Monday, November 05, 2007

இந்தியா- பாக். இன்று மோதல்: யாருக்கு வெற்றி?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒரு நாள்போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 42 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளது. சோயிப் மாலிக் தலைமையிலான இந்த அணி இந்தியாவுடன் 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை, பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் சச்சின் தெண்டுல்கர் எடை குறைந்த பேட்டுடன் களம் இறங்க உள்ளார்.

அணியிலிருந்து திராவிட்டுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷேவாக், தன் மீதான நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். யுவராஜ்சிங், காம்பிர், உத்தப்பா ஆகியோர் ஆட்டம் மெருகேறியுள்ளது. எனினும் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் பாகிஸ்தான் அணியை சமாளிக்க முடியும்.

பாகிஸ்தானில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு வீரர்கள் ஒருவித பதற்றமும், கவலையும் அடைந்துள்ளனர். எனினும், அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான சல்மான்பட் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக ஆடி வருகிறார். மூத்த வீரர்களான முகமது யூசுப், யூனிஸ்கான் மற்றும் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் அப்ரிடி, மிஸ்பா உல்ஹக் ஆகியோர் எப்போதுமே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர்கள்தான்.

இரண்டு அணிகளுமே சமபலத்துடன் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணி வீரர்கள் விபரம்:

இந்தியா:

டோனி (கேப்டன்), யுவராஜ் சிங், ஷேவாக், கங்குலி, தெண்டுல்கர், கவுதம் காம்பிர், ராபின் உத்தப்பா, ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், பிரவீன்குமார்.

பாகிஸ்தான்:

சோயிப் மாலிக் (கேப்டன்), அப்ரிடி, சல்மான் பட், இம்ரான் நசிர், யாசிர் ஹமீத், யூனிஸ்கான், முகமத் யூசுப், மிஸ்பா உல்-ஹக், பாவட் ஆலம், கம்ரன் அக்மல், சோயிப் அக்தர், உமர் குல், ராவ் இப்திகர், சோகைல் தன்விர், அப்துல் ரக்மான்.

போட்டி அட்டவணை:

நவ. 5: முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தி

நவ. 8: 2-வது ஒரு நாள் போட்டி, மொகாலி (பகல்-இரவு)

நவ. 11: 3-வது ஒரு நாள் போட்டி, கான்பூர்

நவ. 15: 4-வது ஒரு நாள் போட்டி, குவாலியர் (பகல்-இரவு)

நவ.18: 5-வது ஒரு நாள் போட்டி, ஜெய்பூர் (பகல்-இரவு)

நவ. 22-26: முதலாவது டெஸ்ட், டெல்லி

நவ 30-டிச.4: 2-வது டெஸ்ட், கொல்கத்தா

டிச 8-12: 3-வது டெஸ்ட், பெங்களூர்

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ (Tamil Webpage with TamiL ForuM publishing free articles)
http://kanyakumari.sitesled.com/ (Kanyakumari)
http://aboutindia.50webs.com/ (India)
http://babyworld.sitesled.com/ (Only for Parents)

Tuesday, October 30, 2007

'இளம் கணவர்கள் பலருக்கும் செக்ஸ் விழிப்புணர்வு இல்லை'

இந்தியாவில் இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் (செக்ஸ்) குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

பள்ளிகளில் செக்ஸ் கல்விக்கு அரசியல் தலைவர்கள் சிலர் உள்பட பழமைவாதிகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'விடலைப் பருவத்தினர் மற்றும் இளம் பருவத்தினர் மட்டுமின்றி, இளம் கணவர்கள் பலருக்கும் பாலியல் குறித்த விழிப்பு உணர்வு இல்லை' என்கிறார் சமூக ஆர்வலரும், டெல்லியில் உள்ள 'தர்ஷி' என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராதிகா சந்திரமணி.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், "தர்ஷி அமைப்புக்கு செக்ஸ் தொடர்பான அடிப்படை தகவல்களைப் பெற, தினமும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. இதில், இளம் கணவர்களே அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இத்தகைய அறியாமையால் பல்வேறு விதமான பாலியல் வன்முறைக்கு ஆளாவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.


தற்போது செக்ஸ் கல்வி குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் வரும் 19-ம் தேதியன்று நடைபெறவுள்ள 4-வது ஆசிய பசிபிக் மாநாட்டில், இந்தப் பிரச்சனை வலியுறுத்தப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இனப்பெருக்க உரிமை, செக்ஸ் குறித்த விழிப்பு உணர்வு, பாலின விகிதாச்சாரத்தில் வேறுபாடு, உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகள் இவற்றோடு, செக்ஸ் கல்வி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/

'வகுப்பறை'யில் அப்துல் கலாம்

அடிக்கடி படம் இயக்கி கையை சுட்டுக்கொள்ளும் சின்னி ஜெயந்த தற்போது 'வகுப்பறை' என்ற பெயரில் புதிய படம் எடுக்க தயாராகி வருகிறார்.

பள்ளிப் பருவத்து நினைவுகளை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் முக்கிய அம்சமாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இடம் பெறுகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை சொல்வது போன்று காட்சி அமைக்கப்படவுள்ளது.தற்போது வெளிநாடு சென்றிருக்கும் கலாம் நாடு திரும்பியதும் இந்த காட்சியில் நடிப்பாராம்.


(மூலம் - வெப்துனியா)

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center for Technologist)

http://tamilparks.50webs.com/ (publishing your articles freely so please rush on )

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/ (only for parents - please)

Wednesday, October 24, 2007

நவ.30-ல் ஐசிஎல் டிவென்டி 20 போட்டிகள் தொடக்கம்

இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) அமைப்பு நடத்தும் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் (நவ.) 30-ம் தேதி தொடங்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா உள்ளிட்ட முன்னணி ஆட்டக்காரர்களாக திகழ்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்கும் இப்போட்டிகள், டிசம்பர் 16-ம் தேதி வரை சண்டிகரிலுள்ள பன்ச்குலாவில் நடைபெறவுள்ளதாக ஐசிஎல் இன்று அறிவித்தது.

ஒரு மில்லியன் டாலர்களைப் பரிசுத் தொகையாகக் கொண்ட இப்போட்டிகள், தவ தேவி லல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடந்த ஐசிஎல் நிர்வாக வாரியக் கூட்டத்தில், மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎல் தலைவர் கபில் தேவ், "டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு, கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு, நாட்டு மக்கள் உரிய ஆதரவை நிச்சயம் அளிப்பர் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திராவால் துவக்கப்பட்டுள்ள ஐசிஎல் அமைப்புக்குப் போட்டியாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பை உருவாக்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

friends links are below
http://itpark.50webs.com/ (Tips and Tricks Centre)
http://tamilparks.50webs.com/ (Tamil Entertainment publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/ (Tourism)
http://aboutindia.50webs.com/ (India)
http://babyworld.sitesled.com/ (Only for parents)

Friday, October 12, 2007

பார்லி.க்கு தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை : லாலு

பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வர துளியும் வாய்ப்பில்லை என ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது : இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டு, இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவது நாட்டின் நலனுக்கு உகந்தது இல்லை.அத்துடன் எந்த ஒரு கட்சியும் தேர்தல் வருவதை விரும்பவில்லை.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், முற்றிலும் மின் உற்பத்தி சார்ந்தது.இதில் நாம் அமெரிக்காவிடம் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நானே அமெரிக்க சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளேன்."

புஷ்சை நீக்கு; உலகை காப்பாற்று மற்றும் பிஜேபியை நீக்கு ; நாட்டை காப்பாற்று " என்ற கோஷத்துடன் அந்த போராட்டம் நடத்தப்பட்டது.அப்படி இருக்கையில் அமெரிக்க சர்வாதிகாரத்திற்கு நான் எப்படி ஆதரவளிப்பேன்? நாங்கள் எப்பொழுதுமே ஏழைகளுடனும், வளரும் நாடுகளுடனும்தான் இருக்கிறோம்.அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பது பிஜேபி கட்சிதான்.இவ்வாறு லாலு கூறினார்.

for more visit
http://itpark.50webs.com/ (Tips and Tricks Center)
http://tamilparks.50webs.com/ (Tamil Forum / Tamil Entertainment - Only in tamil publishing your articles freely)
http://kanyakumari.sitesled.com/
http://aboutindia.50webs.com/
http://babyworld.sitesled.com/ (Only parents please seee)

Friday, October 05, 2007

தகுதியில்லாதவருக்குச் சொன்ன அறிவுரை...

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங்குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது.

அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது.

குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

" குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர் ,வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே?" என்றது.

ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங் குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி,

" எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள் வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? " என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங் குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது.

தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.for more visit
http://tamilparks.50webs.com/ (Tamil Forum, Tamil Entertainment, Tamil Kavithai etc...)
http://kanyakumari.sitesled.com/ (Kanyakumari)
http://aboutindia.50webs.com/ (About India)
http://babyworld.sitesled.com/ (only for parents)
http://itpark.50webs.com/ (Tips and Tricks for ALL)

Friday, August 10, 2007

சென்செக்ஸ் புள்ளிகள் மீண்டும் கடும் வீழ்ச்சி

http://itpark.50webs.com/ updated (Tips and Tricks Center - Windows 98, 2000, XP etc..)

