Monday, November 20, 2006

குட்டிக் கதை

சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். அன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.

தொலைக்காட்சி தொடர்களில் மல்லிகா

அஞ்சலி என்னும் தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மல்லிகா நடித்துவருகின்றார். இத்தொடர் - தி அனிக்ஷா புரொடக்சன் கம்பெனியின் தயாரிப்பாகும். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. C.J.பாஸ்கர் இத்தொடரை இயக்குகின்றார். இத்தொடருக்கு திரைக்கதை எழுதியிருப்பவர் சுபா. இசை கிரண். மல்லிகாவிற்கு வாழ்த்துக்கள்!

Please join in our Friends Circle Palace Register Here

Friday, November 10, 2006

புது பொலிவுடன் தமிழ் தோட்டம்

இப்போது புது பொலிவுடன் திகழ்கிறது தமிழ் தோட்டம்
தமிழ் ஜோக் தமிழ் கதை, தமிழ் கட்டுரை மற்றும் உங்கள் பகுதி விரைவில்
நீங்களும் உங்கள் தொகுப்புகளை அனுப்பலாம் இலவசமாக வெளியிடப்படும்.

Indian Friends Circle Palace is open to all you can also join here

Thursday, September 21, 2006

சிக்கனத்திற்கு சில வழிகள்

ரயிலேறப்போன கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்தான் வீட்டுக்குள் இருந்த மனைவி கதவைத் திறக்காமலே "என்ன விஷயம்" எனக் கேட்டாள்

"ரிசர்வேஷன் டிக்கெட்டை வீட்டில் மறந்து வச்சுட்டு போயிட்டேன். அதனை எடுக்க வந்தேன்" என்றார்

"கதவை அடிக்கடி பூட்டித் திறந்தால் கதவு தேய்ந்து விடும். எனவே ஜன்னல் வழியாக டிக்கெட்டைத் தருகிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்" என்றாள் மனைவி

டிக்கட்டை ஜன்னல் வழியாகக் கொடுத்தாள். கணவன் பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தான்.

"என்னங்க..." என்றாள்
"ம்...." என்றான்

இப்படி அடிக்கடி நடந்தால் செருப்பி தேய்ந்துவிடும். செருப்பை எடுத்து பைக்குள் போட்டுவிட்டு நடந்து போங்கள்" என்றாள் மனைவி

எப்படி இருக்கு.................

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. சிக்கனம் பண்ணி எவ்வளவு சேமிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

ஒன்றரை ரூபாய் ஜாங்கிரியில் பாதி மீதி வைத்தால் முக்கால் ரூபாய் வீணாகிறது.

சிக்கனம் என்பதைக் காட்ட முடியாத இடங்களும் உண்டு. 14 முழச் சேலை உடுத்தும் மனைவியை "சிக்கனம்" என நினைத்து 4 முழச் சேலை உடுத்தச் சொல்வது நல்லதா ?

நல்ல படுக்கை விரிப்புகள், நல்ல தலையணை இவற்றை நாம் அன்றாடம் வாங்கவில்லை. எப்போதாவது வாங்குகிறோம். இதில் சிக்கனம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

சிறுகக்கட்டி பெருக வாழ் என்பது பழமொழி

how to get success in life click here

Friday, September 15, 2006

வயதானவர்கள் வாழ்க கதை பகுதி 1

வயதானவர்கள் வாழ்க பகுதி 1 (படித்ததில் பிடித்தது நகைச் சுவைத் தென்றல் பொ. ம. ராசமணி)

ஒரு பாரசீக மன்னன் தனது பரிவாரங்களோடு இளைஞர்களை அழைத்துக் கொண்டு இஸ்தான்பூரில் இருந்து கப்பர்நாகூம் பட்டிணத்திற்கு புறப்பட்டான். மொத்தம் ஏழு நாள் பயணம்.

பாரசீக மன்னனின் தாத்தா உடலை புதைத்த இடம் தான் கப்பர்நகூம். தாத்தா இறந்த நூறாவது நாள் நினைவு சடங்கு அங்கு நடத்த வேண்டும். பாலைவனப் பகுதி என்பதால் "இளைஞர்கள் மட்டுமே அந்தப் பயணத்தில் பங்கு பெற வேண்டும்" என மன்னன் கண்டிப்பாக கூறிவிட்டான்.

பயணம் ஆரம்பமானது. முதல்நாள் முடிவதற்குள் பயங்கர பாலைவனப்புயல். புயலில் ஓட்டபங்கள் திசை மாறின. மன்னனும் சிலரும் வழிமாறி விட்டனர். வழி மாறிய பின் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒட்டகங்களில் கொண்டு வந்த தண்ணீர் காலியாகி விட்டது. தாகத்திற்கு தண்ணீர் இல்லை.

தண்ணீர் தாகத்தால் சிலர் துவண்டனர். சிலர் இறந்தனர். பாரசீக மன்னன் திண்டாடினான். ஆனால் இரு நாட்கள் கூட தண்ணீர் இல்லாமல் தாக்கு பிடிக்க முடியவில்லை.

மன்னன் படும் கஷ்டத்தைப் பார்த்து, "மன்னா....... தண்ணீர் இருக்கும் இடத்தை நான் சொல்கிறேன். இங்கிருந்து தென்கிழக்காக இரண்டு மைல் தூரம் சென்றால் தண்ணீர் கிடைக்கும்" என்றான் வயதில் குறைந்த இளைஞன்

அவன் பேச்சை நம்பி அவன் குறிப்பிட்ட தூரம் நடந்து வந்தனர். என்ன ஆச்சரியம் அங்கு தண்ணீர் தடாகம் இருந்தது.

"உனக்கு எப்படித் தெரியும்?" என்று மன்னர் கேட்டார்

அவன் என்ன சொன்னான் தெரியுமா கதை பகுதி 2-ல் அடுத்தநாள் படியுங்கள்

இனிய கதைகள் நகைச்சுவை துணுக்குகளுக்கு

Saturday, September 02, 2006

welcome to TAMIL PARK

Tamil Parks with Tamil Jokes, Tamil Articles, Tamil History, Tamil Resources are updated and started a forum also u can share you school life and computer life and share the computer or software problems and solve the problems also

Click here for the FORUM

Tuesday, August 22, 2006

Disussion Board

http://www.funworld.frih.net/forum/member.php?action=register a new discussion board is introducted so please join and enjoy by chatting with online and offline friends and solve the problems.

Friday, July 28, 2006

ஆன்லைனில் பாதுகாப்பான பணபரிமாற்றத்திற்கு சில ஆலோசனைகள்

பண பரிமாற்றத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த நிலை மாறி தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் இணைய வழியில் விரைவாகவும் எளிதாகவும் வங்கி கணக்கை கையாளுதல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தும் நாம் செய்யும் சிறு தவறுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவற்றை தவிர்த்து இணைய வழியில் வங்கி கணக்குகளைக் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கையாள சில குறிப்புகளைக் காண்போம்.

இணைய வழியில் கணக்குகளை கையாள்பவர்களுக்காக வங்கிகள் பல கொள்கைகளையும் குறிப்புகளையும் தங்கள் இணைய தளங்களில் பதிப்பித்திருக்கிறார்கள். இவற்றை நாம் படிக்க தவறி விடுகிறோம். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும். எந்தவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன என்பன போன்ற தகவல்களை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக இணைய வழியில் கணக்குகளை கையாளும் போது பாதுகாப்பு குறியீட்டு சொல்லை (Password) மிக கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறரால் ஊகிக்க முடியாத வகையில் எண்ணும் எழுத்தும் கலந்து இவற்றை உருவாக்குவது மிக அவசியம். இப்படி உருவாக்கிய சொற்களை காகிதங்களில் எழுதி வைப்பதை தவிர்த்து விடுங்கள். அதே போல கணக்கு விபரங்களை காகிதங்களில் எழுதி வைப்பதையும் தவிர்த்தல் நல்லது. இதனால் நம் கணக்கில் உள்ள பணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வங்கி கணக்கில் பணம் இல்லாத போது பல நண்பர்கள் தங்களுக்குள் வேடிக்கையாக வங்கி விபரங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதுவே ஆபத்தாக சில வேளைகளில் முடிந்து விடுவதும் உண்டு. எனவே பொது இடங்களில் வங்கி விபரங்களை யாரிடமும் தெரிவித்தல் நல்லதல்ல. கணிணிகளில் ஆண்டி-வைர°, பயர்வால் மற்றும் ஆண்டி-°பைவேர் போன்றவற்றை நிறுவி கணிணி தகவல்கள் திருட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தனிப்பட்ட முறையில் கணிணிகளை உபயோகித்தாலும் கூட செய்திகளை மறைமுகமாக சேமித்து வைக்கும் வசதிகளை (Cookies) ஏற்றுக் கொள்ளக் கூடாது. கூடிய வரையில் உங்கள் கணக்கை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கொரு முறையேனும் சரி பார்த்து வருவது நல்லது. இதனால் அனுமதி பெறாதவர்களின் நுழைவு இருக்கிறதா என்பதை அறியலாம்.

இணைய வழியில் வங்கி கணக்குகளை கையாளும் போது அவசரமோ பதற்றமோ இல்லாத மனநிலையில் இருங்கள். அதேபோல பல இணைய பக்கங்களை திறந்து வைத்திருப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இவற்றால் வங்கி கணக்குரிய தகவல் திரையை மூடாமல் மறந்து இருந்து விட வாய்ப்புள்ளது.

நீங்கள் இணைய மையங்களில் வங்கி கணக்குகளை கையாளும் போது உங்கள் அருகிலோ அல்லது பின்புறமோ யாரும் இல்லாதபடி கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ கண்ணாடிகள் இருந்தால் கூட அவ்விடங்களில் வங்கி கணக்குகளை கையாள்வதை தவிர்த்து விடுவது நல்லது.

