Monday, May 28, 2007

கோபிகாவிற்கு விருது!

'ஆட்டோகிராப்' கோபிகா விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

தொடர்ந்து −வர் நடிப்பில் வெளிவந்த 'சாந்துபொட்டு', 'கீர்த்தி சக்ரா', மற்றும் 'மாயாவி' மலையாள படங்கள் கேரளாவில் வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்காவில் வாழும் கேரள மக்கள் கோபிகாவிற்கு பாராட்டுவிழா ஒன்றினை வருகிற ஜுன் மாதம் நடத்தவிருக்கிறார்கள்.

விழாவினை கலந்து கொள்ள கோபிகாவும் முடிவு செய்துவிட்டார். −தனைத் தொடர்ந்தே கோபிகாவின் அமெரிக்க பயணம். நடைபெறவிருக்கும் பாராட்டுவிழாவில் கோபிகாவிற்கு 'பத்மினி விருது' அளிக்கப்படவிருக்கிறது.
மறைந்த நாட்டியபேரொளி பத்மினியின் நினைவாக உருவாக்கப்ட்ட −ந்த விருதினை கோபிகாவிற்கு அளிக்க அமெரிக்க வாழ் மலையாளிகள் முடிவு செய்துள்ளனர்.

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா. இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமாக வங்கதேசத்தை வென்றது. ஒருநாள் தொடரோடு, டெஸ்ட் தொடரையும் வென்று, உலக கோப்பையில் வங்கதேசத்திடம் பெற்ற அடிக்கு ஆறுதல் தேடிக்கொண்டது இந்தியா.முதல் டெஸ்ட் போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட அந்த இரு அணிகளுக்கும் வெற்றி தோல் வியில்லாமல் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி துவங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

Wednesday, May 23, 2007

வாய்ப்புகளை குத்தகைக்கு எடுத்த கரண்

'கொக்கி'க்கு பிறகு 'தீ நகர்', 'கருப்பசாமி குத்தகைதாரர்' படங்களில் நடித்தார் கரண். இதில், 'கருப்பசாமி குத்தகைதாரர்'ரீலிஸாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இதனால், 'தீ நகர்' படத்தை வாங்க எக்கசக்கப் போட்டியாம். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒரு கூட்டமே கரண் வீட்டு கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.

அமுதா துரைராஜ் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் புதுமுக நடிகரை வைத்து, படப்பிடிப்புக்கு நாள் குறித்திருந்தார்கள். தற்போது அவரை தூக்கிவிட்டு கரணை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆக மொத்தத்தில், தற்போது தமிழ் சினிமா வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது நம்ம கரண்தான்!

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

மோசமான சாலைகளுக்கு ஊழலே காரணம்

சாலைகள் மோசமான நிலையில் காணப்படுவதற்கு ஊழலே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் ஊரக சாலைகள் குறித்த தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய அவர், சாலைகள் கட்டுமானப் பணிகளில் ஊழல் நடப்பது புற்றுநோயைப் போன்று பரவி வருவதாகக் கவலை தெரிவித்தார்.

ஊரக சாலைகள் அமைப்பதில் தரத்திற்கு உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் சாலைகள் கட்டுமானப் பணிக்காகவும், செப்பனிடுவதற்காகவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், ஆனால் அந்தச் சாலைகளோ ஒவ்வொரு மழைக்காலத்திலும் மோசாமன நிலையை அடைந்துவிடுவதாகவும் கூறினார்.
மேலும், இந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு வெளிப்படையான முறையிலும் சிறந்த முறையிலும் ஊரக மேம்பாட்டுத்துறை செயல்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

ரிலையன்ஸ் ரோமிங் கட்டணம் குறைப்பு

ரிலையன்ஸ் மொபைல் போன் இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன் வர்த்தக பிரிவு தலைவர் சுக்லா கூறினார்.

இது குறித்து சுக்லா மேலும் கூறியதாவது:
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 3.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பிரிபெய்டு, 4 போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கு மட்டும் நிமிடத்திற்கு 40 பைசா என்ற அளவில் இருந்து தொடங்கி ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இனி ரோமிங் சேவைக்காக வாடகைக்கட்டணமும் இருக்காது. ரோமிங் இன்கம்மிங் கால்களுக்கான கட்டணமும் ரூ.1.75 லிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சலுகைகள் மூலம் 70 சதவீதம் வரை ரோமிங் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சுக்லா தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

Wednesday, May 16, 2007

ராதிகா செல்விக்கு இணை அமைச்சர் பதவி

புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி எம்.பி நியமிக்கப்படுகிறார்.