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில், சென்செக்ஸ் 509 புள்ளிகள் அளவிற்கு கடும் வீழ்ச்சியடைந்து 15,000 க்கும் கீழே சென்றது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ,மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு முனனணி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த முதலீட்டாளர்கள் அவற்றை விற்க தொடங்கினர்.

இதனால் சென்செக்ஸ் புள்ளிகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு, 509 புள்ளிகள் அளவிற்கு சரிந்து 14,590 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செகஸ் 207 புள்ளிகள் சரிந்திருந்த நிலையில், இன்று காலை அது மேலும் 509 புள்ளிகள் அளவிற்கு சரிந்தது, பங்குச் சந்தை வர்த்தகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதே போன்று தேசியப் பங்குச் சந்தையிலும் நிப்டி 164 புள்ளிகள் அளவிற்கு சரிந்து 4,239 ஆக காணப்பட்டது.


(மூலம் - வெப்துனியா)


for more visit
http://tamilparks.50webs.com/ (Tamil Site updated)

http://kanyakumari.sitesled.com/ (Tourism)

http://aboutindia.50webs.com/ (To ALL)

http://babyworld.sitesled.com/ (Only Parents)

Wednesday, July 11, 2007

உங்கள் உள்ளங்கை அடிக்கடி வியர்க்கின்றனவா?

உங்களவு உள்ளங் கையும் கால்களும் அடிக்கடி வியர்க்கின்றனவா...? ஏன் இப்படி ஏற்படுகின்றன ? அதற்கான முறையான சிகிச்சை என்ன?

இந்த கோளாறு அதிக உஷ்ணம் அல்லது மனப்பிரச்சனைகளாலும், எளிதில் உணர்ச்கி வசப்படுவதினாலும், பயம், பதற்றம் ஆகியவற்றினாலும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளைக் கட்டுப்படுத்த வியர்வை ஏற்படும் இடத்தில் பூசிக் கொள்ள் சில குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன, இவற்றை வாங்கி பயன்படுத்தினால் குணப்படுத்த முடியும்.

ஆனால், இதற்கு முன்னர் மருத்துவரைச் சந்தித்து முறையான விளக்கம் பெறுவது நல்லது.

Thanks - webdunia


for more visit

http://tamilparks.50webs.com/

http://aboutindia.50webs.com/

http://itpark.50webs.com/ (Computer Tips and Tricks - Networking & Windows)


http://babyworld.sitesled.com

Monday, July 09, 2007

நிமிட்ஸ் கப்பலைப் பற்றி...

அமெரிக்கா அணு ஆயுதப் போர்க் கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் 3 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதக் கப்பல் என்பதால் பல்வேறு எதிர்ப்புகள்...அணு ஆயுதக் கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்த எதிர்ப்புத் தெரிவித்து அஇஅதிமுக, இடது சாரிகள் அறிக்கைகளும், போராட்டங்களும் நடத்தின. ஒன்றும் அறியா பொதுமக்களும் அணு ஆயுத போர் கப்பல் சென்னைக்கு வந்தால், சென்னையே அழிந்துவிடும்... அணுக் கசிவு ஏற்பட்டால் தமிழகமே இருக்காது.... என்று பலவாறு பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்படிப்பட்ட நிமிட்ஸ் பற்றிய உண்மை என்னவென்று தெரிய வேண்டாமா? அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், இராக்கில் போர் பணியாற்றிவிட்டு சற்று இளைப்பாற சுற்றுலா கிளம்பிவிட்டது. அதன் ஒரு பகுதியாகவே நிமிட்ஸ் இந்தியா வந்துள்ளது.

அக்கப்பலில் உள்ள வீரர்கள் இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து தங்களை புதுப்பித்துக் கொண்டு செல்லவே சென்னையில் மையம் கொண்டுள்ளனர். இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பனது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, இந்த கப்பல் சென்னைக்கு வர மத்திய அரசு அனுமதித்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை நிமிட்ஸ் சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.நிமிட்ஸ் போர் கப்பலில் பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட 6,000 வீரர்கள் உள்ளனர். அவர்கள் நேற்று படகுகள் மூலம் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்காக நட்சத்திர விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளனர்.மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் கப்பல் ஊழியர்கள் சென்னையில் உள்ள அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். எலியட்ஸ் கடற்கரையை அவர்கள் சுத்தம் செய்தனர். அனாதை ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

நிமிட்ஸ் போர்க் கப்பலில் வந்தவர்கள் இப்படியிருக்க... நிமிட்ஸ் போர் கப்பலோ நமது சென்னை துறைமுகத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அணுசக்தி மூலம் இயங்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவிற்கு ஆபத்தானதுதான். ஆனால் இந்த தொழில்நுட்பம் கடந்த 57 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. அதில் இருக்கும் நாங்களே மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கப்பலில் வந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.மேலும், கப்பலில் அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகாமிட்டுள்ளது. அணு கசிவை துரிதமாக கண்டறிந்து தகவல் அளிக்கும் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் நிமிட்ஸ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளையே அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வருகின்றர். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து வரவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உடையது. 23 மாடிகள் கொண்ட இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 65 போர் விமானங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.1975-ம் ஆண்டு மே மாதம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இக்கப்பல் கடந்த 32 ஆண்டுகளாக சளைக்காமல் பணியாற்றி வருகிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் பணிபுரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸின் நினைவாக அவரது பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.நிமிட்ஸில் 53 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. அதில் 6 மருத்துவர்களும், தனியாக 5 பல் மருத்துவர்களும் இருக்கின்றனர். உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. அதன் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை குடிநீர் தேவைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும். கப்பலில் இருப்பர்கள் வழிபாட்டிற்காகக் கூட வெளியே செல்ல வேண்டாம். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பலரும் கப்பலில் இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள்ளன.கப்பலில் தேவைக்கு மேல் 50 விழுக்காடு ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமானங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. போர் விமானங்கள் பழுதடைந்துவிட்டால் அவற்றை உட்பகுதிக்கு கொண்டு சென்று பழுது பார்க்கும் தளமும் உள்ளது.உணவு உண்ணுவதற்கான தனிக் கூடம், மாநாட்டு அறை, பொழுதுபோக்கு கூடம் என அனைத்து வசதிகளும் இந்த போர்க் கப்பலில் உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கும் இந்த கப்பலை மிதக்கும் நிமிட்ஸ் நகரம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

(Webdunia)
for more visit
http://tamilparks.50webs.com

Thursday, July 05, 2007

தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும்: ஜெ.

தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என தொண்டர்கள் யாரும் கவலையோ, வருத்தமோ அடைய வேண்டாம்.

தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும். அப்போது கூட்டுறவு அமைப்புகளில் நாம் அங்கம் வகித்து பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு பொன்னான எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)

for more news

http://tamilparks.50webs.com/

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/

http://babyworld.sitesled.com/

http://www.uginbruce.co.nr/

http://itpark.50webs.com/ comming soon

Tuesday, June 26, 2007

ரஜினியின் வெற்றிக்கு அவரது அடக்கமே காரணம் : கருணாநிதி

ரஜினிகாந்தின் வெற்றிக்கு அவரது அடக்கக் குணமே காரணம் என்று 'சந்திரமுகி' திரைப்பட வெற்றிவிழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் 804-வது நாள் வெற்றிவிழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, "இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பல உள்ளங்களில் படமாக பொதிந்திருக்கின்ற நிறை மனிதர், ரஜினி" என்றார்.

ரஜினிகாந்த் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், "ரஜினிகாந்தின் வெற்றிக்கு நடிப்பு, கலை ஆர்வம், ஆற்றல், உழைப்பு மட்டுமின்றி அவரது தன்னடக்கக் குணமே காரணம்" என்று கூறினார்.

மேலும், மராட்டிய மாவீரன் சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்தின் 'சிவாஜி' (திரைப்படம்) ஆகிய மூன்று பெயர்களும் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் செவிடர்களாக இந்தால்தால்தான் சாதிக்க முடியும்; இல்லையேல் வாழ்க்கை வீணாகிவிடும் என்றும், இவற்றை சிவாஜி கணேசன், என்.டி.ஆர், ராஜ்குமார், முதல்வர் கருணாநிதி ஆகியோரிடம் இருந்து தாம் கற்றுக்கொண்டதாக கூறினார்.

இயக்குனர் பி.வாசு, கமலஹாசன், பிரபு, ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசிய இவ்விழாவில், ரஜினிகாந்துக்கு சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட வீரவாளை கருணாநிதி வழங்கினார்.

'சந்திரமுகி'யின் சாதனை தென்னிந்தியாவில் இதுவரை அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டிருந்தது தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம். 1944-ல் வெளிவந்த இப்படம் 784 நாட்கள் ஓடியது.

தற்போது இந்தச் சாதனையை 804 நாட்கள் ஓடிய 'சந்திரமுகி' முறியடித்து, தென்னிந்தியாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2005-ல் வெளிவந்த இப்படம், 'மணிச்சித்திரதாழி' என்ற மளையாள மொழித் திரைப்படத்தின் தழுவல்.