நம் சேமிப்பை பாதுகாக்க நம் முயற்சிகள் தானே கை கொடுக்கும்! சில சிறிய பயிற்சிகள் பல பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும் என்பதால் விழிப்புடன் இருப்போம்! சேமிப்பை காப்போம்!

Tuesday, July 25, 2006

ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை

ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான CANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது.

அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும்.

இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என்ற கள விரிவுடன் இருக்கும் இணையதளங்களில் ஆபாசம் இருக்கும் என்று சொல்ல முடியுமே தவிர அந்த விரிவு இல்லாத தளங்களில் ஆபாசமே இருக்காது என்ற உத்தரவாதத்தினை நம்மால் கொடுக்க முடியாது. எனினும் இந்த யோசனை ஆபாச இணைய தளங்களில் இருந்து சிறுவரை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஏராளமான பெற்றோர்களுக்கு ஒரு சரியான திசையிலான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்.

Monday, July 17, 2006

நெஞ்சம் மறக்குமோ?

http://newworld.50webs.com

பிழாவில் உடன் கள்ளு,
கிடாய்ப் பங்கு, நுங்கு,
ஆடிக்கூழ், கீரிமலை,
பாபநாச யாத்திரைகள்,
தோடியில் சீக்காய்,
நள்ளிரவு முழு நிலவு,
வேலி எல்லாம் குளை நிரம்பி
பூவரசில் மசுக்குட்டி,
சோலிதான்,
ஆனாலும் முட்கிழுவை
இலை தேச்சு
சுடு சாம்பல் போட்டு
இழுக்கையில் தோல் மீது
தடிச்சுக் கடிச்சாலும்,
சோறியேக்கை
தோன்றுகின்ற
சுகமான அனுபவங்கள்.

பின்னேரம் யாழ்தேவி
பிடிச்சால்
மறுநாளே அந்நேரம்
கொழும்பால்
மீண்டூர் வருகின்ற
என்ன ஓர் வாழ்க்கை!

இன்னும் எத்தனையோ,
எத்தனையோ,
இழந்தாலும்,
'நெஞ்சால்
இழக்கேலா ஞாபகங்கள்"
எல்லாம் போயிப்ப
இருண்ட பெருவெளி ஆகி
சல்லடையாய்
நம் தேசம்
சபித்தது போல்....
இப்ப.....
வஞ்சகம் அறியாத
எஞ்சிய பனை மரங்கள்
வட்டிழந்து, வடிவழிந்து
எம்மைப் போல் நிற்கிறது.
உடைந்து சிதறி
அத்திவாரம் மேல்வந்து
குடைந்த பெருங்குழியாய்
வீடுகள் கிடக்கிறது.
அடிக்கடி அலறல்கள்
அனுதாப முணுமுணுப்பு.

துடித்திறந்தும் உரிமை
கேட்கேலா சில உடல்கள்,

இனம் புரியா ஓர் அமைதி
நாளுக்கு நாள் வேறுபடும்.
சனம் பழகி, இதனைச்
சட்டை செய்யாதொதுங்கும்,
ஊரின் நிம்மதியோ
நிசப்தம் போற் பொருளில்லை,
ஆனால்
'வேரின் பக்கமென
விழுதான தியாகங்கள்
இன்றும் உரமாக
இருப்பறிந்த நிலையாலே
என்னைப் போலவே
உணர் வோடு.....

'திருக்குமரன் கவிதைகள்' தொகுப்பிலிருந்து

Friday, July 14, 2006

ஜிடேனை புகழுகிறார் மாட்டராஸி

ஜிடேனுக்கு தங்க பந்து விருதுக்கு தேர்வு செய்தது சரியே என மாட்டராஸி சொலுகிறார்

Thursday, July 13, 2006

வெற்றி தோல்விகளுக்கு மனமே காரணம்.

நான் தொல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி கூற வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது? நேரம் கிடைக்கவில்லை, ஆகவே நான் இதில் தோல்வி அடைந்துவிடுவோமோ என் மனதில் நினைத்தேன்........ஆனாலும் மனதில் ஒரு வெறி இருந்தது. எப்படியாவது.......... இதை வலையில் வெளியிட வேண்டும் என்று. அது இன்று தான் வெற்றி பெற்றது.

உலக வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். "கல்வி கரையில" என்று இதனாலேதான் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவயதில் பிறந்த வீட்டிலேயுள்ள பெற்றோரிடமும், அங்கேயுள்ள குடும்பத்தாரிடமும் பல செய்திகளை கற்றுக் கோள்கின்றோம். அதன் பின்னர் பள்ளிக்கூடங்களில் சென்று ஒரு பொதுக்கல்வியைப் பெறுகின்றோம். இதன் பின்னர் ஏதாவது ஒரு தொழிலுக்கான சிறப்புக் கல்வியையும் பயிற்சியையும் பெறுகின்றோம். இதனைத் தொடர்ந்து குடும்ப வாழ்வு சமூக வாழ்வு, என பல வகையான அறிவுகளை பெறுகின்றோம்.

