Wednesday, January 31, 2007

மே.இ. தீவுகள் : 36 / 2 (9)

மிடில் - ஆஃப் ஸ்டம்பிற்கு மேலெழும்பி வந்த பந்தை தூக்கி அடித்தார் சந்தர்பால். அதனை பேக்வர்ட் பாய்ண்டில் பௌண்டரிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த ஹர்பஜன் ஓடிவந்து பிடித்துவிடுகிறார். சந்தர்பால் ஆட்டமிழந்தார். மே.இ. அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

for online commentry click here

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் 4வது ஒரு நாள் போட்டி : வதோதரா! வர்ணனை : கா. அய்யநாதன் from webulagam

visit http://tamilparks.50webs.com for more
இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் 4வது ஒரு நாள் போட்டி : வதோதரா! வர்ணனை : கா. அய்யநாதன்

visit http://tamilparks.50webs.com for more

Saturday, January 27, 2007

உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார்.

இந்திய அணி 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார். 40 பந்துகளில் 2 சிக்ஸர்களுடனும், 11 பௌண்டரிகளுடனும் உத்தப்பா எடுத்த 70 ரன்களால் இந்திய அணி 12வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார் உத்தப்பா.

உத்தப்பா 33 பந்துகளில் 8 பௌண்டரிகள், 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டியுள்ளார்.

உத்தப்பா 33 பந்துகளில் 8 பௌண்டரிகள், 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டியுள்ளார்.

9வது ஓவர் . . . எம்ரிட் தொடர்கிறார்.முதல் பந்து . . . வைட். 63/1

முதல் பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வருகிறது. தடுத்தாடுகிறார் ரெய்னா.

2வது பந்து . . . மிடில் - ஆஃப் ஸ்டம்பிற்கு வந்த பந்தை மிட் ஆஃபில் அடித்துவிட்டு 1 ரன் எடுக்கிறார் ரெய்னா. 64/1

3வது பந்து . . . முன்னால் வந்து மிட் ஆனில் தடுத்தாடுகிறார்.

4வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்தை மிட் விக்கெட்டின் மீது தூக்கி அடிக்கிறார் உத்தப்பா. சிக்ஸர். உத்தப்பா அரை சதத்தை எட்டிவிட்டார். சரியான அதிரடி ஆட்டம். 70/1

5வது பந்து . . . ஸ்கொயர் லெக்கில் கிளான்ஸ் செய்துவிட்டு 1 ரன் எடுக்கிறார். 71/1

6வது பந்து . . . கிளான்ஸ் செய்ய முயன்றார் ரெய்னா. பேடில் பட்டுச் செல்கிறது. 4 ரன்கள். 76/1

இந்தியா : 61 / 1 (8)

இந்தியா : 61 / 1 (8)
8வது ஓவர் . . . பாவல் தொடர்கிறார்.
முதல் பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கட் செய்ய முயன்றார் ரெய்னா. முடியவில்லை.
2வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கவரில் அடிக்கிறார். லாரா தடுக்கிறார். 1 ரன். 46/1
3வது பந்து . . . மிடில் - லெக் ஸ்டம்பிற்கு வந்த பந்தை மிட் விக்கெட்டில் அடிக்கிறார் உத்தப்பா. 2 ரன்கள். 49/1. உத்தப்பா - 32
4வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி வந்த பந்தை முன்னால் வந்து எக்ஸ்ட்ரா கவரில் சாத்துகிறார் உத்தப்பா. பௌண்டரிக்குப் பறக்கிறது பந்து. இந்தியாவின் எண்ணிக்கை அரை சதத்தை கடக்கிறது. 53/1.
5வது பந்து . . . மிடில் - லெக் ஸ்டம்பிற்கு பிட்ச் ஆன பந்தை முன்னால் வந்து லாங் ஆனில் அடிக்கிறார் உத்தப்பா. தடுக்க முடியவில்லை. 4 ரன்கள். அருமையாக அடித்தார். 57/1
6வது பந்து . . . முன்னால் வந்து நேராக அடிக்கிறார் உத்தப்பா. இம்முறையும் தடுக்க முடியவில்லை. 4 ரன்கள். 61/1
இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டிற்கு 35 பந்துகளில் 50 ரன்களை எடுத்துள்ளனர். அதில் உத்தப்பா அடித்தது மட்டும் 40 ரன்கள். ஓவர் முடிகிறது. (0,0,1,4,4,4)
visit http://tamilparks.50webs.com for tamil jokes tamil stories tamil articles

