Thursday, March 20, 2008

சேரனுக்கு 'ஆட்டோகிராஃப்' போட மறுத்த கோபிகா!

சேரனின் 'ஆட்டோகிராஃப்' மூலம் தமிழ் சினிமாவில் வலம் வந்த கோபிகா, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளார். தற்போது 'பொக்கிஷம்' படத்தில் நடித்துக்கொண்டு, இயக்கி வரும் சேரன், அதைத் தொடர்ந்து 'ஆட்டோகிராஃப் - பாகம் 2'-ஐ உருவாக்கவுள்ளார்.
பொக்கிஷத்தில் பிஸியாக இருந்தாலும், ஆட்டோகிராஃப் பாகம் இரண்டுக்கான வேலைகளிலும் தீவிரமாக இயங்கிவரும் சேரனுக்கு, நடிகை கோபிகா ஓர் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்த பாகம் இரண்டில், முதல் பாகத்தில் நடித்தவர்களையே நடிக்கவைக்க திட்டமிட்டிருந்தார் சேரன். மல்லிகா, சினேகா, கனிகா என அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், 'கால்ஷீட் இல்லை' என்று கைவிரித்துவிட்டார் கோபிகா.
ஆயினும், கோபிகா இல்லாமலேயே படத்தை சிறப்பாக எடுத்து முடிப்பேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் சேரன். 'ஆட்டோகிராஃப் பாகம் 2'-ஐ தயாரிப்பது ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது!
(மூலம் - வெப்துனியா)

for more visit


No comments: