Thursday, April 28, 2011

சிபிஐ ரெய்டு

ஸ்ரீசாந்த் வீட்டில் சிபிஐ ரெய்டு :-

வீட்டில் ஒரு புக் கண்டுபிடிக்கபட்டது, புத்தகத்தின் பெயர் " 10 நாளில் பௌலிங் போடுவது எப்படி "

எழுதியவர் - நெஹ்ரா



வாங்க நம்ம தமிழ்த்தோட்டத்துக்கு இன்னும் பல தகவல்கள் 

Tuesday, April 26, 2011

இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?



ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,

எப்.டி.பீ க்ளையண்ட் கொண்டு டெக்ஸ்ட், படங்கள். வீடியோ, இசை என எவ்வகையான பைல்களையும் அப்லோட் செய்யலாம். இணைய தளமொன்றிற்கு பைல் ஒன்றை அப்லோட் செய்வதற்கு முன்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அல்லது உங்கள் இணைய தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடமிருந்து பின்வரும் விவரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.

நன்றி தமிழ்த்தோட்டம்

மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு சுட்டவும்