(மூலம் - வெப்துனியா)


for more visit

http://www.uginbruce.co.nr/

http://tamilparks.50webs.com/

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/

http://babyworld.sitesled.com/

Friday, June 08, 2007

நமீதா, இது நியாயமா?

தற்போது நமீதா காட்டில்தான் அடைமழை. அஜீத், விஜய் என்று இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். 'அழகிய தமிழ்மகன்', 'பில்லா', 'மாயா' என்று ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கின்றன.

இடையில் மார்க்கெட் இல்லாதபோது புதிய ஹீரோக்களுடன் நடிக்க ஒப்பந்தமானார். 'மின்னடிக்குது', 'அழகான பொண்ணு' ஆகிய படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி போட்டார்.

இப்போது பிஸியாகிவிட்டதால் அந்த படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம்.

நமீதாவை நம்பி பணம் புரட்டிய தயாரிப்பாளர்கள் தற்போது நமீதா மீது புகார் கொடுக்கப் போகிறார்களாம்.

(மூலம் - வெப்துனியா)http://www.uginbruce.co.nr/ Friends Free Gifts

for more visit

http://tamilparks.50webs.com updated on 08-06-2007

http://kanyakumari.sitesled.com

http://aboutindia.50webs.com

http://babyworld.sitesled.com

Monday, May 28, 2007

கோபிகாவிற்கு விருது!

'ஆட்டோகிராப்' கோபிகா விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

தொடர்ந்து −வர் நடிப்பில் வெளிவந்த 'சாந்துபொட்டு', 'கீர்த்தி சக்ரா', மற்றும் 'மாயாவி' மலையாள படங்கள் கேரளாவில் வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்காவில் வாழும் கேரள மக்கள் கோபிகாவிற்கு பாராட்டுவிழா ஒன்றினை வருகிற ஜுன் மாதம் நடத்தவிருக்கிறார்கள்.

விழாவினை கலந்து கொள்ள கோபிகாவும் முடிவு செய்துவிட்டார். −தனைத் தொடர்ந்தே கோபிகாவின் அமெரிக்க பயணம். நடைபெறவிருக்கும் பாராட்டுவிழாவில் கோபிகாவிற்கு 'பத்மினி விருது' அளிக்கப்படவிருக்கிறது.
மறைந்த நாட்டியபேரொளி பத்மினியின் நினைவாக உருவாக்கப்ட்ட −ந்த விருதினை கோபிகாவிற்கு அளிக்க அமெரிக்க வாழ் மலையாளிகள் முடிவு செய்துள்ளனர்.

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா. இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமாக வங்கதேசத்தை வென்றது. ஒருநாள் தொடரோடு, டெஸ்ட் தொடரையும் வென்று, உலக கோப்பையில் வங்கதேசத்திடம் பெற்ற அடிக்கு ஆறுதல் தேடிக்கொண்டது இந்தியா.முதல் டெஸ்ட் போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட அந்த இரு அணிகளுக்கும் வெற்றி தோல் வியில்லாமல் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி துவங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது.

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

Wednesday, May 23, 2007

வாய்ப்புகளை குத்தகைக்கு எடுத்த கரண்

'கொக்கி'க்கு பிறகு 'தீ நகர்', 'கருப்பசாமி குத்தகைதாரர்' படங்களில் நடித்தார் கரண். இதில், 'கருப்பசாமி குத்தகைதாரர்'ரீலிஸாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இதனால், 'தீ நகர்' படத்தை வாங்க எக்கசக்கப் போட்டியாம். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒரு கூட்டமே கரண் வீட்டு கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.

அமுதா துரைராஜ் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றில் புதுமுக நடிகரை வைத்து, படப்பிடிப்புக்கு நாள் குறித்திருந்தார்கள். தற்போது அவரை தூக்கிவிட்டு கரணை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆக மொத்தத்தில், தற்போது தமிழ் சினிமா வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது நம்ம கரண்தான்!

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

மோசமான சாலைகளுக்கு ஊழலே காரணம்

சாலைகள் மோசமான நிலையில் காணப்படுவதற்கு ஊழலே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் ஊரக சாலைகள் குறித்த தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய அவர், சாலைகள் கட்டுமானப் பணிகளில் ஊழல் நடப்பது புற்றுநோயைப் போன்று பரவி வருவதாகக் கவலை தெரிவித்தார்.

ஊரக சாலைகள் அமைப்பதில் தரத்திற்கு உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் சாலைகள் கட்டுமானப் பணிக்காகவும், செப்பனிடுவதற்காகவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், ஆனால் அந்தச் சாலைகளோ ஒவ்வொரு மழைக்காலத்திலும் மோசாமன நிலையை அடைந்துவிடுவதாகவும் கூறினார்.
மேலும், இந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு வெளிப்படையான முறையிலும் சிறந்த முறையிலும் ஊரக மேம்பாட்டுத்துறை செயல்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

ரிலையன்ஸ் ரோமிங் கட்டணம் குறைப்பு

ரிலையன்ஸ் மொபைல் போன் இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன் வர்த்தக பிரிவு தலைவர் சுக்லா கூறினார்.

இது குறித்து சுக்லா மேலும் கூறியதாவது:
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 3.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பிரிபெய்டு, 4 போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கு மட்டும் நிமிடத்திற்கு 40 பைசா என்ற அளவில் இருந்து தொடங்கி ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இனி ரோமிங் சேவைக்காக வாடகைக்கட்டணமும் இருக்காது. ரோமிங் இன்கம்மிங் கால்களுக்கான கட்டணமும் ரூ.1.75 லிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சலுகைகள் மூலம் 70 சதவீதம் வரை ரோமிங் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சுக்லா தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com http://babyworld.sitesled.com

Wednesday, May 16, 2007

ராதிகா செல்விக்கு இணை அமைச்சர் பதவி

புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி எம்.பி நியமிக்கப்படுகிறார்.

தயாநிதி மாறன் ராஜினாமாவை தொடர்ந்து, அவரிடமிருந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை ஆகியவை ஏ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏ. ராசா வகித்துவந்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கப்படுகிறார். இவர் நாளை மறுநாள் பதவியேற்பார் என்றும், இவருக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com http://kanyakumari.sitesled.com http://aboutindia.50webs.com

Thursday, May 10, 2007

அடுத்த ஜனாதிபதி : பிரதமர் ஆலோசனை

அடுத்த ஜனாதிபதியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது குறித்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஜனாதிபதி பதவிக்கு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரை பிரதமர் பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

மேலும், ஜனாதிபதி போட்டி களத்தில் சுசீல் குமார் ஷிண்டே உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

எனினும், நாளை வெளியாகவுள்ள உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இது குறித்து முடிவெடுக்கலாம் என இடதுசாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
for more visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com

Wednesday, May 09, 2007

மனது + எண்ணங்கள் = பிரச்னைகள்

உண்மைதான் ஒரு பிரச்சனை வருகிறதென்றால் ஏதோ ஒன்றை நம் மனது எதிர்பார்க்றிது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரச்சனைக்கு மூல காரணம் நம்முடைய மனதும், எண்ணங்களும்தான். நம்முடைய மனதை விரிவாக்குவோம்.

ஆண்டவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய வரம், நம்முடைய மனதுக்கு எல்லையே கிடையாது என்பதுதான். அந்த மனதை எவ்வளவு வேண்டுமானாலும் விரிக்கலாம். நம்முடைய மனதை எவ்வளவுக்கு எவ்வளவு விரிக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறோம். நம்முடைய மனது சிறிதாக, சிறிதாக புதிதாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கின்றது. விளைவு நித்தம், நித்தம் போராட்டம், வாழ்க்கையில் விரக்தி, தோல்வி என்றெல்லாம் வருகிறது.

பிரச்சனைகளுக்கு மனது ஒரு காரணமாக இருந்தாலும் இன்னமொருகாரணம் இருக்கிறது.

Tuesday, May 08, 2007

சிஷ்யன் படத்தில் குருநாதர்

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தமுதலாய்'படத்தை இயக்குகிறார்.

திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை பாக்யராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்.

படத்தில் வக்கீலாகவும் நடிக்கிறார் பாக்கியராஜ்.
புதுமுகங்கள் மகேஷ்வரன் கதாநாயகனாகவும், மதுஷர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மகேஷ்வரன் வேறு யாருமல்ல. படத்தின் தயாரிப்பாளர் இ.பி.பாண்டியனின் மகன்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com

நெஞ்சிருக்கும் வரை

'காதலுக்காக என் இதயத்தையே கொடுப்பேன்' என்று திரைப்படங்களில் வாழையடி வாழையென ஒவ்வொரு நாயகர்களும் சொல்வது வழக்கம். இது நடைமுறையில் அபத்தமாகத் தோன்றினாலும், 'கவிதைத்தனமாக இருக்கிறதே' என்று பலரும் ரசிப்பது உண்மையே.

