Friday, August 10, 2007

சென்செக்ஸ் புள்ளிகள் மீண்டும் கடும் வீழ்ச்சி

http://itpark.50webs.com/ updated (Tips and Tricks Center - Windows 98, 2000, XP etc..)

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், சென்செக்ஸ் 509 புள்ளிகள் அளவிற்கு கடும் வீழ்ச்சியடைந்து 15,000 க்கும் கீழே சென்றது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ,மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு முனனணி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த முதலீட்டாளர்கள் அவற்றை விற்க தொடங்கினர்.

இதனால் சென்செக்ஸ் புள்ளிகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு, 509 புள்ளிகள் அளவிற்கு சரிந்து 14,590 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செகஸ் 207 புள்ளிகள் சரிந்திருந்த நிலையில், இன்று காலை அது மேலும் 509 புள்ளிகள் அளவிற்கு சரிந்தது, பங்குச் சந்தை வர்த்தகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதே போன்று தேசியப் பங்குச் சந்தையிலும் நிப்டி 164 புள்ளிகள் அளவிற்கு சரிந்து 4,239 ஆக காணப்பட்டது.


(மூலம் - வெப்துனியா)


for more visit
http://tamilparks.50webs.com/ (Tamil Site updated)

http://kanyakumari.sitesled.com/ (Tourism)

http://aboutindia.50webs.com/ (To ALL)

http://babyworld.sitesled.com/ (Only Parents)

1 comment:

Anonymous said...

oh welcome for the news