Tuesday, January 22, 2008

தனுசின் புதிய கவலை

பொங்கல் ரிலீஸ் படங்களையும் மீறி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது 'பொல்லாதவன்'. ஆனாலும் பதற்றத்தில் இருக்கிறார் தனுஷ். காரணம், தற்போது சொல்லப்படும் கதைகள் அனைத்துமே அடிதடி கதைகள்தான்.

ஆனால், பொங்கல் ரிலீஸ் ஆக்சன் படங்களில் எதுவுமே வெற்றி பெறுகிறமாதிரி தெரியவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் 'யாரடி நீ மோகினி' முழுக்க முழுக்க குடும்பக் கதை.

இது வெற்றி பெறுமா அல்லது கவிழ்த்துவிடுமா என்பது தான் தனுசின் கவலைக்கு காரணம். இதன் ரிசல்டை வைத்தே, அடுத்தது ஆக்சனா அல்லது குடும்பக் கதையா என்பதை முடிவு செய்வாராம் தனுஷ்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center for Computer users) http://collections4u.50webs.com/
http://tamilparks.50webs.com/ (Publishing your tamil articles freely in webpage)
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/

Monday, January 21, 2008

புலி வருது


மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை காட்சி படுத்தி சொல்வதில் தடுமாறியிருக்கிறார்கள்.

அம்மா-அப்பா செல்லமான ரமேஷ், தனது பெற்றொரின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இந்நிலையில் நண்பன் திருமணத்துக்காக பஸ்சில் செல்லும்போது ஒரு கனவு.

ஒரு பெண்ணின் திருமணம் பாதியில் நிற்க, அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முன்வருகிறார் ரமேஷ். அவசரமாக தாலி வாங்க செல்லும் நண்பன் கருணாஸ், லாரியில் அடிபட்டு சாகிறார். அந்த பெண்ணும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார்.

இதுதவிர, தனது தந்தை மணிவண்ணன் திடீர் மாரடைப்பு வந்து மரணம் அடைவது போன்று மற்றொரு கனவு.

கனவு தெளிந்து, குழப்பத்துடன் கல்யாண வீட்டுக்கு செல்லும் மேலும் ரமேஷுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. தான் கனவில் கண்ட மல்லிகா கபூரே, கல்யாண வீட்டில் மணமகளின் தோழியாக நிற்கிறார். இருவரும் பார்வையை பரிமாறிகொள்ள காதல் மலர்கிறது.

இவர்களது காதல் ஜெயித்ததா, ரமேஷ் கண்ட கனவு பலித்ததா என்பதை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறார்கள்.


அப்பாவியான ரமேஷ் காதலை வெறுக்கும்போதும், பின்னர் பயந்து பயந்து காதலில் விழும்போது நகைச்சுவையில் குலுங்க வைக்கிறார். காதலையும் விட முடியாமல் கனவையும் மறக்க முடியாமல் அவர் தவிப்பது கலகலப்பு. இந்த படத்தின் மூலம் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார் ரமேஷ்.

அழகு பதுமையாக வரும் மல்லிகாவோ, தனது வருங்காலம் பற்றிய கனவு காணுகிறார். தனது கனவில் வருவது போலவே இனிமையான வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்த படத்தில் மூலம் காமெடியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கருணாஸ். நண்பன் கண்ட கனவுக்காக இவர் அல்லாடுவது வெடி சிரிப்பு.

மணிவண்ணன், சரண்யா உள்ளிட்ட பலரும் தங்களது பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். ராஜசேகரன் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

ஒரு புதிய கதை களத்தை தேர்வு செய்து, கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜி.வி குமார்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center for computer users)
http://tamilparks.50webs.com/ (Tamil World with Tamil Forum)
http://kanyakumari.sitesled.com/ (Visit to Kanyakumari)
http://aboutindia.50webs.com/ (About India)
http://babyworld.sitesled.com/ (Only for parents)

http://collections4u.50webs.com/ (Collections 4 U)

Friday, January 18, 2008

ரயிலில் 90 நாளுக்கு முன்பே முன்பதிவு: பிப்.1ல் அமல்

ரயிலில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி மீண்டும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பே முன்பதிவு செய்யும் முறை தற்போது அமலில் உள்ளது. இது கடந்த ஆண்டு 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், கம்யூட்டரில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக முன்பதிவு வசதி திட்டம் மீண்டும் 60 நாளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மே மாதத்தில் முன்பதிவு செய்ய விரும்புவோர் பிப்ரவரியிலேயே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)


for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/
http://collections4u.50webs.com/ (Collections 4 U)