இதை உண்மையிலேயே ஒரு காதலன் நடைமுறைப்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், சொல்லப்பட்டவிதம் ஜீரணிக்க இயலாத அனுபவத்தை ஏற்படுத்துவதால், 'சிறுபுள்ளத்தனமா இருக்கு' என்று ரசிகர்களை சொல்ல வைக்கிறது.

வழக்கம்போல் ஏழை ஆட்டோ டிரைவரான நரேனை காதலிக்கிறார் பணக்கார வீட்டுப் பெண் தீபா. இதற்கு எதிர்பார்த்தபடி அப்பாவின் எதிர்ப்பு வலுக்கிறது. எல்லாத் தடைகளையும் உடைத்து பொருளை தியாகம் செய்துவிட்டு அன்பு நிலைத்திருக்கும் இடத்தில் வந்து சேருகிறார் நாயகி.

திருமணத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் தருவாயில் தீபா விபத்துக்குள்ளாகிறாள். இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி. அதற்கு பத்து லட்சம் செலவாகும். இங்கேதான் 'டயலாக்'கை நிஜமாக்க முயற்சி மேற்கொள்கிறார் நாயகன்.

இந்த முயற்சிகளைத் தொடங்கும் போது, நமது நெஞ்சை படபடக்க வைத்த திரைக்கதை, அடுத்த சில நிமிடங்களில் செயலிழக்க வைத்துவிடுகிறது.

'சித்திரம் பேசுதடி' நரேன், இந்தப் படத்திலும் தனது நடிப்பால் நிமிர்ந்து நிற்கிறார். காதல் வயப்படும்போதும், மருத்துவமனையை ஆக்ரோஷமாக சிறைபிடிக்கும்போதும், காதலியை காப்பாற்ற துடிக்கும்போதும் நடிப்பில் சிலிர்க்க வைக்கிறார்.

தீபா, படம் முழுவதும் சோகம் இழையோடும் விதமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், பாடல் காட்சியமைப்புகளும் ஓரளவு ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றன.

பிற்பாதிதான் ஓவர் எமோஷனல் என்றால, முற்பாதியிலாவது கொஞ்சம் கலகலப்பூட்டியிருக்கலாம். அதற்கான களம் இருந்தும் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை.

மருத்துவமனை மிரட்டல்கள், நாயகனின் இதயத்தை நாயகிக்குப் பொருத்த டாக்டர் ஒப்புக்கொள்வது, அதை ரொம்ப சிம்பிளாக முடிப்பது...
ஓ... இப்படத்தைப் பார்க்க இதயத்துடன் மட்டும்தான் செல்ல வேண்டும்; மூளையை பத்திரமாக வீட்டிலேயே ஓய்வறையில் வைத்துவிட வேண்டும் போல.

மொத்தத்தில், கோர்ட், நீதி, நியாயம், நேர்மை, போலீஸ், குற்றம், கொலை, பழிவாங்கல் முதலிய சொற்களை மறந்துவிட்டு 'காதல்' என்ற இனிய சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டதற்கு இயக்குனரை பாராட்டலாம்.
- எஸ்.சரவணன் (மூலம் - வெப்துனியா)

Monday, May 07, 2007

நான் அவன் இல்லை


பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் செய்து, காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு ஓடிவிடும் ஒரு ப்ளேபாயின் கதை. அந்தப் ப்ளேபாய்தான் ஜீவன். தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் மாளவிகாவிடம் மையம் கொள்கிறார். மணம் முடிக்கிறார். பிரபல ஒவியர் ஜாகீர் உசேன் பெயரில் சினேகாவை ஏமாற்றி பணம் பெற்றுக் கொள்கிறார். மாதவன் மேனன் என்று மலையாளியாக நடித்து ஜோதிர் மயியை 'பிரேமிச்சு' விவாஹம் செய்கிறார். தொடர்ந்து, ஹரிதரதாஸ் என்ற போலிச் சாமியார் வேடம் பூண்டு கீர்த்தி சாவ்லாவை மயக்கி தாலி கட்டுகிறார். ஷாம் பிரசாத் என்கிற பெயரில் தொழிலதிபர் நமீதாவிடம் மேனேஜராகிறார். நெருங்கி 'பர்சனல்' மேனேஜராகி கவிழ்த்துவிடுகிறார். இவ்வளவு பேரையும் ஏமாற்றிய ஜீவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவர் குற்றம் சாட்டும் போதும் "நான் அவன் இல்லை" என்று மறுக்கும் ஜீவன், தன் பெயர் இப்போது அண்ணாமலை என்கிறார். தான் ஓர் அப்பாவி என்கிற ஜீவன், அவர்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால்தானே தவிர, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதமாக்கி ஜீவனை விடுதலை செய்கிறார் நீதிபதி லட்சுமி. சே... அநியாயமா இருக்கே என்று நினைக்கிறபோது, அந்த எதிர்பாராத க்ளைமாக்ஸ்.அந்தக் காலத்து "நான் அவனில்லை" தான் இப்போது ரீமேக் ஆகி வந்துள்ளது. ஜெமினி நடித்த அந்தப் படத்தில் ஜெமினியால் முடியாததை இந்தப் படத்தில் ஜீவன் செய்திருக்கிறார். ஐந்து பேரை ஏமாற்றும் காட்சிகளில் பஞ்சமுகம் காட்டுகிறார். பஞ்ச பூதம் போல ஒவ்வொன்றும் ஒரு ரகம். வளைத்துப் போட வசீகரமும், அதற்குள் ஒளிந்திருக்கும் கள்ளத் தனமும் கலந்த மாதிரி முகம் ஜீவனுக்கு இருப்பது பொருத்தம். ஜீவன் ஒரே நபராக நடிப்பைக் காட்டி கவர்வதை, அவருடன் ஜோடி போடும் ஐவர் அணி கவாச்சி காட்டி ஈடு செய்கிறது.கவர்ச்சி விருந்து வைப்பதிலும் தங்களை காட்சிப்படுத்துவதிலும், அவர்களுக்கும் தனித்தனி போட்டியே நடக்காத குறைதான். அந்த அளவுக்கு தாராள தரிசனம்.


நடிகைகளின் கவர்ச்சியை வெளிப்படுத்த "மெனக் கெட்ட" அளவுக்கு ஜீவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுறுசுறுப்பாக்க - சுவையாக்க முயற்சி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சினேகா பாத்திரம் புத்திசாலியா, அப்பாவியா என்று தீர்மானிக்க முடியாத குழப்பம். சினேகா ஏதோ செய்யப் போகிறார் என்றால் ம்ஹும். ஏமாற்றிவிடுகிறார்.இன்றைய காவல் துறையில் முன்னேறிவிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இவ்வளவு பெரிய மோசடி செய்யும் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.இந்த வேடங்கள், ஏமாற்றுதல்கள், தப்பித்தல்கள் அந்தக் காலத்தில் நம்ப வைக்கலாம். தொழில்நட்பமும் பொது அறிவும் வளர்ந்திருக்கிற இந்தக் காலத்தில் இதை நம்ப வைக்க இன்னமும் நூதனமாக நுணுக்கமாகச் சிந்தித்திருக்க வேண்டும். செல்போன் நம்பர் கூட வாங்காமல் தாலி கட்ட கழுத்தை நீட்டுகிறார்கள் என்பது நம்ப முடியாதது. அதே போல ஏமாறும் பெண்கள் எல்லாருமே வெளுத்ததை எல்லாம் பாலாக நம்புகிறார்கள். மின்னுவதெல்லாம் பொன்னாக மயங்குகிறார்கள். இவ்வளவு முட்டாளாகக் காட்டுவது டூ மச். பாடல் காட்சிகள் எல்லாமே காமசூத்ராவுக்கு பொழிப்புரை எழுதாத குறையாக சிருங்கார ரசம் சொட்ட வைக்கின்றன. விஜய் ஆன்டனியின் இசையில் பாடல்கள் எல்லாமே தேனாக இனிக்கின்றன. அதை கவர்ச்சியாக்கி போதை மருந்து கலந்தது காட்சிகளின் கைங்கரியம் தான் தவிர இசையின் தவறல்ல.ஆயிரம் பூக்கள் காதில் வைக்கப்பட்டாலும் கலகலப்பு, கவர்ச்சி, இளமை என்று மசாலா மணம் கமழ வைத்திருக்கிறார் இயக்குநர் செல்வா. வயிற்றுக்கு பாதகமென்றாலும் நாக்குக்கு ருசியாக இருக்கும் "பாஸ்ட் புட்" அயிட்டம் போல குறைகளை மறந்து ரசிக்கும்படி பதார்த்தம் பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.


(மூலம் - வெப்துனியா)Thursday, May 03, 2007

அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா 'கிரீடம்'?

அஜீத்தின் 'கிரீடம்' முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மே மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

அஜீத்தின் முந்தைய படமான 'ஆழ்வார்' படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் செல்லா. கதை, திரைக்கதை எதுவும் சரியில்லாததால் படம் ஓடவில்லை.

'கிரீடம்' படத்தை இயக்கிய விஜய், புது இயக்குனர் என்பதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார் அஜீத். நீண்ட யோசனைக்கு பின்னர் படத்தை ஒப்புக்கொண்டாராம்.


'முழுக்க முழுக்க உங்களை நம்பி என்னை ஒப்படைக்கிறேன். படம் சரியாக வரவில்லையென்றால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு எந்த புதுமுக இயக்குனர் படத்திலும் நடிக்க மாட்டேன்' என்று இயக்குனரிடம் சொல்லி வைத்திருக்கிறார் அஜீத்.

(மூலம் - வெப்துனியா)

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more

பிரிட்டன் செல்வந்தர்கள் பட்டியலில் மிட்டல் முதலிடம்

உலகின் மிகப் பெரிய ஸ்டீல் கம்பெனியின் அதிபரும், வெளிநாடு வாழ் இந்தியருமான லஷ்மி மிட்டல் பிரிட்டனின் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதனை, நடப்பாண்டின் பிரிட்டன் செல்வந்தர்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியலாக வெளியிட்டுள்ள 'தி சண்டே டைம்ஸ்' தெரிவிக்கிறது. அதன்படி, தற்போது 'ஆர்சிலர் மிட்டல் ஸ்டீல்' நிறுவனத்தின் அதிபரான 56 வயது மிட்டலின் சொத்து மதிப்பு 19,250 பில்லியன் பவுண்ட்ஸ் என்றும், இது கடந்த 2006-ம் ஆண்டில் 14,881 பில்லியன் பவுண்ட்ஸ் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 4,369 பில்லியன் பவுண்ட்ஸ் கூடியுள்ளது என்பதும், முன்றாவது முறையாக செல்வந்தர்கள் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், பிரிட்டனில் செல்வந்தர்களாக இருக்கும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் 2-ம் இடத்தையும், ஸ்வராஜ் பால் 3-வது இடத்தையும் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more

உலக கோப்பையை தொடர்ந்து 3-வது முறையாக வென்றது ஆஸி.

visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
for more
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. இது அந்த அணி வென்றுள்ள நான்காவது கோப்பையாகும். பார்படாஸ்சில் இன்று நடைபெற்ற 2007-ம் ஆண்டின் உலக கோப்பைக் கிரிக்கெட்டுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை டக்வெர்லவிஸ் முறையின் அடிப்படையில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியின் துவக்கத்தில் மழை பெய்ததன் காரணமாக, ஆட்டத்தின் ஓவர்கள் 38 ஆக குறைக்கப்பட்டது. பின்னர், இலங்கை இன்னிங்ஸ்சின்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், 25-வது ஓவரில் 38 ஓவர்களில் 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கு, 36 ஓவர்களில் 269 என குறைக்கப்பட்டது. இப்போட்டியில் கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ஜெயசூர்யா அதிகபட்சமாக 63 ரன்களையும், சங்ககாரா 54 ரன்களையும் எடுத்தனர்; சில்வா 21 ரன்களையும், ஜெயவர்த்தனே 19 ரன்களையும் எடுத்தனர். வாஸ் ஆட்டமிழக்காமல் 11 ரன்களையும், மலிங்கா 10 ரன்களையும் எடுத்தனர். தரங்கா, அர்னால்ட் மற்றும் ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கிளார்க் 2 விக்கெட்டுகளையும், பிராக்கென், மெக்ராத், வாட்சன், ஹாக் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸ்சில் நிர்ணயிக்கப்பட்ட 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் 149 ரன்களைக் குவித்து அணியின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். அவரைத்தொடர்ந்து, ஹெய்டனின் 38 ரன்களும், பான்டிங்கின் 37 ரன்களும் அணிக்கு மேலும் வலு சேர்த்தன. வாட்சன் 3 ரன்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், கடைசிவரை ஆட்டமிழக்காமல் சைமண்ட்ஸ் 23 ரன்களையும், கிளார்க் 8 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கிய இப்போட்டியில், மழையின் காரணமாக ஆட்டத்தின் இடையே ஒளிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இலங்கை அணி 33 ஓவர்கள் பேட் செய்து முடித்திருந்த நிலையில் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது.அப்போது, ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியதால், மைதானத்தில் சற்று ஆச்சர்யமும், சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, சிறிது நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கி மீதமுள்ள 3 ஓவர்களுக்கும் பந்து வீசப்பட்டது. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 'உலக கோப்பை கிரிக்கெட் நாயகன்' மெக்ராத் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக புள்ளிகளைப் பெற்று, 2007-ன் உலக கோப்பை நாயகன் விருதைப் பெற்றார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். அவர், இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திடும் வகையில் 149 ரன்களைக் குவித்த கில்கிறிஸ்ட் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அவர், கடந்த (2003) உலக கோப்பை இறுதிப் போட்டியில் 140 ரன்கள் குவித்த ரிக்கி பான்டிங்கின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

Monday, April 09, 2007

இன்றைய (மண்டை காயும்) தத்துவம்

visit http://tamilparks.50webs.com for more


என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது


T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

Wednesday, April 04, 2007

கேள்வித்தாள் அவுட்: மாணவன் கைது

சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007

தேனியில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கேள்வித்தாள் திருடப்பட்ட விவகாரத்தில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு தலைமையாசிரியர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.10ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வு நாளை நடைபெறுவதாக இருந்தது. இதற்கான கேள்வித்தாள்கள் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள பள்ளி வளாக கட்டடத்தின் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிக்க ரெங்காபுரம் ராதாகிருஷ்ணன்,பாலக்கோம்பை நந்தகோபால் என்ற இரண்டு தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ராஜா என்ற காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து கேள்வித்தாள் திருடப்பட்டது தெரிய வந்தது. அல்லிநகர மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர் சிவபாண்டியன்தான் கேள்வித்தாளை திருடினார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். மேலும் கண்காணிப்பாளர்களாக செயல்பட்ட தலைமையாசிரியர்கள் இரண்டு பேரும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவாலாளி ராஜாவும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
visit

Monday, April 02, 2007

தாய்பால் தருவது எப்படி?

http://tamilparks.50webs.com

பிறந்த குழந்தைகளுக்கு புட்டி பாலை விட தாய்ப்பாலே சிறந்தது.
ஆனால் நம்மில் எத்தனை தாய்மார்களுக்கு முறையாக தாய்பால் கொடுக்க தெரியும்?
இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் தாய்பால் தரும் பழக்கமே இல்லை என்பது இன்னும் வேதனையான விஷயம். தாய்பாலின் மகத்துவம் தெரியாத பெண்களுக்காக நாங்கள் தரும் சிறப்பு 'டிப்ஸ்' இதோ...
* குழந்தை ஆரோக்கியம் மற்றும் பலத்தோடு வளர ஒரே சரியான உணவு தாய்பால்தான்.
* குழந்தை பிறப்புக்கு பின்வரும் இரத்தப்போக்கு, தாய்பால் தருவதால் நிற்கிறது.
* தொற்று நோய் எதுவும் வராமல் தடுக்கிறது இந்த தாய்ப்பால்.
* தாய்பால் எப்போதும் சுத்தமானது. தயார் நிலையில் இருப்பது, சரியான வெப்பநிலையில் உள்ளது.
* தாய்பால் தருவதன் மூல்ம் சில பெண்கள் உடனடியாக மீண்டும் கருத்தரிக்காமல் தடுக்கப்படுகிறார்கள்.
* இது தாயையும், சேயையும் அணுக்கமாயும், பாதுகாப்பாயும் உணர செய்கிறது.என்ன இக்காலத்து மாடர்ன் மங்கைகளே!தாய்பாலின் மகத்துவத்தை புரிந்துவிட்டீர்களா!

(மூலம் - வெப்துனியா)

இட ஒதுக்கீடு:ஜெ.புகாருக்கு கருணாநிதி பதில்

Publish your articles freely in http://tamilparks.50webs.com No.1 Tamil Webpage

2 ஏப்ரல் 2007
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மத்திய அரசு திறமையான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,முந்தைய ஜெயலலிதா அரசு கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல இன்னல்களுக்கு உள்ளாக நேர்ந்தது என்றும்,இதற்கு ஜெயலலிதா அரசு நியமித்த வழக்கறிஞர்கள்தான் காரணம் என சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுபோல நடித்துக் கொண்டு,அந்த கொள்கைக்கு மறைமுகமாக குழி தொண்டி கொண்டிருப்பவர்களை எப்போதுதான் இந்த நாடு அடையாளம் கண்டுகொள்ளப்போகிறதோ என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பாக 1993 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றிய விவரத்தை,ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது எடுத்துச் சொல்ல மறந்து விட்ட அதிமுக தலைவிக்கு இடஒதுக்கீடு பற்றியெல்லாம் அறிக்கைவிட எந்தவிதமான அருகதையும் இல்லை.27 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் 'நோஞ்சான் வக்கீல்' ஆஜரானதாக ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு உண்மை இல்லை.அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம்.அவர் யார் என்றால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில்,ஜெயலலிதாவிற்கு எதிராக ஆஜராகி வாதாடியவர்.அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் தனது அறிக்கையில் அந்த வழக்கறிஞரை 'நோஞ்சான் வக்கீல்' என அநாகரீகமாக ஜெயலலிதா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
visit http://tamilparks.50webs.com for more

