Tuesday, March 20, 2007

வரலாறு படைத்தது இந்தியா : 413/5

போர்ட் ஆப் ஸ்பெயின்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 19 மார்ச் 2007

இந்திய பெர்முடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 413 ரன்களை எடுத்து வரலாறு படைததுள்ளது.இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்தியாதான் அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள பெருமையை தட்டிச் சென்றுள்ளது.டாஸ் வென்ற பெர்முடா அணி, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கங்குலி, உததப்பா களம் இறங்கினர். ஆனால் இரண்டாவ்து ஓவரிலேயே உத்தப்பா அவுட் ஆக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இந்நிலையில், கங்குலியுடன் ஜோடி சேர்ந்த சேவாக் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இவரைத் தொடர்ந்து கங்குலி தனது பங்குக்கு 89 ரன்கள் சேர்த்தார. சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். இதையடுத்து களமிறங்கிய யுவராஜ், தோனி கூட்டணி அதிக ரன்கள் சேர்ப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 38.1 ஓவரில தோனி பார்டன் வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிக்க, டக்கர் அழகாக கேட்ச் பிடித்து தோனியை அவுட் ஆக்கினார். இதற்கு முந்தைய ப்ந்தை சிக்ஸருக்கு விரட்டியது போல இந்த முறையும் முயற்சித்து அவுட் ஆனார். தோனி 29 ரன்களுக்கு அவுட் ஆக, யுவராஜ் சிங்குடன் கைகோர்த்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து, யுவராஜ் விஸ்வரூபம் எடுக்க பெர்முடா அணியினர் மிரண்து போயினர். பெர்முடா வீரர்களின் பந்து வீச்சை சிக்சஸர்களும், ப்வுண்டரிகளுமாக விரட்ட ஒரு கட்டத்தில் என்ன் செய்வதென்றே புரியாமல் பெர்முடா வீரர்கள் நிலை குலைந்தனர். யுவராஜ் சிங்கும் சதமடிக்க தவறி விட்டார். அதிரடியாக விளையாடிய இவர் 46 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதுவரை நிதானமாக விளையாடிய சச்சின், தனது அதிரடியை காட்ட பெர்முடா அணியினர் அரண்டு விட்டனர். 29 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சச்சின் களத்தில் இருந்தார். கேப்டன் ஆட்டத்தின் கடைசி பந்தை சிகஸருக்கு விரட்டி 7 ரன்களுடன் ஆட்டம் இழக்காம்ல் இருந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 413 ரன்கள் எடுத்தனர்.414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்கை பெர்முடாவுக்கு இந்தியா நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் 16 சிக்சர்களும், 31 பவுண்டரிகளும் அடித்து இந்தியர்கள் வெளுத்துள்ளனர். பெர்முடா சார்பில் பார்டன் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 ரன்களை உதிரிகளாக பெர்முடா அணியினர் விட்டுத் தந்துள்ளனர். இந்தியா மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அணி இன்று சிறப்பாக செயல்பட்டுள்ள்து. மொத்தத்தில் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
(மூலம் - வெப்துனியா)
visit
http://tamilparks.50webs.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com

Thursday, March 08, 2007

வீரேந்தர் சேவாக் - ஜோதிடம்


பிறந்த தேதி : அக்டோபர் 20, 1978
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்களை குவித்து எதிரணியை திக்குமுக்காடச் செய்தவர்களில் சேவாக்கும் ஒருவர். அண்மையில், சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் போனாலும், நம்பிக்கையை தளரவிடாத அவர், இந்திய அணியில் இடம்பெற்று தற்போது உலக கோப்பையில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார். உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றதே அவரது முயற்சிக்கு ஓர் உதாரணம். முயற்சி மட்டுமின்றி, அன்பு, ஒழுக்கம், நற்பெயர் பெறுவதில் ஆர்வம் போன்ற பல்வேறு நற்குணங்களையும் தனனகத்தே கொண்டுள்ளவர். வன்முறையாளர்களையும், பிறரை அவதூறாக பேசுபவர்களையும் அவருக்கு ஒருபோதும் பிடிக்காது. அறிவியலை விட கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதேநேரத்தில், அவ்வப்போது பதற்றமடைவது அவரது இயல்பு. இந்த பொதுவான குணநலன்கள் யாவும் சேவாக்குக்கு மட்டும் இல்லை; அக்டோபர் 20-ல் நீங்கள் பிறந்திருந்தால், உங்களுக்கும் பொருந்தும். ஜனவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள், சேவாக்குக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர். (குறிப்பு : நண்பர் திராவிட் பிறந்தது ஜனவரி 11-ல்).மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில், சேவாக் தனது திறமையை நிரூபிக்கும் வகையிலான அதிக வாய்ப்பைப் பெறுவார். அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வார். தொடக்கத்தில் வெற்றி கிட்டாமல் போயினும், மாதத்தின் கடைசியில் பாராட்டுமழையில் நனைவார். குடும்பத்தில் இருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவினால் நன்மைகள் பல பெறமுடியும். மனவலிமைக்கு உறுதுணையாக உடல் வலிமையும் இருக்கும். சிறு காயம் ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் அது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. மொத்தத்தில் மார்ச் மாதம் சேவாக்குக்கு மேன்மை மிகுந்த மாதம்.
சேவாக்கை செழிப்பாக்கும் எண்கள் : 1,2 மற்றும் 7

(மூலம் - வெப்துனியா)

Thursday, March 01, 2007

இந்திய அணி மே.இ.தீவுகள் பயணம்

மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மார்ச் 2007
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான இந்திய அணி நேற்றிரவு மேற்கிந்திய தீவுகள் புறப்பட்டது. மேற்கிந்திய தீவுகளில் வரும் 13-ம் தேதி 9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு மும்பையில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்த பவார், வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக இந்திய வீரர்கள் பிளேசர் உடையை அணிந்து போஸ் கொடுத்தனர். அதில், பி.சி.சி.ஐ துணைத்தலைவர் நிரஞ்சன் ஷா, பயிற்சியாளர் சேப்பல், உடலியக்க நிபுணர் ஜான் குளோஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அணியின் விபரம் ராகுல் திராவிட் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர் (துணை கேப்டன்), சவுரவ் கங்குலி, சேவாக், அகார்கர், தோனி, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகீர் கான், கும்ப்ளே, முனாஃப் படேல், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பா.
(மூலம் - வெப்துனியா)


visit http://tamilparks.50webs.com for more