Tuesday, May 24, 2011

இலட்சக்கணக்கானோரால் வாசிக்கப்பட்ட கனேடியப் புற்று நோயாளியின் கடைசி வலைப் பதிவு (Blog)!

புளொக் (Blog) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைப்பதிவு
இணையத்தளங்களைப் பாவித்துவரும் ஒரு கனடா நபர் புற்றுநோயால் அவஸ்த்தைப்பட்டு
கடந்த வாரம் மரணத்தைத் தழுவினார்.





இவர் மரணமடைய முன்பதாக கடைசியாக எழுதி தனது புளொக் தளத்தில் சேர்த்த குறிப்பு இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெரக் மில்லர் என்ற 41 வயது நபரே தீவிர புற்றுநோயால் அவதியுற்று “த லாஸ்ட் போஸ்ட்” என்ற பெயரில் கடைசிக் குறிப்பை எழுதியவராவார்.

இதை இலட்சக் கணக்கான இணையப் பாவனையாளர்கள் இதுவரை வாசித்துள்ளனர்.

பிரிட்டிஷ்
கொலம்பியா பகுதியில் கடந்த பத்து வருடங்களாக புளொக் தளங்களை
மிகச்சிறப்பாகப் பாவித்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“நண்பர்களே நான் மரணித்துவிட்டேன். இது என்னுடைய மரணத்துக்கு முன்கூட்டியே நான் எழுதும் கடைசிக் குறிப்பாகும்.

புற்றுநோயின்
தண்டனையால் என்னுடைய உடல் கடைசியில் செயல் இழந்ததும் நான் ஏற்கனவே
தயாரித்து வைத்துள்ள இந்தக் குறிப்பை வெளியிடுமாறு எனது
குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.



எமது வாழ்க்கையில் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டங்களை வகுக்கலாம்.

ஆனால் அவை எல்லாம் ஈடேறுமா என்பதை எம்மில் யாராலும் உறுதிகாகக் கூற முடியாது.” என்று அந்த குறிப்பு தொடருகின்றது.

இந்தக் குறிப்பை சுமார் 30 லட்சம் பேர் வாசித்திருக்கலாம் என்று அவரின் மனைவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனேடிய வலைப்பதிவரின் கடைசி வலைப்பதிவை நீங்களும் வாசிக்கப் போகின்றீர்களா?
இங்கே கிளிக் பண்ணுங்கள்..

Thursday, May 12, 2011

லினக்ஸ் மிண்ட் 11 பற்றிய தகவல்கள்.....



உபுண்டு 11.04 கடந்த மாதம் 28/04/2011 அன்று RELEASE ஆனது, அடுத்தது என்ன நமது லினக்ஸ் மிண்ட் 11 தான்.இதுவும் உபுண்டு 11.04‍ஐ போலதான் அட்டகாசமாக இருக்கும்.
இதன் RC-வெளியீடு இம்மாதம் 15‍-ஆம் தேதியிலும் இறுதி வெளியீடு இம்மாதம் கடைசி‍ 30‍-ஆம் தேதியிலும் வெளியிடப்படும்.

இதன் DESKTOP:

Gnome 2.32 DESKTOP.

Software Selection:

OpenOffice.org-க்கு பதிலாக Libre Office.
Rhythmbox audio player-க்கு பதிலாக Banshee audio player.
F-Spot-க்கு பதிலாக gThumb

DESKTOP SELECTION:

GNOME,KDE,XFCE...ect...

இன்னும் கற்றுக்கொள்ளனுமா வாங்க தமிழ்த்தோட்டம்

Monday, May 09, 2011

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஜூன் 22ம் தேதி இந்தத் தேர்வுகள் தொடங்கி, ஜூலை  2ம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களைப் போலவே, தோல்வி அடைந்தவர்களும் இந்த கல்வியாண்டிலேயே தங்களது மேல் படிப்பைத் தொடருவதற்கு வசதியாக இந்த சிறப்புத் துணைத் தேர்வை தேர்வுகள் துறை நடத்துகிறது.

தமிழ்த்தோட்டம்