டிராய் அதிரடி :தொலைபேசி கட்டணங்கள் குறையும்தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம்(டிராய்)இந்த கட்டண குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் தொலைபேசி சேவை வழங்குவதற்காக,இதுவரை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 37 சதவீதத்திற்கும் அதிகமாக வரி கட்டி வந்தது. இந்த வரியை இனி கட்ட வேண்டாம் என டிராய் இன்று அறிவித்துள்ளது.இந்த வரியை கட்டாததால்,நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படும் என டிராய் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த லாபத்தின் மூலம், தொலைபேசி கட்டணங்களை தற்போது இருப்பதை விட மேலும் குறைக்க முடியும் என்று டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.அதிலும்,குறிப்பாக ஐஎஸ்டி கால் கட்டணங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கட்டண குறைப்புகள் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.
(மூலம் - வெப்துனியா)Tuesday, March 20, 2007

வரலாறு படைத்தது இந்தியா : 413/5

போர்ட் ஆப் ஸ்பெயின்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 19 மார்ச் 2007

இந்திய பெர்முடா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 413 ரன்களை எடுத்து வரலாறு படைததுள்ளது.இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டிகளில் இந்தியாதான் அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ள பெருமையை தட்டிச் சென்றுள்ளது.டாஸ் வென்ற பெர்முடா அணி, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கங்குலி, உததப்பா களம் இறங்கினர். ஆனால் இரண்டாவ்து ஓவரிலேயே உத்தப்பா அவுட் ஆக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இந்நிலையில், கங்குலியுடன் ஜோடி சேர்ந்த சேவாக் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இவரைத் தொடர்ந்து கங்குலி தனது பங்குக்கு 89 ரன்கள் சேர்த்தார. சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டார். இதையடுத்து களமிறங்கிய யுவராஜ், தோனி கூட்டணி அதிக ரன்கள் சேர்ப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 38.1 ஓவரில தோனி பார்டன் வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிக்க, டக்கர் அழகாக கேட்ச் பிடித்து தோனியை அவுட் ஆக்கினார். இதற்கு முந்தைய ப்ந்தை சிக்ஸருக்கு விரட்டியது போல இந்த முறையும் முயற்சித்து அவுட் ஆனார். தோனி 29 ரன்களுக்கு அவுட் ஆக, யுவராஜ் சிங்குடன் கைகோர்த்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து, யுவராஜ் விஸ்வரூபம் எடுக்க பெர்முடா அணியினர் மிரண்து போயினர். பெர்முடா வீரர்களின் பந்து வீச்சை சிக்சஸர்களும், ப்வுண்டரிகளுமாக விரட்ட ஒரு கட்டத்தில் என்ன் செய்வதென்றே புரியாமல் பெர்முடா வீரர்கள் நிலை குலைந்தனர். யுவராஜ் சிங்கும் சதமடிக்க தவறி விட்டார். அதிரடியாக விளையாடிய இவர் 46 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதுவரை நிதானமாக விளையாடிய சச்சின், தனது அதிரடியை காட்ட பெர்முடா அணியினர் அரண்டு விட்டனர். 29 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சச்சின் களத்தில் இருந்தார். கேப்டன் ஆட்டத்தின் கடைசி பந்தை சிகஸருக்கு விரட்டி 7 ரன்களுடன் ஆட்டம் இழக்காம்ல் இருந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 413 ரன்கள் எடுத்தனர்.414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்கை பெர்முடாவுக்கு இந்தியா நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் 16 சிக்சர்களும், 31 பவுண்டரிகளும் அடித்து இந்தியர்கள் வெளுத்துள்ளனர். பெர்முடா சார்பில் பார்டன் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 31 ரன்களை உதிரிகளாக பெர்முடா அணியினர் விட்டுத் தந்துள்ளனர். இந்தியா மீது எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அணி இன்று சிறப்பாக செயல்பட்டுள்ள்து. மொத்தத்தில் இன்றைய போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.
(மூலம் - வெப்துனியா)
visit
http://tamilparks.50webs.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com

Thursday, March 08, 2007

வீரேந்தர் சேவாக் - ஜோதிடம்


பிறந்த தேதி : அக்டோபர் 20, 1978
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்களை குவித்து எதிரணியை திக்குமுக்காடச் செய்தவர்களில் சேவாக்கும் ஒருவர். அண்மையில், சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் போனாலும், நம்பிக்கையை தளரவிடாத அவர், இந்திய அணியில் இடம்பெற்று தற்போது உலக கோப்பையில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார். உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றதே அவரது முயற்சிக்கு ஓர் உதாரணம். முயற்சி மட்டுமின்றி, அன்பு, ஒழுக்கம், நற்பெயர் பெறுவதில் ஆர்வம் போன்ற பல்வேறு நற்குணங்களையும் தனனகத்தே கொண்டுள்ளவர். வன்முறையாளர்களையும், பிறரை அவதூறாக பேசுபவர்களையும் அவருக்கு ஒருபோதும் பிடிக்காது. அறிவியலை விட கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதேநேரத்தில், அவ்வப்போது பதற்றமடைவது அவரது இயல்பு. இந்த பொதுவான குணநலன்கள் யாவும் சேவாக்குக்கு மட்டும் இல்லை; அக்டோபர் 20-ல் நீங்கள் பிறந்திருந்தால், உங்களுக்கும் பொருந்தும். ஜனவரி, மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள், சேவாக்குக்கு மிகவும் நெருங்கியவர்களாக இருப்பர். (குறிப்பு : நண்பர் திராவிட் பிறந்தது ஜனவரி 11-ல்).மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில், சேவாக் தனது திறமையை நிரூபிக்கும் வகையிலான அதிக வாய்ப்பைப் பெறுவார். அதனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வார். தொடக்கத்தில் வெற்றி கிட்டாமல் போயினும், மாதத்தின் கடைசியில் பாராட்டுமழையில் நனைவார். குடும்பத்தில் இருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவினால் நன்மைகள் பல பெறமுடியும். மனவலிமைக்கு உறுதுணையாக உடல் வலிமையும் இருக்கும். சிறு காயம் ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் அது எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. மொத்தத்தில் மார்ச் மாதம் சேவாக்குக்கு மேன்மை மிகுந்த மாதம்.
சேவாக்கை செழிப்பாக்கும் எண்கள் : 1,2 மற்றும் 7

(மூலம் - வெப்துனியா)

Thursday, March 01, 2007

இந்திய அணி மே.இ.தீவுகள் பயணம்

மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மார்ச் 2007
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான இந்திய அணி நேற்றிரவு மேற்கிந்திய தீவுகள் புறப்பட்டது. மேற்கிந்திய தீவுகளில் வரும் 13-ம் தேதி 9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் திராவிட் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு மும்பையில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்த பவார், வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக இந்திய வீரர்கள் பிளேசர் உடையை அணிந்து போஸ் கொடுத்தனர். அதில், பி.சி.சி.ஐ துணைத்தலைவர் நிரஞ்சன் ஷா, பயிற்சியாளர் சேப்பல், உடலியக்க நிபுணர் ஜான் குளோஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அணியின் விபரம் ராகுல் திராவிட் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர் (துணை கேப்டன்), சவுரவ் கங்குலி, சேவாக், அகார்கர், தோனி, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், ஜாகீர் கான், கும்ப்ளே, முனாஃப் படேல், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், யுவராஜ் சிங் மற்றும் உத்தப்பா.
(மூலம் - வெப்துனியா)


visit http://tamilparks.50webs.com for more

Wednesday, February 28, 2007

தூய தமிழ் சொற்கள் என்பது எவை?

இதயம் சூரியகாந்தி திருப்தி போன்ற சொற்கள் தமிழ் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.சூரியகாந்தி-பொழுதுவணங்கிஇதயம்-மாங்காயீரல்திருப்தி-பொந்திகைஆனால் சிலர் கூறுகின்றார்கள் இவை தமிழ் இலக்கணத்தின்படி சரியாக இருப்பதால் இவை தமிழ் சொற்கள் என்று. இதில் எவை தூய தமிழ்சொற்கள் எவை வேற்றுமொழி சொற்கள் என்று எவ்வாறு இனங்காணுவது. உங்களுக்கு தெரிந்த தூய தமிழ்ச் சொற்களை நீங்களும் இணையுங்கள்.

visit http://tamilparks.50webs.com for more

Thursday, February 08, 2007

கொல்கட்டாவில் நாளை இந்திய - இலங்கை முதல் ஒரு நாள்!

