Wednesday, May 26, 2010

வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் மா‌த்‌திரைக‌ள்!

ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான உணவு முறையை ‌பி‌ன்ப‌ற்றுபவ‌ர்களு‌க்கு நோ‌ய் வருவதே‌க் குறைவுதா‌ன். வ‌ந்தாலு‌ம் எ‌ளி‌தி‌ல் குணமா‌கி‌விடு‌ம்.

உணவு முறை‌யி‌ல் ஒரு ‌சீர‌ற்ற‌த் த‌ன்மையை‌ கடை‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் ப‌ல்வேறு நோ‌ய்களு‌ம் வரு‌கி‌ன்றன. நோ‌ய் வ‌ந்த ‌பிறகு‌ம் அவ‌ர்களது உணவு முறை‌யி‌ல் உ‌ள்ள குறைபாடுக‌ள் ப‌ல்வேற ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது.

ஏதேனு‌ம் உட‌ல் உபாதை‌க்கு மரு‌த்துவ‌ர் மா‌த்‌திரை எழு‌தி‌க் கொடு‌ப்‌பி‌ன், ‌சில‌ர் அதனை காலை‌யி‌ல் எழு‌ந்து டி, கா‌பி அ‌ல்லது பா‌ல் குடி‌த்து‌வி‌ட்டு மா‌‌த்‌திரையை‌ப் போ‌ட்டு‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல் உட‌‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் ‌தீ‌ர்வத‌ற்கு ப‌திலாக, ம‌ற்று‌ம் பல நோ‌ய்களை நாமே வரவழை‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம் எ‌ன்பதை பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

சா‌ப்பா‌ட்டி‌ற்கு‌ப் ‌பிறகு போட‌ப்படு‌ம் மா‌த்‌திரைகளை, வெறு‌ம் ‌டி, கா‌பி குடி‌த்து ‌வி‌ட்டு‌ப் போடுவதா‌ல், மா‌த்‌திரை‌யி‌ன் ‌திறனை உட‌ல் சமா‌ளி‌க்க முடியாம‌ல் போ‌ய்‌விடு‌ம். எனவே, மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனை‌ப் படி உணவை சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு மா‌த்‌திரை போடுவது ந‌ல்லது.

நன்றி: வெப்துனியா.


மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

Saturday, May 22, 2010

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

நன்றி webdunia

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

Friday, May 21, 2010

காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, "தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.

"என்ன நடந்தது" என விசாரித்தேன். "வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள்.

"காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன். "நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.
உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள் காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை. காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள்.

பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும்.
இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

காது குடையலாமா?

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான் எப்போது பார்த்தாலும் காதுக்குள் ஏதோ ‘குறுகுறு’வென்று இருந்து கொண்டே இருக்கிறது.

அந்தச் சூழலில் எதையாவது எடுத்துக் குடையலாமா? குத்திக் கொள்ளலாமா? என்கிற அளவுக்கு அரிப்பும், வலியும் தாங்க முடியவில்லை.நானும் தினம் ‘பட்ஸ்’ எல்லாம் போட்டு க்ளீன் பண்ணிப் பார்த்து விட்டேன். ஆனாலும், என் காதுப் பிரச்னை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நான் என்ன செய்வது டாக்டர்? ஏன் அப்படி ஆகிறது

டாக்டர் ரவி ராமலிங்கம் (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)

‘‘நீங்கள் உங்கள் பிரச்னைக்குக் காரணம். இதுவரை காதுக்குள் விட்டுக் குடைந்த ‘பட்ஸ்’தான் உங்களின் எதிரி. என்ன ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறதா?

உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான். உங்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘ஒடிடிஸ்எக்ஸ்டெர்னா’ எனப்படும் காது சம்பந்தப்பட்ட நோய் இது வருவதற்குக் காரணமே காதுக்குள் விரல், சாவி, குச்சியை விட்டு நோண்டுவது, ஊக்கை விட்டு குடாய்வது, இறகை உள்ளே விட்டுக் குடைந்து சுகம் காண்பது. அது மட்டுமில்லாமல் காதை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ‘பட்ஸ்’ஸை உள்ளே விட்டுக் குடைவது ஆகியக் காரணங்களால்தான் இந்நோய் ஏற்படுகிறது. அதுவும் உலக அளவில் இந்தியாதான் இந்நோயில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறதாம். செவிப்பாதையின் மெல்லிய தோலில் வலி, வீக்கம், சிராய்ப்பு என்று சிறிய புண்களோடு ஆரம்பிக்கும் இந்நோய் முற்றும்போது காது கேட்கும் திறனையே நிறுத்தி விடும். அதோடு, நீச்சல் அடிக்கும்போது தண்ணீர் காதுக்குள் புகுந்திட இன்பெக்ஷன் ஏற்படக்கூடும். இதற்கு ‘ஸ்விம்மர்ஸ் இயர்’ என்று பெயர். காதைப் பொறுத்தவரையில் எந்த கிரிமியும் உள்ளே புகாது. அதற்கு பாதுகாக்கத்தான் (கீணீஜ்) வாக்ஸ் எனப்படும் மெழுகு போன்ற திரவம் இருக்கும். காதுக்குள் நுழையும் ஒலிக் காற்று என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செவிப்பாதையில் பாதுகாவலனாக விளங்குகிறது. காதினுள் புகும் நீர், தூசு போன்றவைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு வெளியேற்றும் தன்மை கொண்டது. அதைப் பலர் ‘அழுக்கு’ என்று நினைத்து ‘பட்ஸை’க் கொண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இதனால் காதுப் பிரச்னைகள் இன்னும் அதிகரிக்கிறது. எனவே காதுக்குள் எதையும் விட்டுக் குடையாமல் இருந்தாலே பிரச்னை வராது. பிரச்னையின் ஆரம்பக்கட்டத்திலேயே சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் எனக்குணப்படுத்திவிடலாம். ஆனால், அப்படியே விட்டு விட்டால் செவிப்பறையில் ஓட்டை விழுந்து காது கேட்காமல் போய் விடும். சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு பெரும்பாலும் இப்பிரச்னை வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


நன்றி தமிழ் குடும்பம்

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

Wednesday, May 19, 2010

செ‌ல்போனா‌ல் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து

செ‌ல்போ‌ன் பே‌சி‌‌க் கொ‌ண்டு வ‌‌ண்டி ஓ‌ட்டுவதா‌ல் ‌விப‌த்து ஏ‌ற்ப‌டுவது, ர‌யி‌ல் த‌ண்டவாள‌ங்களைக‌் கட‌க்கு‌ம் போது ர‌யி‌ல் மோ‌தி உ‌‌யி‌ரிழ‌ப்பது எ‌ன செ‌ல்போ‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து‌க்க‌ள் ‌நிறைய உ‌ள்ளன.

இ‌து ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல், செ‌ல்போ‌ன் க‌தி‌ர்‌வீ‌ச்சு‌க்களா‌ல் ‌நிறைய ஆப‌த்துக‌ள் ஏ‌ற்படுவதாக பல ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.

உலக‌ம் முழுவது‌ம் சுமா‌ர் 500 கோடி‌க்கு‌ம் அ‌திகமானோ‌ர் செ‌ல்போ‌ன்களை‌ப் பய‌ன்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த எ‌ண்‌ணி‌க்கை ஒ‌வ்வொரு ‌ஆ‌ண்டு‌ம் அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், செ‌ல்போ‌ன் க‌தி‌ர் ‌வீ‌ச்சு காரணமாக பு‌ற்று நோ‌ய், காது நோ‌ய், நர‌ம்பு ம‌ண்டல‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதா‌ல் வரு‌ம் அ‌ல்‌சீம‌ர், பா‌ர்‌க்‌கி‌ன்ச‌ன் போ‌ன்ற நோ‌ய்களு‌ம் ஏ‌ற்படு‌வதாக கூற‌ப்படு‌கிறது.

மூளை நர‌ம்புகளை பா‌தி‌க்கு‌ம் அள‌வி‌ற்கு செ‌ல்போ‌ன் க‌தி‌ர்‌வீ‌ச்சுக‌ள் இரு‌ப்பதாக ஆரா‌ய்‌‌ச்‌சி முடிவுக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

செ‌ல்போ‌ன் பய‌ன்படு‌த்தாம‌ல் த‌வி‌ர்‌க்க முடியாது. ஆனா‌ல் பய‌ன்பா‌ட்டை‌க் குறை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.






நன்றி, வெப்துனியா

Tuesday, May 18, 2010

உழைப்பே வெற்றிக்கு மூலதனம் என்பதற்கு உதாரணம் நமது தமிழ்த்தோட்டம் நண்பர் வித்யாசாகர்

இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.

Tuesday, May 11, 2010

உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்

சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்

உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.

வருண்ட சருமம் உள்ளவர்கள்:

அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி:

ஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.

இளமையில் முதுமை:

இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

மீன்:

மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

முகப்பருக்களை தடுக்க:

சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.

கேரட்:

இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

டல் லடிக்கும் முகம்:

சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கனும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.


 மேலும் படிக்க இங்கு சுட்டவும்