உலகில் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளிலே ஈடுபடுவதனால், ஒருவருக்கொருவர் போட்டிகள் இயல்பாகின்றன. இதனால் வெற்றி தோல்விகளும் இயற்கையாகின்றன.

உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்தில் மன உறுதி வேண்டும். இதற்கேற்றப்படி நடந்து கொள்ளவும் முயல வேண்டும். இதைச் சிதைக்கும் அல்லது தடுக்கும் வேறு நோக்கங்களுக்கு முதன்மை தருகின்வர்கள் உலகை சார்ந்த வாழ்வில் வெற்றி பெற முடியாது. வாழ்வின் வெற்றிக்கான செல்வத்தின் பெருக்கத்தையோ, அல்லது ஆதரவான துணை வசதிகலையோ பெற முடியாது.

தாங்கள் உயர்வாகப் போற்றி மதிக்கும் நோக்கங்களையும், பண்புகளையும், கோட்பாதுகளையும் நடைமுரை உலக வாழ்விலேயும் கடைப்பிடிக்க முயல்பவர்கள் பெறும்பாலும் உலகில் தோல்வியையே சந்திப்பார்கள். இவைகளையும் உலகப் போக்கோடு இணைத்துக் கொண்டு உலகத்தோடு, ஒட்டி வாழ்வதிலே கருத்துச் செலுத்தினால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தோல்வியை மறந்துவிடுங்கள்.

தொல்வியைப் பற்றி நினைத்து, வேதனைப்பட்டுப் புலம்புகிறதை அடியோடு மறந்து விட வேண்டும். இனி எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கப் பழ வேண்டும்.

"மாடிப் படியில் ஏறும் போது, மாடிக்குப் போய்ச் சேர்வதையே நினைத்துப் போக வேண்டும். கால் தவறி உருண்டு விழுந்தால் எந்த டாக்டரிடம் போவது என்பதை பற்றி ஏன் நினைக்க வேண்டும்.

Monday, July 10, 2006

தோல்வியைத் தவிர்ப்பதற்கு வழிகள்

அக்கறையோடு செய்யாத எந்தச் செயலும் வெற்றியைத் தருவதில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எந்தச் செயலானாலும் அதில் பூரணமான அக்கறையோடு ஈடுபடும்போது அது வெற்றியையே தவறாமல் தரும்.

மனச் சோர்வுடனோ, உடலில் களைப்புடனோ, அக்கறையற்ற தன்மையுடனோ ஒன்றைச் செய்வதைவிடச் செய்யாமல் ஒத்திப் போதுவதே நல்லது.

தன்னை உணர்ந்து, தான் செய்யப் போகும் பணியை உணர்ந்து, செய்கின்ற காலத்தையும் இடத்தையும் சூழ்நிலையையும் பொருத்தமாகத் தேர்ந்து எதையும் செய்வதற்குத் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் ஒருமித்த மனத்துடன், வெற்றியில் முழு நம்பிக்கையுடனும் தொடர வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் முயற்சி சிறிதானாலும் பெரிதானாலும் வெற்றியையே காண்பார்கள். தோல்வியைக் காணவே மாட்டார்கள்.

மிகமிகச் சாதாரணமானவர்கள் கூட இந்த உறுதியான தன்மைக்ளால், உலகமே வியக்கும் பல காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். இவர்களுடைய மன உறுதியை அனைவரும் பெற முயல வேண்டும்.

Monday, May 22, 2006

+2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்

+2 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள் மேலும் பல சாதனைகள் புரிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

Application Form For "Lok Sabha Election"

1.Name of Candidate: _______________________

2.Present Address:
(i.) Name of Jail: _______________________
(ii.) Cell Number: _______________________

3.Political Party: _______________________ *List ONLY the Last Five
parties in Chronological (Order)

4.Sex: [ ]
A- Male
B- Female
C- Mayawati
D- Uma Bharathi

5.Nationality: [ ]
A- Italian
B- Indian

6.Reasons for leaving last party (circle one or more)
A- Defected
B- Expelled
C- Bought out
D- None of above
E- All of above

7.Reasons for contesting elections (circle one or more)
A- To make money
B- To escape court trial
C- To grossly misuse power
D- To serve the public
E- I have no clue
(If you choose "D, attach Certificate of Sanity from a Recognized
Government Psychiatrist)

8.How many years of public service experience do you possess?
A- 1-2 yrs
B- 2-6yrs
C- 6-15yrs
D- 15+yrs

9.Give details of any criminal cases pending against you (Use as many
Additional Sheets as you want)

10.How many years have you spent in Jail? [ ]
(Do not confuse with question 8)
A- 1-2 years
B- 2-6 years
C- 6-15 years
D- 15+years

11.Are you involved in any financial scams? [ ]
A- Why not
B- Of Course
C- Definitely
D- I deny it all
E- I see a foreign hand.