தயாநிதி மாறன் ராஜினாமாவை தொடர்ந்து, அவரிடமிருந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை ஆகியவை ஏ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏ. ராசா வகித்துவந்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கப்படுகிறார். இவர் நாளை மறுநாள் பதவியேற்பார் என்றும், இவருக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com http://aboutindia.50webs.com

Thursday, May 10, 2007

அடுத்த ஜனாதிபதி : பிரதமர் ஆலோசனை

அடுத்த ஜனாதிபதியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது குறித்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஜனாதிபதி பதவிக்கு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரை பிரதமர் பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

மேலும், ஜனாதிபதி போட்டி களத்தில் சுசீல் குமார் ஷிண்டே உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

எனினும், நாளை வெளியாகவுள்ள உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இது குறித்து முடிவெடுக்கலாம் என இடதுசாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com

Wednesday, May 09, 2007

மனது + எண்ணங்கள் = பிரச்னைகள்

உண்மைதான் ஒரு பிரச்சனை வருகிறதென்றால் ஏதோ ஒன்றை நம் மனது எதிர்பார்க்றிது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்கு மூல காரணம் நம்முடைய மனதும், எண்ணங்களும்தான். நம்முடைய மனதை விரிவாக்குவோம்.

ஆண்டவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய வரம், நம்முடைய மனதுக்கு எல்லையே கிடையாது என்பதுதான். அந்த மனதை எவ்வளவு வேண்டுமானாலும் விரிக்கலாம். நம்முடைய மனதை எவ்வளவுக்கு எவ்வளவு விரிக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறோம். நம்முடைய மனது சிறிதாக, சிறிதாக புதிதாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கின்றது. விளைவு நித்தம், நித்தம் போராட்டம், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி என்றெல்லாம் வருகிறது.

பிரச்சனைகளுக்கு மனது ஒரு காரணமாக இருந்தாலும் இன்னமொருகாரணம் இருக்கிறது.

Tuesday, May 08, 2007

சிஷ்யன் படத்தில் குருநாதர்

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தமுதலாய்'படத்தை இயக்குகிறார்.

திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை பாக்யராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்.

படத்தில் வக்கீலாகவும் நடிக்கிறார் பாக்கியராஜ்.
புதுமுகங்கள் மகேஷ்வரன் கதாநாயகனாகவும், மதுஷர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மகேஷ்வரன் வேறு யாருமல்ல. படத்தின் தயாரிப்பாளர் இ.பி.பாண்டியனின் மகன்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com

நெஞ்சிருக்கும் வரை

'காதலுக்காக என் இதயத்தையே கொடுப்பேன்' என்று திரைப்படங்களில் வாழையடி வாழையென ஒவ்வொரு நாயகர்களும் சொல்வது வழக்கம். இது நடைமுறையில் அபத்தமாகத் தோன்றினாலும், 'கவிதைத்தனமாக இருக்கிறதே' என்று பலரும் ரசிப்பது உண்மையே.

இதை உண்மையிலேயே ஒரு காதலன் நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், சொல்லப்பட்டவிதம் ஜீரணிக்க இயலாத அனுபவத்தை ஏற்படுத்துவதால், 'சிறுபுள்ளத்தனமா இருக்கு' என்று ரசிகர்களை சொல்ல வைக்கிறது.

வழக்கம்போல் ஏழை ஆட்டோ டிரைவரான நரேனை காதலிக்கிறார் பணக்கார வீட்டுப் பெண் தீபா. இதற்கு எதிர்பார்த்தபடி அப்பாவின் எதிர்ப்பு வலுக்கிறது. எல்லாத் தடைகளையும் உடைத்து பொருளை தியாகம் செய்துவிட்டு அன்பு நிலைத்திருக்கும் இடத்தில் வந்து சேருகிறார் நாயகி.

