Monday, April 09, 2007

இன்றைய (மண்டை காயும்) தத்துவம்

visit http://tamilparks.50webs.com for more


என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது


T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

Wednesday, April 04, 2007

கேள்வித்தாள் அவுட்: மாணவன் கைது

சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007

தேனியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வித்தாள் திருடப்பட்ட விவகாரத்தில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தலைமையாசிரியர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.10ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு நாளை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான கேள்வித்தாள்கள் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள பள்ளி வளாக கட்டடத்தின் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிக்க ரெங்காபுரம் ராதாகிருஷ்ணன்,பாலக்கோம்பை நந்தகோபால் என்ற இரண்டு தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ராஜா என்ற காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து கேள்வித்தாள் திருடப்பட்டது தெரிய வந்தது. அல்லிநகர மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர் சிவபாண்டியன்தான் கேள்வித்தாளை திருடினார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். மேலும் கண்காணிப்பாளர்களாக செயல்பட்ட தலைமையாசிரியர்கள் இரண்டு பேரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவாலாளி ராஜாவும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
visit

Monday, April 02, 2007

தாய்பால் தருவது எப்படி?

http://tamilparks.50webs.com

பிறந்த குழந்தைகளுக்கு புட்டி பாலை விட தாய்ப்பாலே சிறந்தது.
ஆனால் நம்மில் எத்தனை தாய்மார்களுக்கு முறையாக தாய்பால் கொடுக்க தெரியும்?
இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் தாய்பால் தரும் பழக்கமே இல்லை என்பது இன்னும் வேதனையான விஷயம். தாய்பாலின் மகத்துவம் தெரியாத பெண்களுக்காக நாங்கள் தரும் சிறப்பு 'டிப்ஸ்' இதோ...
* குழந்தை ஆரோக்கியம் மற்றும் பலத்தோடு வளர ஒரே சரியான உணவு தாய்பால்தான்.
* குழந்தை பிறப்புக்கு பின்வரும் இரத்தப்போக்கு, தாய்பால் தருவதால் நிற்கிறது.
* தொற்று நோய் எதுவும் வராமல் தடுக்கிறது இந்த தாய்ப்பால்.
* தாய்பால் எப்போதும் சுத்தமானது. தயார் நிலையில் இருப்பது, சரியான வெப்பநிலையில் உள்ளது.
* தாய்பால் தருவதன் மூல்ம் சில பெண்கள் உடனடியாக மீண்டும் கருத்தரிக்காமல் தடுக்கப்படுகிறார்கள்.
* இது தாயையும், சேயையும் அணுக்கமாயும், பாதுகாப்பாயும் உணர செய்கிறது.என்ன இக்காலத்து மாடர்ன் மங்கைகளே!தாய்பாலின் மகத்துவத்தை புரிந்துவிட்டீர்களா!

(மூலம் - வெப்துனியா)

இட ஒதுக்கீடு:ஜெ.புகாருக்கு கருணாநிதி பதில்

Publish your articles freely in http://tamilparks.50webs.com No.1 Tamil Webpage

2 ஏப்ரல் 2007
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,முந்தைய ஜெயலலிதா அரசு கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்றும்,இதற்கு ஜெயலலிதா அரசு நியமித்த வழக்கறிஞர்கள்தான் காரணம் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல நடித்துக் கொண்டு,அந்த கொள்கைக்கு மறைமுகமாக குழி தொண்டி கொண்டிருப்பவர்களை எப்போதுதான் இந்த நாடு அடையாளம் கண்டுகொள்ளப்போகிறதோ என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பாக 1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றிய விவரத்தை,ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது எடுத்துச் சொல்ல மறந்து விட்ட அதிமுக தலைவிக்கு இடஒதுக்கீடு பற்றியெல்லாம் அறிக்கைவிட எந்தவிதமான அருகதையும் இல்லை.27 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் 'நோஞ்சான் வக்கீல்' ஆஜரானதாக ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு உண்மை இல்லை.அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம்.அவர் யார் என்றால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில்,ஜெயலலிதாவிற்கு எதிராக ஆஜராகி வாதாடியவர்.அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் தனது அறிக்கையில் அந்த வழக்கறிஞரை 'நோஞ்சான் வக்கீல்' என அநாகரீகமாக ஜெயலலிதா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
visit http://tamilparks.50webs.com for more

டிராய் அதிரடி :தொலைபேசி கட்டணங்கள் குறையும்



தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம்(டிராய்)இந்த கட்டண குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் தொலைபேசி சேவை வழங்குவதற்காக,இதுவரை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 37 சதவீதத்திற்கும் அதிகமாக வரி கட்டி வந்தது. இந்த வரியை இனி கட்ட வேண்டாம் என டிராய் இன்று அறிவித்துள்ளது.இந்த வரியை கட்டாததால்,நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படும் என டிராய் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த லாபத்தின் மூலம், தொலைபேசி கட்டணங்களை தற்போது இருப்பதை விட மேலும் குறைக்க முடியும் என்று டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.அதிலும்,குறிப்பாக ஐஎஸ்டி கால் கட்டணங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கட்டண குறைப்புகள் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.
(மூலம் - வெப்துனியா)