12.What is your Annual Corruption Income? [ ]
A- 100-500 Cores
B- 500-1000 Cores
C- Overflow...
(Convert all your $ earning from Hawalat etc to Rupees)

13.Do you have any developmental plans for India in mind?
[]
A- No
B- No
C- No
D- No

14.Describe your achievements in space provided:
[_________]

Friday, May 12, 2006

தோல்வியை சந்தித்த ஒன்பது அமைச்சர்கள்

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்ற

ஒன்பது அமைச்சர்கள் படுதோல்வி

அடைந்துள்ளனர். ஜெயலலிதா

அமைச்சரவையில் இருபத்து ஆறு பேர்

அமைச்சர்களாக இருந்தனர். அதில்

பொன்னையன், வி.சி. ராமசாமி,

இன்பத்தமிழன், அண்ணாவி ஆகியோருக்கு

சீட்டு வழங்கப்படவில்லை. அதில்

இன்பத்தமிழன், திமுக வில் இணைந்தார்.

இந்த தேர்தலில் இருபத்து இரண்டு

அமைச்சர்கள் போட்டி போட்டனர்.

இவர்களில் பதின் மூன்று பேர் வெற்றி

பெற்றனர்.

தோல்வியை தழுவிய அமைச்சர்கள் விபரம்.

வளர்மதி
சோமசுந்தரம்
விஜயலட்சுமி பழனிச்சாமி
பி.வி. தாமோதரன்
மில்லர்
ராமச்சந்திரன்
ராதாகிருஸ்ணன்
நயினார் நாகேந்திரன்
தளவாய்சுந்தரம்

ஆகியோர்.

Thursday, May 11, 2006

தேர்தல் முடிவுகள் in tamil

1. ராயபுரம் டி.ஜெயக்குமார் அஇஅதிமுக
2. துறைமுகம் க.அன்பழகன் திமுக
3. டாக்டர்.ராதாகிருஷ்ணன்
நகர் சேகர்பாபு.பி.கே அஇஅதிமுக
4. பூங்கா நகர் சீனிவாசன்.கே அஇஅதிமுக
5. பெரம்பூர் (தனி)


6. புரசைவாக்கம் வி.எஸ்.பாபு திமுக
7. எழும்பூர் (தனி) பரிதி இளம்வழுதி திமுக
8. அண்ணா நகர் ஆற்காடு வீராசாமி திமுக
9. தியாகராய நகர் கலைராஜன்.வி.பி அஇஅதிமுக
10. ஆயிரம் விளக்கு மு.க.ஸ்டாலின் திமுக
11. சேப்பாக்கம் மு.கருணாநிதி முன்னணி திமுக
12. திருவல்லிக்கேணி பதர் சயீத் அஇஅதிமுக
13. மயிலாப்பூர் எஸ்.வி.சேகர் அஇஅதிமுக
14. சைதாப்பேட்டை செந்தமிழன்.ஜி அஇஅதிமுக
திருவள்ளூர் மாவட்டம்
15. கும்மிடிப்பூண்டி


16. பொன்னேரி (தனி)


17. திருவொற்றியூர்


18. வில்லிவாக்கம் ப.ரங்கநாதன் திமுக
28. பூந்தமல்லி


29. திருவள்ளூர்


30. திருத்தணி


31. பள்ளிப்பட்டி


காஞ்சிபுரம் மாவட்டம்
19. ஆலந்தூர் அன்பரசன்.டி.எம் திமுக
20. தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா திமுக
21. திருப்போரூர் (தனி) மூர்த்தி.டி பாமக
22. செங்கல்பட்டு ஆறுமுகம்.கே பாமக
23. மதுராந்தகம்


24. அச்சரபாக்கம் (தனி) சங்கரி நாராயணன் திமுக
25. உத்திரமேரூர் சுந்தர்.கே திமுக
26. காஞ்சிபுரம் சக்தி கமலம்மாள் பாமக
27. ஸ்ரீபெரும்புதூர் (தனி) யசோதா காங்கிரஸ்
வேலூர் மாவட்டம்
32. அரக்கோணம் (தனி)


33. சோளிங்கர்


34. ராணிப்பேட்டை


35. ஆற்காடு


36. காட்பாடி துரைமுருகன் திமுக
37. குடியாத்தம்


38. பேரணாம்பேட் (தனி) சின்னசாமி.ஏ திமுக
39. வாணியம்பாடி


40. நாட்ராம்பள்ளி


41. திருப்பத்தூர்


47. அணைக்கட்டு பாண்டுரங்கன்.கே அஇஅதிமுக
48. வேலூர் ஞானசேகரன்.சி காங்கிரஸ்
திருவண்ணாமலை மாவட்டம்

42. செங்கம்


43. தண்டராம்பட்டு


44. திருவண்ணாமலை


45. கலசப்பாக்கம்


46. போளூர்


49. ஆரணி சிவானந்தம்.ஆர் திமுக
50. செய்யாறு விஷ்ணுபிரசாத் காங்கிரஸ்
51. வந்தவாசி (தனி)


52. பெரனாமலூர்


விழுப்புரம் மாவட்டம்
53. மேல்மலையனூர் செந்தமிழ்செல்வன்.பி பாமக
54. செஞ்சி


55. திண்டிவனம் சி.வி.சண்முகம் அஇஅதிமுக
56. வானூர் (தனி)