Saturday, January 20, 2007

காதல் தூதுவனாகும் ரூபாய் நோட்டுகள்

காதல் தூதுவனாகும் ரூபாய் நோட்டுகள் காற்றில் பறக்கவிடப்படும் உத்தரவுகள்


ரூபாய் நோட்டுகளில் எழுதவோ, பின் செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ள போதும், இன்னும் சிலர் ரூபாய் நோட்டை காதல் தூதுவனாகவும், மினி கடிதமாகவும் பயன்படுத்தி வருவது கவலையளிப்பதாக உள்ளது.


like more articles visit click here

Friday, January 12, 2007

இதய நோய்கள் வராமல் தடுக்க

இதய நோய்கள் வராமல் தடுக்க குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, சாப்பிட, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட குடும்பத்தா¡¢டம் கலந்து பழக என நேரத்தை திட்டமிடுங்கள்.



பதட்டத்திற்கு இடம் தராதீர்கள். பிரயாணம் செய்யும் முன்பே பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அந்த அந்த இடங்களுக்கு முன் கூட்டியே சென்று விடுவது நல்லது. அப்படி சா¢யான நேரத்திற்கு செல்லாமல் வண்டிகளை தவற விட்டு விட்டாலும் கவலைப்படாமல், புலம்பாமல் அடுத்த வண்டிக்குச் செல்லங்கள்.



கனமான பொருட்களை நின்றுகொண்டே தூக்காமல், உட்கார்ந்து கொண்டு தூக்குங்கள். இது இதயத்திற்கு நல்லது.



உணவு உண்ணும் பொழுது ரசித்து ருசித்து உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது கவலைதரும் பேச்சுக்கள் பேச வேண்டாம்.



நண்பர்கள் வட்டத்தை பொ¢தாக்கி எப்பொழுதும் கலகலப்பாக இருங்கள் . தனிமையை தவிர்க்கவும்.



திடுக்கிடச் செய்யும் விஷயங்களில் நிதானமாக செயல்படவும்.



இரவு படுக்கச் செல்லும் பொழுது நடந்தவைகளை, நடக்கப்போறவைகளை பற்றி சிந்திக்காமல் மனதை வெறுமையாக்கி நிம்மதியாக தூங்குங்கள்.



புகை பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.



வயது எதுவானலும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை மற்றும் மாலையில் கட்டாயம் நடை பயிற்சி அவசியம்.



ஸ்கூட்டா¢ல் செல்வதற்குப் பதில் சைக்கிளில் செல்வது மிக நல்லது.



புத்தம் புதிய பழங்கள், நார்சத்து மிகுந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.



உணவுப் பொருளில் வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை தேவையானல் மிக சிறிய அளவு சேர்க்கவும் பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சி வகைகளை தேர்ந்தெடுத்து வேகவைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொ¡¢த்தச் சாப்பிடுவது கெடுதி. முட்டையிள் வெண்கருவை சாப்பிடலாம். மஞ்சல் கருவை தவிர்ப்பது நல்லது. சூ¡¢யகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், சோயபீன்ஸ் எண்ணெய்களைப் அளவோடு பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச் சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ, காபி இவைகளை சாப்பிடலாம். சர்கரைக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது நல்லது.



ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. வீட்டில் எளிமையாகச் சமைத்து உண்பதே நல்லது. 'சாட்" உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை பழக்கக் கூடாது.



ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயமாக இதய பா¢சோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கொரு முறை இ.சி.ஜி. எடுத்துக் கொள்ள வேண்டும்.



மன அழுத்தம் இதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடல், உள்ளம், உணர்வுகள் அமைதி கொள்ள யோகா செய்வது நல்லது. மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லா இயற்கை உணவு, தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியன இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுணர்கள்.

To get more Tamil Articles, Jokes, and Stories visit here

Thursday, January 11, 2007

Free Articles Publish in Webpage without any Money

Hi Dear Friends,
A new webpage have opened http://tamilparks.50webs.com here any one can send the tamil articles like jokes or stories or any good articles in tamil .... are published freely without any money with your name and webpage and photo if you wish...

so please hurry up soon........

for more visit http://tamilparks.50webs.com and send your articles to the below address

tamilparks at gmail.com