புதன், 7 பிப்ரவரி 2007
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் கங்கூலியுடன் மீண்டும் இளம் வீரர் ராபின் உத்தப்பா களமிறங்கவுள்ளார்!
இப்போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ள வீரேந்திர சேவாக், நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்கப்படுவார் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய - இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்த முக்கிய போட்டித் தொடரில் இரு அணிகளும் தங்களுடைய அணிகளை முழுமைபடுத்திக் கொள்ளும் கடைசி வாய்ப்பாக இதனைக் கருதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் மோசமாக விளையாடிய காரணத்தினால் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், பிறகு அணியில் இருந்தும் நீக்கப்பட்ட வீரேந்தர் சேவாக், உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு நாளை முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் களமிறங்கிய உத்தப்பா சிறப்பாக ஆடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள சேவாக், நாளை சிறப்பாக விளையாடி தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய அணிக்கு புதிதாக ஒரு சவால் உருவாகியுள்ளது. அஜீத் அகார்கர், இர்ஃபான் பத்தான், யுவராஜ் சிங் ஆகியோர் நாளை ஆடுவார்களா என்பது உறுதியாகவில்லை. அஜீத் அகார்கருக்கு காய்ச்சல், இர்ஃபான் பத்தானிற்கு தோள்பட்டையில் காயம், யுவராஜ் சிங்கிற்கு முதுகில் பிடிப்பு என்று அணித் தலைவர் திராவிட் கூறியுள்ளார்.
எனவே நாளை களமிறங்கும் அணியை நாளை காலை தான் முடிவெடுத்து அறிவிக்கப் போவதாக திராவிட் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில், கங்கூலியுடன் உத்தப்பாவை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கி, வீரேந்தர் சேவாக்கை நடுக்கள ஆட்டக்காரராக களமிறக்க திராவிட் முடிவு செய்துள்ளார்.
இலங்கை அணியும் உலகக் கோப்பைக்கான தனது அணியை முடிவு செய்ய இத்தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அணித் தலைவர் மஹிலா ஜெயவர்தனே, முன்பை விட பலம் வாய்ந்த அணியாகவே இலங்கை அணி இந்தியா வந்துள்ளது என்றும், குறிப்பாக வேகப்பந்து வீச்சில் மிக பலமான நிலையில் இந்திய அணியை சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யாவும், குமார சங்ககாராவும் நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழு சோதனையை அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைத் தொடர்ந்து ஆடவரும் அட்டபட்டுவும், ஜெயவர்தனேயும், உப்புல் தாரங்காவும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்க வல்லவர்கள்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை 150 கி.மீ. வேகத்தில் வீசவல்ல லாசித் மலிங்கா தங்களுக்கு முக்கிய பலம் என்று ஜெயவர்தனே கூறியுள்ளார்.
மொத்தத்தில் நாளைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும். பகலிரவுப் போட்டியாக பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டியின் பந்துக்குப் பந்து வர்ணனையை ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை வெப்உலகம்.காம் உங்களுக்கு தொடர்ந்து வழங்கும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய அணி :
ராகுல் திராவிட் (அணித் தலைவர்), சௌரவ் கங்கூலி, வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங், அஜீத் அகார்கர், ஜாஹீர் கான், ஸ்ரீசாந்த், முனாஃப் பட்டேல், ராபின் உத்தப்பா, அனில் கும்ளே.
இலங்கை அணி :
மஹிலா ஜெயவர்தனே (அணித் தலைவர்), ஜெயசூர்யா, உப்புல் தாரங்கா, குமார சங்ககாரா, மார்வான் அட்டபட்டு, ரஸ்ஸல் ஆர்னால்ட், திலகரத்னே தில்ஷான், உப்புல் சந்தனா, சமிந்தா பண்டாரா, தில்ஹாரா ஃபெர்னாண்டோ, குலசேகரா, ஃபர்வீஸ் மஹ்ரூஃப், லாசித் மலிங்கா, எல்.பி. சில்வா, நுவான் சோய்ஸா.


visit webulgam for more

Tuesday, February 06, 2007

அரசாங்க வேலையா...... ஆகா ... பேஷ்,,,,,, பேஷ்,,,,,,

பையன் எம்.பி.ஏ. படித்திருக்கிறான். அவன் அப்பா ஒரு லட்சாதிபதி.
அவன் அம்மா வழியில் அவனுக்கு ஏகப்பட்ட சொத்து.
அழகானவன்.
ஒரே ஜாதிதான்.
நல்ல குணம் இருந்தாலும் பெண்ணைப் பெற்ற தந்தை அந்த பையனை மருமகனாக ஏற்க விரும்பவில்லை.

ஏன் என்று அறிய ஆவலா இங்கு சுட்டுங்கள்

Monday, February 05, 2007

இந்திய அணியில் மீண்டும் சேவாக்!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் : இந்திய அணியில் மீண்டும் சேவாக்! இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திரர் சேவாக்கும், வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளார்!
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத சேவாக், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள 4 ஒரு நாள் போட்டிகளில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார், இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்களுக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், முனாஃப் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர், ரமேஷ் பவார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சேவாக் ஒரு சிறந்த வீரர். அவருடைய ஆட்டத் திறன் குறையவில்லை, அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை என்றும், இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் நடுக்கள வீரராக களமிறங்குவார் என்றும் திலீப் வெங்சர்க்கார் கூறினார்.
இந்திய அணி :
ராகுல் திராவிட் (அணித் தலைவர்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்கூலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங், அனில் கும்ளே, அஜீத் அகார்கர், ஜாஹீர் கான், முனாஃப் பட்டேல், ஸ்ரீசாந்த்.

visit http://tamilparks.50webs.com for more

காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது!

திங்கள், 5 பிப்ரவரி 2007

தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பகிர்வு தகராறு வழக்கை கடந்த 16 ஆண்டுகளாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பை அளிக்கிறது!

1990 ஆம் ஆண்டு பிரதமராக வி.பி. சிங் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க காவிரி நதி நீர் பகிர்வு தகராறை தீர்த்து வைக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் அது இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியது. அதன்படி, ஜூன் முதல் மே வரையிலான நீராண்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்கின்ற அட்டவணையையும் தனது இடைக்கால உத்தரவில் அளித்தது.

இந்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர, கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆயினும், ஒரு நீராண்டில் கூட நடுவர் மன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் அளவை கர்நாடகா திறந்துவிடவில்லை. எப்பொழுதெல்லாம் காவிரி நதி உற்பத்தித் தலங்களில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ, அப்பொழுது மட்டும் அணை நிரம்பி கூடுதலான உபரி நீரை காவிரியில் திறந்துவிட்டு அதனால் மட்டுமே தமிழ்நாடு தண்ணீரை பெற்று வந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் அதிக மழை பெய்ததால் கர்நாடகத்தில் காவிரி மீது கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்ததால் தொடர்ந்து உபரி நீர் தமிழ்நாட்டிற்கு வந்து அதனால் மேட்டூர் அணை அதன் முழு அளவிற்கு நிரம்பியது.

இந்த நிலையில், நீதிபதி என்.பி. சிங், நீதிபதிகள் என்.எஸ். ராவ், சுதிர் நாராயண் ஆகியோர் கொண்ட காவிரி நடுவர் மன்றம் இன்று மதியம் இறுதித் தீர்ப்பு அளிக்கிறது.

காவிரி நதி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் மாநிலங்கள் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்கின்றன, அதற்கு எவ்வளவு நீர் தேவை, காவிரியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நீர் வருகிறது என்பதனை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நீராண்டில் பெறவேண்டிய தண்ணீரின் அளவை காவிரி நடுவர் மன்றம் அமைத்த மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி காவிரி டெல்டா பகுதியில் 24.5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறும் தமிழ்நாட்டிற்கு 395 டி.எம்.சி. தண்ணீரும், 18.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெறும் கர்நாடகத்திற்கு 250 டி.எம்.சி. தண்ணீரும், கேரளத்திற்கு 33.4 டி.எம்.சி. தண்ணீரும், புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்று மதிப்பீட்டாளர் குழு கூறியுள்ளது.

ஒரு நீராண்டில் சராசரியாக காவிரியில் 740 டி.எம்.சி. தண்ணீர் வரத்து உள்ளது என்கின்ற அடிப்படையில் இந்த பகிர்வு அளவை மதிப்பீட்டாளர் குழு அறித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதித் தீர்ப்பை அளிப்பது மட்டுமின்றி, அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட வேண்டும் என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலங்களும் ஏற்கக் கூடியதாக இருக்கும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் கல்யாணம் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், இடதுசாரிகளும் வலியுறுத்தியுள்ளன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க கர்நாடக தலைநகர் பெங்களூரிலும், மற்ற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

source from webulagam
visit http://tamilparks.50webs.com for more

Saturday, February 03, 2007

படைப்புகள் வலைத்தளத்தில் இலவசமாக வெளியிட வரவேற்கப்படுகிறது

உங்களுக்கு என தனி வலைத்தளம் இல்லைய அல்லது வலைத்தளம் இருந்தும் அமோக வரவேற்பு இல்லையா
கவலையை விடுங்கள்
உங்கள் படைப்புகளை வலைத்தளத்தில் வெளியிட விரும்புகிறீர்களா அதை இலவசமாக தமிழ் தோட்டம் நிருவாகம் செய்து தருகிறது. நீங்கள் உங்கள் படைப்புகளை (உங்கள் பெயர், மற்றும் உங்கள் புகைப்படம் வெளியிட விரும்புவீர்களானால் அதனுடன், உங்களுக்கு வலைத்தளம் இருந்தால் உங்கள் வலைத்தள சுட்டியுடன்) tamilparks at gmail.com அனுப்புங்கள் அது தமிழ் தோட்டம் வலையில் இலவசமாக வெளிவரும். இங்குள்ள சுட்டியின் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு அமோக வரவேற்ப்பு வரப்போகிறது.
http://tamilparks.50webs.com/ உங்களுக்கு இங்கு தமிழில் தட்சு செய்யலாம்

visit http://tamilparks.50webs.com for more about Thenlai Raman Stories, Tamil Jokes, Tamil Articles, Tamil Pothu Areevu.