57. கண்டமங்கலம் (தனி) புஷ்பராஜ்.எஸ் திமுக
58. விழுப்புரம் பொன்முடி.கே திமுக
59. முகையூர் கலிவரதன்.வி.ஏ.டி பாமக
60. திருநாவலூர்


61. உளுந்தூர்பேட்டை (தனி) திருநாவுக்கரசு.கே திமுக
71. ரிஷிவந்தியம்


72. சின்னசேலம்


73. சங்கராபுரம்


கடலூர் மாவட்டம்
62. நெல்லிக்குப்பம் ராஜேந்திரன்.சபா திமுக
63. கடலூர் அய்யப்பன்.ஜி திமுக
64. பண்ருட்டி வேல்முருகன்.டி பாமக
65. குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திமுக
66. புவனகிரி செல்வி ராமஜெயம் அஇஅதிமுக
67. காட்டுமன்னார்கோவில்
(தனி)


68. சிதம்பரம் அருண்மொழிதேவன் அஇஅதிமுக
69. விருத்தாசலம் விஜயகாந்த் தேமுதிக
70. மங்களூர் (தனி) செல்வப்பெருந்தகை.கே விடுதலைச் சிறுத்தைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
74. ஓசூர் கோபிநாத்.கே காங்கிரஸ்
75. தளி


76. காவேரிப்பட்டணம் மேகநாதன்.டி.ஏ பாமக
77. கிருஷ்ணகிரி செங்குட்டுவன்.டி திமுக
78. பர்கூர்


தர்மபுரி மாவட்டம்
79. அரூர் (தனி)


80. மொரப்பூர் முல்லைவேந்தன்.வ திமுக
81. பாலக்கோடு


82. தர்மபுரி


83. பென்னாகரம்


சேலம் மாவட்டம்
84. மேட்டூர் ஜி.கே.மணி பாமக
85. தாரமங்கலம்


86. ஓமலூர்


87. ஏற்காடு (தனி)


88. சேலம்-1


89. சேலம்-2


90. வீரபாண்டி ராஜேந்திரன்.ஏ திமுக
91. பனமரத்துப்பட்டி


92. ஆத்தூர்


93. தலைவாசல் (தனி)


100. எடப்பாடி


நாமக்கல் மாவட்டம்
94. ராசிபுரம்


95. சேந்தமங்கலம் (தனி) பொன்னுசாமி.கே திமுக
96. நாமக்கல் (தனி) ஜெயக்குமார் காங்கிரஸ்
97. கபிலர்மலை


98. திருச்செங்கோடு


99. சங்ககிரி (தனி)


கோயம்புத்தூர் மாவட்டம்

101. மேட்டுப்பாளையம்


102. அவினாசி (தனி)


103. தொண்டமுத்தூர்


104. சிங்காநல்லூர் சின்னசாமி.வி ஐ.என்.டி.யூ.சி
105. கோயம்புத்தூர் (மேற்கு) மலரவன்.டி அஇஅதிமுக
106. கோயம்புத்தூர் (கிழக்கு)


107. பேரூர்


108. கிணத்துக்கடவு


109. பொள்ளாச்சி ஜெயராமன் அஇஅதிமுக
110. வால்பாறை (தனி)


111. உடுமலைப்பேட்டை


112. தாராபுரம் (தனி)


114. பொங்களூர்


115. பல்லடம் செ.ம.வேலுச்சாமி அஇதிமுக
116. திருப்பூர்


ஈரோடு மாவட்டம்
113. வெள்ளக்கோயில்


117. காங்கேயம்


118. மொடக்குறிச்சி


119. பெருந்துறை


120. ஈரோடு


121. பவானி


122. அந்தியூர் (தனி)


123. கோபிசெட்டிபாளையம் கே.ஏ.செங்கோட்டையன் அஇஅதிமுக
124. பவானிசாகர்


125. சத்தியமங்கலம்


நீலகிரி மாவட்டம்
126. குன்னூர் (தனி) ஏ.சௌந்திரபாண்டியன் திமுக
127. உதகமண்டலம் பி.கோபாலன் காங்கிரஸ்
128. கூடலூர்


திண்டுக்கல் மாவட்டம்
129. பழனி (தனி) அன்பழகன்.எம் திமுக
130. ஒட்டன்சத்திரம்


139. நிலக்கோட்டை (தனி)


147. நத்தம்


148. திண்டுக்கல் பாலபாரதி.கே சிபிஐஎம்
149. ஆத்தூர்


150. வேடச்சந்தூர்


தேனி மாவட்டம்
131. பெரியகுளம் ஒ.பன்னீர்செல்வம் அஇஅதிமுக
132. தேனி


133. போடிநாயக்கனூர்


134. கம்பம் இராமகிருஷ்ணன்.என் மதிமுக
135. ஆண்டிப்பட்டி ஜெ.ஜெயலலிதா அஇஅதிமுக
மதுரை மாவட்டம்
136. சேடப்பட்டி


