Saturday, March 29, 2008

ஸ்ருதிக்காக எடையை குறைக்கும் மாதவன்

மாதவனுடன், கமல் மகள் ஸ்ருதி ஜோடி சேரும் படத்துக்கான ஷீட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது. படத்தை இயக்குபவர் 'எவனோ ஒருவன்' ரிஷிகாந்த்.

முதல் கட்டமாக படத்தில் இடம் பெறும் 6 பாடல்களையும் கம்போசிங் செய்து முடித்துவிட்டார்கள். அவசர கதியில் பாடல் போடப்பட்டாலும் அனைத்தும் அற்புதமாக வந்துள்ளதாம்.

கமலின் 'ஆளவந்தான்'படத்துக்கு இசையமைத்த சங்கர் எசான் லாய் தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

மெல்லிய தேகம் கொண்ட ஸ்ருதிக்காக, மாதவன் தனது எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
(மூலம் - வெப்துனியா)
for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/
http://www.uginbruce.co.nr/ http://collections4u.50webs.com/
http://www.funworld.frih.net/ (Funny Jokes)
http://mobilepark.50webs.com (Mobile World)

Thursday, March 20, 2008

சேரனுக்கு 'ஆட்டோகிராஃப்' போட மறுத்த கோபிகா!

சேரனின் 'ஆட்டோகிராஃப்' மூலம் தமிழ் சினிமாவில் வலம் வந்த கோபிகா, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளார். தற்போது 'பொக்கிஷம்' படத்தில் நடித்துக்கொண்டு, இயக்கி வரும் சேரன், அதைத் தொடர்ந்து 'ஆட்டோகிராஃப் - பாகம் 2'-ஐ உருவாக்கவுள்ளார்.
பொக்கிஷத்தில் பிஸியாக இருந்தாலும், ஆட்டோகிராஃப் பாகம் இரண்டுக்கான வேலைகளிலும் தீவிரமாக இயங்கிவரும் சேரனுக்கு, நடிகை கோபிகா ஓர் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்த பாகம் இரண்டில், முதல் பாகத்தில் நடித்தவர்களையே நடிக்கவைக்க திட்டமிட்டிருந்தார் சேரன். மல்லிகா, சினேகா, கனிகா என அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், 'கால்ஷீட் இல்லை' என்று கைவிரித்துவிட்டார் கோபிகா.
ஆயினும், கோபிகா இல்லாமலேயே படத்தை சிறப்பாக எடுத்து முடிப்பேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் சேரன். 'ஆட்டோகிராஃப் பாகம் 2'-ஐ தயாரிப்பது ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது!
(மூலம் - வெப்துனியா)

for more visit


Tuesday, March 18, 2008

தங்கம் விலை ரூ.10,000 தாண்டியது

சென்னையில் தங்கத்தின் விலை ரூ.10,000தை தாண்டியுள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.குறிப்பாக, கடந்த காலங்களை விட இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.9,300யை தாண்டியது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.10 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் தங்கத்தின் தற்போது விலை 1,255ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய் விற்பனை நாடுகள், டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிக்க துவங்கியுள்ளன. இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/ http://babyworld.sitesled.com/