திருமணத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் தருவாயில் தீபா விபத்துக்குள்ளாகிறாள். இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி. அதற்கு பத்து லட்சம் செலவாகும். இங்கேதான் 'டயலாக்'கை நிஜமாக்க முயற்சி மேற்கொள்கிறார் நாயகன்.

இந்த முயற்சிகளைத் தொடங்கும் போது, நமது நெஞ்சை படபடக்க வைத்த திரைக்கதை, அடுத்த சில நிமிடங்களில் செயலிழக்க வைத்துவிடுகிறது.

'சித்திரம் பேசுதடி' நரேன், இந்தப் படத்திலும் தனது நடிப்பால் நிமிர்ந்து நிற்கிறார். காதல் வயப்படும்போதும், மருத்துவமனையை ஆக்ரோஷமாக சிறைபிடிக்கும்போதும், காதலியை காப்பாற்ற துடிக்கும்போதும் நடிப்பில் சிலிர்க்க வைக்கிறார்.

தீபா, படம் முழுவதும் சோகம் இழையோடும் விதமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், பாடல் காட்சியமைப்புகளும் ஓரளவு ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றன.

பிற்பாதிதான் ஓவர் எமோஷனல் என்றால, முற்பாதியிலாவது கொஞ்சம் கலகலப்பூட்டியிருக்கலாம். அதற்கான களம் இருந்தும் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை.

மருத்துவமனை மிரட்டல்கள், நாயகனின் இதயத்தை நாயகிக்குப் பொருத்த டாக்டர் ஒப்புக்கொள்வது, அதை ரொம்ப சிம்பிளாக முடிப்பது...
ஓ... இப்படத்தைப் பார்க்க இதயத்துடன் மட்டும்தான் செல்ல வேண்டும்; மூளையை பத்திரமாக வீட்டிலேயே ஓய்வறையில் வைத்துவிட வேண்டும் போல.

மொத்தத்தில், கோர்ட், நீதி, நியாயம், நேர்மை, போலீஸ், குற்றம், கொலை, பழிவாங்கல் முதலிய சொற்களை மறந்துவிட்டு 'காதல்' என்ற இனிய சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டதற்கு இயக்குனரை பாராட்டலாம்.
- எஸ்.சரவணன் (மூலம் - வெப்துனியா)

Monday, May 07, 2007

நான் அவன் இல்லை


பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு ஓடிவிடும் ஒரு ப்ளேபாயின் கதை. அந்தப் ப்ளேபாய்தான் ஜீவன். தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் மாளவிகாவிடம் மையம் கொள்கிறார். மணம் முடிக்கிறார். பிரபல ஒவியர் ஜாகீர் உசேன் பெயரில் சினேகாவை ஏமாற்றி பணம் பெற்றுக் கொள்கிறார். மாதவன் மேனன் என்று மலையாளியாக நடித்து ஜோதிர் மயியை 'பிரேமிச்சு' விவாஹம் செய்கிறார். தொடர்ந்து, ஹரிதரதாஸ் என்ற போலிச் சாமியார் வேடம் பூண்டு கீர்த்தி சாவ்லாவை மயக்கி தாலி கட்டுகிறார். ஷாம் பிரசாத் என்கிற பெயரில் தொழிலதிபர் நமீதாவிடம் மேனேஜராகிறார். நெருங்கி 'பர்சனல்' மேனேஜராகி கவிழ்த்துவிடுகிறார். இவ்வளவு பேரையும் ஏமாற்றிய ஜீவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவர் குற்றம் சாட்டும் போதும் "நான் அவன் இல்லை" என்று மறுக்கும் ஜீவன், தன் பெயர் இப்போது அண்ணாமலை என்கிறார். தான் ஓர் அப்பாவி என்கிற ஜீவன், அவர்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால்தானே தவிர, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதமாக்கி ஜீவனை விடுதலை செய்கிறார் நீதிபதி லட்சுமி. சே... அநியாயமா இருக்கே என்று நினைக்கிறபோது, அந்த எதிர்பாராத க்ளைமாக்ஸ்.அந்தக் காலத்து "நான் அவனில்லை" தான் இப்போது ரீமேக் ஆகி வந்துள்ளது. ஜெமினி நடித்த அந்தப் படத்தில் ஜெமினியால் முடியாததை இந்தப் படத்தில் ஜீவன் செய்திருக்கிறார். ஐந்து பேரை ஏமாற்றும் காட்சிகளில் பஞ்சமுகம் காட்டுகிறார். பஞ்ச பூதம் போல ஒவ்வொன்றும் ஒரு ரகம். வளைத்துப் போட வசீகரமும், அதற்குள் ஒளிந்திருக்கும் கள்ளத் தனமும் கலந்த மாதிரி முகம் ஜீவனுக்கு இருப்பது பொருத்தம். ஜீவன் ஒரே நபராக நடிப்பைக் காட்டி கவர்வதை, அவருடன் ஜோடி போடும் ஐவர் அணி கவாச்சி காட்டி ஈடு செய்கிறது.கவர்ச்சி விருந்து வைப்பதிலும் தங்களை காட்சிப்படுத்துவதிலும், அவர்களுக்கும் தனித்தனி போட்டியே நடக்காத குறைதான். அந்த அளவுக்கு தாராள தரிசனம்.


