Tuesday, August 30, 2011

நீங்கள் ஏசியிலேயே இருப்பவரா?

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

Tuesday, August 23, 2011

நிம்மதியான தூக்கம் பெண்களை அழகாக்கிறது


அழகே உன் தூக்கமும் அழகு தான்…! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

மேலும் படிக்க இங்கு சுட்டுங்கள்