்களுடன் தோடத்தில் வாருங்கள்.. தோட்டத்திற்காக சில மணித்துளிகள் செலவிடுங்களேன்