நடிகைகளின் கவர்ச்சியை வெளிப்படுத்த "மெனக் கெட்ட" அளவுக்கு ஜீவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக்க - சுவையாக்க முயற்சி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சினேகா பாத்திரம் புத்திசாலியா, அப்பாவியா என்று தீர்மானிக்க முடியாத குழப்பம். சினேகா ஏதோ செய்யப் போகிறார் என்றால் ம்ஹும். ஏமாற்றிவிடுகிறார்.இன்றைய காவல் துறையில் முன்னேறிவிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இவ்வளவு பெரிய மோசடி செய்யும் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.இந்த வேடங்கள், ஏமாற்றுதல்கள், தப்பித்தல்கள் அந்தக் காலத்தில் நம்ப வைக்கலாம். தொழில்நட்பமும் பொது அறிவும் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில் இதை நம்ப வைக்க இன்னமும் நூதனமாக நுணுக்கமாகச் சிந்தித்திருக்க வேண்டும். செல்போன் நம்பர் கூட வாங்காமல் தாலி கட்ட கழுத்தை நீட்டுகிறார்கள் என்பது நம்ப முடியாதது. அதே போல ஏமாறும் பெண்கள் எல்லாருமே வெளுத்ததை எல்லாம் பாலாக நம்புகிறார்கள். மின்னுவதெல்லாம் பொன்னாக மயங்குகிறார்கள். இவ்வளவு முட்டாளாகக் காட்டுவது டூ மச். பாடல் காட்சிகள் எல்லாமே காமசூத்ராவுக்கு பொழிப்புரை எழுதாத குறையாக சிருங்கார ரசம் சொட்ட வைக்கின்றன. விஜய் ஆன்டனியின் இசையில் பாடல்கள் எல்லாமே தேனாக இனிக்கின்றன. அதை கவர்ச்சியாக்கி போதை மருந்து கலந்தது காட்சிகளின் கைங்கரியம் தான் தவிர இசையின் தவறல்ல.ஆயிரம் பூக்கள் காதில் வைக்கப்பட்டாலும் கலகலப்பு, கவர்ச்சி, இளமை என்று மசாலா மணம் கமழ வைத்திருக்கிறார் இயக்குநர் செல்வா. வயிற்றுக்கு பாதகமென்றாலும் நாக்குக்கு ருசியாக இருக்கும் "பாஸ்ட் புட்" அயிட்டம் போல குறைகளை மறந்து ரசிக்கும்படி பதார்த்தம் பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.


(மூலம் - வெப்துனியா)



Thursday, May 03, 2007

அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா 'கிரீடம்'?

அஜீத்தின் 'கிரீடம்' முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மே மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

அஜீத்தின் முந்தைய படமான 'ஆழ்வார்' படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் செல்லா. கதை, திரைக்கதை எதுவும் சரியில்லாததால் படம் ஓடவில்லை.

'கிரீடம்' படத்தை இயக்கிய விஜய், புது இயக்குனர் என்பதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார் அஜீத். நீண்ட யோசனைக்கு பின்னர் படத்தை ஒப்புக்கொண்டாராம்.


'முழுக்க முழுக்க உங்களை நம்பி என்னை ஒப்படைக்கிறேன். படம் சரியாக வரவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எந்த புதுமுக இயக்குனர் படத்திலும் நடிக்க மாட்டேன்' என்று இயக்குனரிடம் சொல்லி வைத்திருக்கிறார் அஜீத்.

(மூலம் - வெப்துனியா)

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more

பிரிட்டன் செல்வந்தர்கள் பட்டியலில் மிட்டல் முதலிடம்

உலகின் மிகப் பெரிய ஸ்டீல் கம்பெனியின் அதிபரும், வெளிநாடு வாழ் இந்தியருமான லஷ்மி மிட்டல் பிரிட்டனின் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதனை, நடப்பாண்டின் பிரிட்டன் செல்வந்தர்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியலாக வெளியிட்டுள்ள 'தி சண்டே டைம்ஸ்' தெரிவிக்கிறது. அதன்படி, தற்போது 'ஆர்சிலர் மிட்டல் ஸ்டீல்' நிறுவனத்தின் அதிபரான 56 வயது மிட்டலின் சொத்து மதிப்பு 19,250 பில்லியன் பவுண்ட்ஸ் என்றும், இது கடந்த 2006-ம் ஆண்டில் 14,881 பில்லியன் பவுண்ட்ஸ் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 4,369 பில்லியன் பவுண்ட்ஸ் கூடியுள்ளது என்பதும், முன்றாவது முறையாக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், பிரிட்டனில் செல்வந்தர்களாக இருக்கும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் 2-ம் இடத்தையும், ஸ்வராஜ் பால் 3-வது இடத்தையும் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more

உலக கோப்பையை தொடர்ந்து 3-வது முறையாக வென்றது ஆஸி.

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. இது அந்த அணி வென்றுள்ள நான்காவது கோப்பையாகும். பார்படாஸ்சில் இன்று நடைபெற்ற 2007-ம் ஆண்டின் உலக கோப்பைக் கிரிக்கெட்டுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை டக்வெர்லவிஸ் முறையின் அடிப்படையில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியின் துவக்கத்தில் மழை பெய்ததன் காரணமாக, ஆட்டத்தின் ஓவர்கள் 38 ஆக குறைக்கப்பட்டது. பின்னர், இலங்கை இன்னிங்ஸ்சின்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், 25-வது ஓவரில் 38 ஓவர்களில் 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கு, 36 ஓவர்களில் 269 என குறைக்கப்பட்டது. இப்போட்டியில் கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ஜெயசூர்யா அதிகபட்சமாக 63 ரன்களையும், சங்ககாரா 54 ரன்களையும் எடுத்தனர்; சில்வா 21 ரன்களையும், ஜெயவர்த்தனே 19 ரன்களையும் எடுத்தனர். வாஸ் ஆட்டமிழக்காமல் 11 ரன்களையும், மலிங்கா 10 ரன்களையும் எடுத்தனர். தரங்கா, அர்னால்ட் மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கிளார்க் 2 விக்கெட்டுகளையும், பிராக்கென், மெக்ராத், வாட்சன், ஹாக் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸ்சில் நிர்ணயிக்கப்பட்ட 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் 149 ரன்களைக் குவித்து அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். அவரைத்தொடர்ந்து, ஹெய்டனின் 38 ரன்களும், பான்டிங்கின் 37 ரன்களும் அணிக்கு மேலும் வலு சேர்த்தன. வாட்சன் 3 ரன்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், கடைசிவரை ஆட்டமிழக்காமல் சைமண்ட்ஸ் 23 ரன்களையும், கிளார்க் 8 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கிய இப்போட்டியில், மழையின் காரணமாக ஆட்டத்தின் இடையே ஒளிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இலங்கை அணி 33 ஓவர்கள் பேட் செய்து முடித்திருந்த நிலையில் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது.அப்போது, ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியதால், மைதானத்தில் சற்று ஆச்சர்யமும், சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கி மீதமுள்ள 3 ஓவர்களுக்கும் பந்து வீசப்பட்டது. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 'உலக கோப்பை கிரிக்கெட் நாயகன்' மெக்ராத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக புள்ளிகளைப் பெற்று, 2007-ன் உலக கோப்பை நாயகன் விருதைப் பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். அவர், இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திடும் வகையில் 149 ரன்களைக் குவித்த கில்கிறிஸ்ட் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அவர், கடந்த (2003) உலக கோப்பை இறுதிப் போட்டியில் 140 ரன்கள் குவித்த ரிக்கி பான்டிங்கின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)