Thursday, October 28, 2010

மின்னல் வேகத்தில் தமிழ்த்தோட்டம் 5000 பதிவுகளை கடந்தது

வணக்கம்

தமிழ்த்தோட்டம் உறவுகளே, நமது தோட்டத்தில் 5000 பூக்கள் பூத்து குலுங்க, செழித்து வளர, வாடாமல் இருக்கு தண்ணீர் பாச்சி உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி

http://tamilthottam.nsguru.com/-f10/5000----t1330.htm

இதற்கு அரும்பாடுபடும் எம் தமிழ்த்தோட்டம் உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றியை மீண்டும் காணிக்கையாக்கிகொள்ளுகிறேன்...

தொடர்ந்து உங்கள் பூக்களை தோட்டத்தில் பூக்க விட ுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுக படுத்துங்கள்.


என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilthottam.nsguru.com

Tuesday, October 26, 2010

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் (tamilparks.nsguru.com) முகவரி மாற்றம் tamilthottam.nsguru.com

தமிழ்த்தோட்டம் நண்பர்கள், மற்றும் வாசகர்களுக்கு அரு அறிவிப்பு

நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் (பழைய முகவரி tamilparks.nsguru.com) முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது புதிய முகவரி tamilthottam.nsguru.com

உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்

Monday, October 25, 2010

விவேகானந்தர் பொன்மொழிகள் !

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும்கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர்.அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.

சித்தாந்தங்களையும்,தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப்பயனுடையதாக்குங்கள்.

சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும்என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்திஅவனிடமிருந்து வெளிப்படும்.

நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டேஇருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவுகுறைகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

-விவேகானந்தர் பொன்மொழிகள்

மேலும்

நன்றி http://tamilthottam.nsguru.com

அழியாத நிஜம் அம்மா.

அணு தினமும்,வந்துபோவாள்,
அன்பால்,அணைத்து,
அக்கறையுடன் நான்
கரை சேர துடிப்பாள்.
இயற்கை தந்த மரணத்திலும்,
மறையமால் எனது மனதில்
இருப்பாள்,நான் வளர வாழ்த்துவாள்.
இவளே அழியாத நிஜம் !
நிழலுமாய் என்னோடு நடப்பாள்,
நிலவாய் வழிக் காட்டுவாள்.
ஒவ்வொரு துளிகளிலும்,
கலந்து இருப்பவளே
எனது அம்மா.
இவளே அழியாத நிஜம்,
மறையாத இனம்.
எனது வரலாறு
இவள் பக்கம் பேசும்,
இவள் இல்லாமல் நானில்லை
என்பதை சொல்லும்!

நன்றி http://tamilthottam.nsguru.com

Saturday, October 23, 2010

(tamilparks.nsguru.com) தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் முகவரி மாற்றம் tamilthottam.nsguru.com

(tamilparks.nsguru.com) தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது http://tamilthottam.nsguru.com இங்கு சுட்டி புதிய முகவரிக்கு செல்லலாம்..

Wednesday, October 06, 2010

மன்னா..?என்னா!

மன்னர் : "போர்வீரன் "கெட்டப்"பில் என் சிலையை யதார்த்தமாக வடிக்க வேண்டும் என்று சிற்பியிடம் சொன்னது தப்பாகிவிட்டது!"

மந்திரி: "ஏன் மன்னா?"

மன்னர் :"நான் தலைதெறிக்க ஓடுவது போலல்லவா சிலை செய்திருக்கிறார்!"


மேலும் படிக்க இங்க கிளிக் செய்யுங்கள்

சிந்தனைகள்

தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

· பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது.


மேலும் பார்வையிட இங்கு சுட்டுங்கள்