Monday, July 10, 2006

தோல்வியைத் தவிர்ப்பதற்கு வழிகள்

அக்கறையோடு செய்யாத எந்தச் செயலும் வெற்றியைத் தருவதில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எந்தச் செயலானாலும் அதில் பூரணமான அக்கறையோடு ஈடுபடும்போது அது வெற்றியையே தவறாமல் தரும்.

மனச் சோர்வுடனோ, உடலில் களைப்புடனோ, அக்கறையற்ற தன்மையுடனோ ஒன்றைச் செய்வதைவிடச் செய்யாமல் ஒத்திப் போதுவதே நல்லது.

தன்னை உணர்ந்து, தான் செய்யப் போகும் பணியை உணர்ந்து, செய்கின்ற காலத்தையும் இடத்தையும் சூழ்நிலையையும் பொருத்தமாகத் தேர்ந்து எதையும் செய்வதற்குத் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் ஒருமித்த மனத்துடன், வெற்றியில் முழு நம்பிக்கையுடனும் தொடர வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் முயற்சி சிறிதானாலும் பெரிதானாலும் வெற்றியையே காண்பார்கள். தோல்வியைக் காணவே மாட்டார்கள்.

மிகமிகச் சாதாரணமானவர்கள் கூட இந்த உறுதியான தன்மைக்ளால், உலகமே வியக்கும் பல காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். இவர்களுடைய மன உறுதியை அனைவரும் பெற முயல வேண்டும்.

No comments: