Monday, June 21, 2010

தமிழ் செம்மொழி மாநாடு பாடல்

Pirappokkum.mp3
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

Tuesday, June 15, 2010

ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....?

* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு க0ளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

Thanks Tamilkuringi

Wednesday, June 02, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

ரசிகர்களின் ஆரோக்கியமான ரசனையை வளர்த்துக் கொள்வது போல படங்கள் எடுப்பது ஒருவகை. மலிவான ரசனையை நம்பி அதற்கு தீனி போட்டு கல்லாவை நிரப்ப முயற்சிப்பது இன்னொரு வகை. ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இப்படிதான் படம் எடுக்கப் போறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் பச்சை வசனங்கள், நீல காட்சிகள், மஞ்சள் அவயங்கள் என கலர் கலராக நாறடிக்கிறார்கள். சத்யராஜும், சரண்யாவும் கணவன் மனைவி. ஆனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் ஒருவேளை கஞ்சி குடிக்ககூட விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார் சத்யரா‌ஜ். இதற்கொரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது.

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்