137. திருமங்கலம்


138. உசிலம்பட்டி மகேந்திரன்.ஐ அஇஅதிமுக
140. சோழவந்தான்


141. திருப்பரங்குன்றம்


142. மதுரை மேற்கு சண்முகம்.எஸ்.வி அஇஅதிமுக
143. மதுரை மத்தி பிடிஆர்.பழனிவேல்ராஜன் திமுக
144. மதுரை கிழக்கு நன்மாறன்.என் சிபிஐஎம்
145. சமயநல்லூர் (தனி)


146. மேலூர்


கரூர் மாவட்டம்
151. அரவக்குறிச்சி


152. கரூர்


153. கிருஷ்ணராயபுரம் (தனி)


155. குளித்தலை


பெரம்பலூர் மாவட்டம்
160. பெரம்பலூர் (தனி) ராஜ்குமார்.எம் திமுக
161. வரகூர் (தனி)


162. அரியலூர்


163. ஆண்டிமடம்


164. ஜெயங்கொண்டம்


திருச்சிராப்பள்ளி மாவட்டம்

154. மருங்காபுரி


156. தொட்டியம்


157. உப்பிலியாபுரம் (தனி)


158. முசிறி


159. லால்குடி


165. ஸ்ரீரங்கம்


166. திருச்சிராப்பள்ளி-1 அன்பில் பெரியசாமி திமுக
167. திருச்சிராப்பள்ளி-2


168. திருவெரம்பூர்


நாகப்பட்டினம் மாவட்டம்

169. சீர்காழி (தனி)


170. பூம்புகார்


171. மயிலாடுதுறை ராஜ்குமார்.எஸ் காங்கிரஸ்
172. குத்தாலம்


175. நாகப்பட்டினம்


176. வேதாரண்யம்


திருவாரூர் மாவட்டம்
173. நன்னிலம் (தனி)


174. திருவாரூர் (தனி) மதிவாணன்.யூ திமுக
177. திருத்துறைபூண்டி (தனி) உலகநாதன்.கே சிபிஐ
178. மன்னார்குடி சிவபுண்ணியம்.வி சிபிஐ
தஞ்சாவூர் மாவட்டம்
179. பட்டுக்கோட்டை


180. பேராவூரணி


181. ஓரத்தநாடு


182. திருவோணம்


183. தஞ்சாவூர் உபயதுல்லா.எஸ்.என்.எம் திமுக
184. திருவையாறு துரை சந்திரசேகரன் திமுக
185. பாபநாசம்


186. வலங்கைமான் (தனி)


187. கும்பகோணம் கோ.சி.மணி திமுக
188. திருவிடைமருதூர்


புதுக்கோட்டை மாவட்டம்

189. திருமையம்


190. கொளத்தூர் (தனி)


191. புதுக்கோட்டை


192. ஆலங்குடி


193. அறந்தாங்கி உதயம் சண்முகம் திமுக
சிவகங்கை மாவட்டம்
194. திருப்பத்தூர்


195. காரைக்குடி


197. இளையான்குடி ராஜகண்ணப்பன்.ஆர்.எஸ் திமுக
198. சிவகங்கை குணசேகரன்.எஸ் சிபிஐ
199. மானாமதுரை (தனி)


ராமநாதபுரம் மாவட்டம்
196. திருவாடனை


200. பரமக்குடி (தனி)


201. ராமநாதபுரம்


202. கடலாடி


203. முதுகுளத்தூர்


விருதுநகர் மாவட்டம்
204. அருப்புக்கோட்டை தங்கம் தென்னரசு திமுக
205. சாத்தூர்


206. விருதுநகர்


207. சிவகாசி


208. ஸ்ரீவில்லிபுத்தூர்


209. ராஜபாளையம் (தனி) சந்திரா.எம் அஇஅதிமுக
தூத்துக்குடி மாவட்டம்

210. விளாத்திக்குளம்


211. ஒட்டப்பிடாரம் (தனி)


212. கோவில்பட்டி


224. சாத்தான்குளம்


225. திருச்செந்தூர்


226. ஸ்ரீவைகுண்டம்


227. தூத்துக்குடி


திருநெல்வேலி மாவட்டம்

213. சங்கரன்கோவில் (தனி)


214. வாசுதேவநல்லூர் (தனி)


215. கடையநல்லூர்


216. தென்காசி


217. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா திமுக
218. திருநெல்வேலி மாலைராஜா.என் திமுக
219. பாளையங்கோட்டை மைதீன் கான் திமுக
220. சேரன்மாதேவி