Wednesday, January 31, 2007

மே.இ. தீவுகள் : 36 / 2 (9)

மிடில் - ஆஃப் ஸ்டம்பிற்கு மேலெழும்பி வந்த பந்தை தூக்கி அடித்தார் சந்தர்பால். அதனை பேக்வர்ட் பாய்ண்டில் பௌண்டரிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்த ஹர்பஜன் ஓடிவந்து பிடித்துவிடுகிறார். சந்தர்பால் ஆட்டமிழந்தார். மே.இ. அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

for online commentry click here

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் 4வது ஒரு நாள் போட்டி : வதோதரா! வர்ணனை : கா. அய்யநாதன் from webulagam

visit http://tamilparks.50webs.com for more
இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் 4வது ஒரு நாள் போட்டி : வதோதரா! வர்ணனை : கா. அய்யநாதன்

visit http://tamilparks.50webs.com for more

Saturday, January 27, 2007

உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார்.

இந்திய அணி 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த உத்தப்பா அவசரப்பட்டு கெய்லின் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்துவிட்டார். 40 பந்துகளில் 2 சிக்ஸர்களுடனும், 11 பௌண்டரிகளுடனும் உத்தப்பா எடுத்த 70 ரன்களால் இந்திய அணி 12வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டிவிட்டது. மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார் உத்தப்பா.

உத்தப்பா 33 பந்துகளில் 8 பௌண்டரிகள், 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டியுள்ளார்.

உத்தப்பா 33 பந்துகளில் 8 பௌண்டரிகள், 1 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டியுள்ளார்.

9வது ஓவர் . . . எம்ரிட் தொடர்கிறார்.முதல் பந்து . . . வைட். 63/1

முதல் பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வருகிறது. தடுத்தாடுகிறார் ரெய்னா.

2வது பந்து . . . மிடில் - ஆஃப் ஸ்டம்பிற்கு வந்த பந்தை மிட் ஆஃபில் அடித்துவிட்டு 1 ரன் எடுக்கிறார் ரெய்னா. 64/1

3வது பந்து . . . முன்னால் வந்து மிட் ஆனில் தடுத்தாடுகிறார்.

4வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்தை மிட் விக்கெட்டின் மீது தூக்கி அடிக்கிறார் உத்தப்பா. சிக்ஸர். உத்தப்பா அரை சதத்தை எட்டிவிட்டார். சரியான அதிரடி ஆட்டம். 70/1

5வது பந்து . . . ஸ்கொயர் லெக்கில் கிளான்ஸ் செய்துவிட்டு 1 ரன் எடுக்கிறார். 71/1

6வது பந்து . . . கிளான்ஸ் செய்ய முயன்றார் ரெய்னா. பேடில் பட்டுச் செல்கிறது. 4 ரன்கள். 76/1

இந்தியா : 61 / 1 (8)

இந்தியா : 61 / 1 (8)
8வது ஓவர் . . . பாவல் தொடர்கிறார்.
முதல் பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கட் செய்ய முயன்றார் ரெய்னா. முடியவில்லை.
2வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கவரில் அடிக்கிறார். லாரா தடுக்கிறார். 1 ரன். 46/1
3வது பந்து . . . மிடில் - லெக் ஸ்டம்பிற்கு வந்த பந்தை மிட் விக்கெட்டில் அடிக்கிறார் உத்தப்பா. 2 ரன்கள். 49/1. உத்தப்பா - 32
4வது பந்து . . . ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி வந்த பந்தை முன்னால் வந்து எக்ஸ்ட்ரா கவரில் சாத்துகிறார் உத்தப்பா. பௌண்டரிக்குப் பறக்கிறது பந்து. இந்தியாவின் எண்ணிக்கை அரை சதத்தை கடக்கிறது. 53/1.
5வது பந்து . . . மிடில் - லெக் ஸ்டம்பிற்கு பிட்ச் ஆன பந்தை முன்னால் வந்து லாங் ஆனில் அடிக்கிறார் உத்தப்பா. தடுக்க முடியவில்லை. 4 ரன்கள். அருமையாக அடித்தார். 57/1
6வது பந்து . . . முன்னால் வந்து நேராக அடிக்கிறார் உத்தப்பா. இம்முறையும் தடுக்க முடியவில்லை. 4 ரன்கள். 61/1
இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டிற்கு 35 பந்துகளில் 50 ரன்களை எடுத்துள்ளனர். அதில் உத்தப்பா அடித்தது மட்டும் 40 ரன்கள். ஓவர் முடிகிறது. (0,0,1,4,4,4)
visit http://tamilparks.50webs.com for tamil jokes tamil stories tamil articles

Saturday, January 20, 2007

காதல் தூதுவனாகும் ரூபாய் நோட்டுகள்

காதல் தூதுவனாகும் ரூபாய் நோட்டுகள் காற்றில் பறக்கவிடப்படும் உத்தரவுகள்


ரூபாய் நோட்டுகளில் எழுதவோ, பின் செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ள போதும், இன்னும் சிலர் ரூபாய் நோட்டை காதல் தூதுவனாகவும், மினி கடிதமாகவும் பயன்படுத்தி வருவது கவலையளிப்பதாக உள்ளது.


like more articles visit click here

Friday, January 12, 2007

இதய நோய்கள் வராமல் தடுக்க

இதய நோய்கள் வராமல் தடுக்க குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, சாப்பிட, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட குடும்பத்தா¡¢டம் கலந்து பழக என நேரத்தை திட்டமிடுங்கள்.பதட்டத்திற்கு இடம் தராதீர்கள். பிரயாணம் செய்யும் முன்பே பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அந்த அந்த இடங்களுக்கு முன் கூட்டியே சென்று விடுவது நல்லது. அப்படி சா¢யான நேரத்திற்கு செல்லாமல் வண்டிகளை தவற விட்டு விட்டாலும் கவலைப்படாமல், புலம்பாமல் அடுத்த வண்டிக்குச் செல்லங்கள்.கனமான பொருட்களை நின்றுகொண்டே தூக்காமல், உட்கார்ந்து கொண்டு தூக்குங்கள். இது இதயத்திற்கு நல்லது.உணவு உண்ணும் பொழுது ரசித்து ருசித்து உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது கவலைதரும் பேச்சுக்கள் பேச வேண்டாம்.நண்பர்கள் வட்டத்தை பொ¢தாக்கி எப்பொழுதும் கலகலப்பாக இருங்கள் . தனிமையை தவிர்க்கவும்.திடுக்கிடச் செய்யும் விஷயங்களில் நிதானமாக செயல்படவும்.இரவு படுக்கச் செல்லும் பொழுது நடந்தவைகளை, நடக்கப்போறவைகளை பற்றி சிந்திக்காமல் மனதை வெறுமையாக்கி நிம்மதியாக தூங்குங்கள்.புகை பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.வயது எதுவானலும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை மற்றும் மாலையில் கட்டாயம் நடை பயிற்சி அவசியம்.ஸ்கூட்டா¢ல் செல்வதற்குப் பதில் சைக்கிளில் செல்வது மிக நல்லது.புத்தம் புதிய பழங்கள், நார்சத்து மிகுந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.உணவுப் பொருளில் வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை தேவையானல் மிக சிறிய அளவு சேர்க்கவும் பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சி வகைகளை தேர்ந்தெடுத்து வேகவைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொ¡¢த்தச் சாப்பிடுவது கெடுதி. முட்டையிள் வெண்கருவை சாப்பிடலாம். மஞ்சல் கருவை தவிர்ப்பது நல்லது. சூ¡¢யகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், சோயபீன்ஸ் எண்ணெய்களைப் அளவோடு பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச் சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ, காபி இவைகளை சாப்பிடலாம். சர்கரைக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது நல்லது.ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. வீட்டில் எளிமையாகச் சமைத்து உண்பதே நல்லது. 'சாட்" உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை பழக்கக் கூடாது.ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயமாக இதய பா¢சோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கொரு முறை இ.சி.ஜி. எடுத்துக் கொள்ள வேண்டும்.மன அழுத்தம் இதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடல், உள்ளம், உணர்வுகள் அமைதி கொள்ள யோகா செய்வது நல்லது. மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லா இயற்கை உணவு, தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியன இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுணர்கள்.

To get more Tamil Articles, Jokes, and Stories visit here

Thursday, January 11, 2007

Free Articles Publish in Webpage without any Money

Hi Dear Friends,
A new webpage have opened http://tamilparks.50webs.com here any one can send the tamil articles like jokes or stories or any good articles in tamil .... are published freely without any money with your name and webpage and photo if you wish...

so please hurry up soon........

for more visit http://tamilparks.50webs.com and send your articles to the below address

tamilparks at gmail.com