Tuesday, October 30, 2007

'இளம் கணவர்கள் பலருக்கும் செக்ஸ் விழிப்புணர்வு இல்லை'

இந்தியாவில் இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் (செக்ஸ்) குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

பள்ளிகளில் செக்ஸ் கல்விக்கு அரசியல் தலைவர்கள் சிலர் உள்பட பழமைவாதிகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'விடலைப் பருவத்தினர் மற்றும் இளம் பருவத்தினர் மட்டுமின்றி, இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் குறித்த விழிப்பு உணர்வு இல்லை' என்கிறார் சமூக ஆர்வலரும், டெல்லியில் உள்ள 'தர்ஷி' என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராதிகா சந்திரமணி.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், "தர்ஷி அமைப்புக்கு செக்ஸ் தொடர்பான அடிப்படை தகவல்களைப் பெற, தினமும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. இதில், இளம் கணவர்களே அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இத்தகைய அறியாமையால் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.


தற்போது செக்ஸ் கல்வி குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் வரும் 19-ம் தேதியன்று நடைபெறவுள்ள 4-வது ஆசிய பசிபிக் மாநாட்டில், இந்தப் பிரச்சனை வலியுறுத்தப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இனப்பெருக்க உரிமை, செக்ஸ் குறித்த விழிப்பு உணர்வு, பாலின விகிதாச்சாரத்தில் வேறுபாடு, உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகள் இவற்றோடு, செக்ஸ் கல்வி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/

'வகுப்பறை'யில் அப்துல் கலாம்

அடிக்கடி படம் இயக்கி கையை சுட்டுக்கொள்ளும் சின்னி ஜெயந்த தற்போது 'வகுப்பறை' என்ற பெயரில் புதிய படம் எடுக்க தயாராகி வருகிறார்.

பள்ளிப் பருவத்து நினைவுகளை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் முக்கிய அம்சமாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இடம் பெறுகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை சொல்வது போன்று காட்சி அமைக்கப்படவுள்ளது.தற்போது வெளிநாடு சென்றிருக்கும் கலாம் நாடு திரும்பியதும் இந்த காட்சியில் நடிப்பாராம்.


(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center for Technologist)

http://tamilparks.50webs.com/ (publishing your articles freely so please rush on )

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/ (only for parents - please)

Wednesday, October 24, 2007

நவ.30-ல் ஐசிஎல் டிவென்டி 20 போட்டிகள் தொடக்கம்

இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) அமைப்பு நடத்தும் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் (நவ.) 30-ம் தேதி தொடங்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா உள்ளிட்ட முன்னணி ஆட்டக்காரர்களாக திகழ்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்கும் இப்போட்டிகள், டிசம்பர் 16-ம் தேதி வரை சண்டிகரிலுள்ள பன்ச்குலாவில் நடைபெறவுள்ளதாக ஐசிஎல் இன்று அறிவித்தது.

ஒரு மில்லியன் டாலர்களைப் பரிசுத் தொகையாகக் கொண்ட இப்போட்டிகள், தவ தேவி லல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடந்த ஐசிஎல் நிர்வாக வாரியக் கூட்டத்தில், மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎல் தலைவர் கபில் தேவ், "டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு, கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு, நாட்டு மக்கள் உரிய ஆதரவை நிச்சயம் அளிப்பர் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திராவால் துவக்கப்பட்டுள்ள ஐசிஎல் அமைப்புக்குப் போட்டியாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பை உருவாக்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

friends links are below
http://itpark.50webs.com/ (Tips and Tricks Centre)
http://tamilparks.50webs.com/ (Tamil Entertainment publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/ (Tourism)
http://aboutindia.50webs.com/ (India)
http://babyworld.sitesled.com/ (Only for parents)

Friday, October 12, 2007

பார்லி.க்கு தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை : லாலு

பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை என ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது : இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டு, இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவது நாட்டின் நலனுக்கு உகந்தது இல்லை.அத்துடன் எந்த ஒரு கட்சியும் தேர்தல் வருவதை விரும்பவில்லை.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், முற்றிலும் மின் உற்பத்தி சார்ந்தது.இதில் நாம் அமெரிக்காவிடம் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நானே அமெரிக்க சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளேன்."

புஷ்சை நீக்கு; உலகை காப்பாற்று மற்றும் பிஜேபியை நீக்கு ; நாட்டை காப்பாற்று " என்ற கோஷத்துடன் அந்த போராட்டம் நடத்தப்பட்டது.அப்படி இருக்கையில் அமெரிக்க சர்வாதிகாரத்திற்கு நான் எப்படி ஆதரவளிப்பேன்? நாங்கள் எப்பொழுதுமே ஏழைகளுடனும், வளரும் நாடுகளுடனும்தான் இருக்கிறோம்.அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பது பிஜேபி கட்சிதான்.இவ்வாறு லாலு கூறினார்.

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ (Tamil Forum / Tamil Entertainment - Only in tamil publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/ (Only parents please seee)

Friday, October 05, 2007

தகுதியில்லாதவருக்குச் சொன்ன அறிவுரை...

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங்குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது.

அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது.

குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

" குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர் ,வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே?" என்றது.

ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங் குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி,

" எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள் வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? " என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங் குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது.

தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.



for more visit
http://tamilparks.50webs.com/ (Tamil Forum, Tamil Entertainment, Tamil Kavithai etc...)
http://kanyakumari.sitesled.com/ (Kanyakumari)
http://aboutindia.50webs.com/ (About India)
http://babyworld.sitesled.com/ (only for parents)
http://itpark.50webs.com/ (Tips and Tricks for ALL)