221. அம்பாசமுத்திரம்


222. நாங்குநேரி எச்.வசந்தகுமார் காங்கிரஸ்
223. ராதாபுரம்


கன்யாகுமரி மாவட்டம்
228. கன்யாகுமரி சுரேஷ்ராஜன்.என் திமுக
229. நாகர்கோவில்


230. குளச்சல் ஜெயபால்.எச் காங்கிரஸ்
231. பத்மநாபபுரம்


232. திருவட்டாறு


233. விளவங்காடு


234. கிள்ளியூர்

தேர்தல் முடிவுகள்

Party Leads at 11.49 a.m.
DMK+ 161
ADK+ 71
DMDK 2


Personalities
D JAYAKUMAR ADK Won (ROYAPURAM)
K ANBAZHAGAN DMK Won (HARBOUR)
PARITHI ELAMVAZHUTHI DMK Won (EGMORE)
ARCOT VEERASAMY DMK Leading (ANNA NAGAR)
M K STALIN DMK Leading (THOUSAND LIGHTS)
M KARUNANIDHI DMK Won (CHEPAUK)
BADAR SAYEED ADK Won (TRIPLICANE)
VALARMATHI B ADK Trailing (ALANDUR)
D SUDARSHAN INC Leading (POONAMALLEE)
DURAI MURUGAN DMK Won (KATPADI)
M K VISHNU PRASAD INC Won (CHEYYAR)
K PONMUDI DMK Leading (VILLUPURAM)
A VIJAYKANTH DMDK Leading (VRIDHACHALAM)
G K MANI PMK Trailing (METTUR)
S R BALASUBRAMANIAM INC Leading (THONDAMUTHUR)
O PANNERSELVAM ADK Won (PERIYAKULAM)
J JAYALALITHAA ADK Won (ANDIPATTI)
P T R PANALIVEL RAJAN DMK Won (MADURAI CENTRAL)
R GNANADOSS MDMK Trailing (SIVAKASI)
PETER ALPHONSE INC Leading (KADAYANALLUR)
P H MANOJ PANDIAN ADK Lost (CHERANMAHADEVI)
VASANTH KUMAR INC Won (NANGUNERI)

Saturday, May 06, 2006

அஸ்பிலியா!

சிம்வன்சீ குரங்குகள் கிருமிக் கொல்லிச் சத்து நிறைந்திருக்கிற ஒரு தாவரத்தின் இலையைத் தேடிப் பிடித்துத் தின்னும் விஶயத்தைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்

கனிந்த பழங்கள், இலைகள், விதைகள் என்று பல வகையான பொருட்களை சிம்பன்சீக்கள் சாப்பிடுகின்றன. எப்போதாவது புதிதாகப் பிடித்த அசைவத்தையும் சாப்பிடுவதுண்டு. அவற்றின் உணவு விருப்பம் பலவகையனது. ஓர் ஆண்டில் அவை கிட்டத்தட்ட 300 வகையான தாவரங்களை ருசி பார்ப்பதுண்டு.

ஆனால், டெய்ஸி குடும்பத்தைச் சேர்ந்த அஸ்பிலியா என்ற இனத்தின் மூன்று வகைச் செடிகளிடம் மிகவும் அக்கறை காட்டுகின்றன. அச்செடிகளிலிருந்து அவை ஒரே ஒரு இலையைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அதை அப்படியே விழுங்கி விடுகின்றன.

இது ஏன் என்ற மர்மத்தை ரோட்ரிக்ஸ் என்பவரின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு அந்த இலைகளை ஆராய்ந்தது. ரசாயனங்கள் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது.

பாரம்பரியமன பல ஆப்பிரிக்க மூலிகை மருந்துகளிலும், அஸ்பிலியா இனத்தைச் சேர்ந்த செடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு இனச் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிற மருந்து இடுப்பு வாதம், இடுப்பு நரம்பு வலி, நரம்புத் தலைவலி போன்ற வியாதிகளைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு செடியின் இலைகள் புண்கள், வயிற்றுக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றைத் தீர்க்க உதவுகிறது. அஸ்பிலியாவில், தயாருப்ரைன் ஏ என்னும் கிருமிக் கொல்லிச் சத்து உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களுக்கு வருகிற வியாதிகள்தான் சிம்பன்சீக்களுக்கும் வருகின்றன. எனவே, அவை தமது நோய்க்கு மருந்தாக அஸ்பிலியா இலைகளை சாப்பிடுகின்றன. என்ன பெரிய அறிவு ............இந்த சிம்பன்சீகளுக்கு இல்ல..........

Friday, May 05, 2006

குரங்கு குணம் மாறுது!

ஒற்றுமைக்கு உதாரணமாக பரவைகளில் காக்கையை குறிப்பிடுகிறேம். விலங்குகளில் குரங்குகளை குறிப்பிடலாம். எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லும். மேலும் தன் குழந்தைகளை வயிற்றில் கட்டிக் கொண்டே சுற்றித் திரியும். அதே நேரத்தில் தன்னுடைய இனத்தாருடன் பாசத்துடன் பழகும் தன்மைக் கொண்டது குரங்குகள். இது அனைவரும் அறிந்த ஒன்று.

குரங்குகளைவிட "சிம்பன்சி" என அழைக்கப்படும் மனித குரங்குகள் தன்னுடைய இனத்துடன் அதிக பாசம் கொண்டது. கூட்டமாகவே சாப்பிடும். ஒன்றாகவே வாழும். ஆனால் இந்த குரங்குகளைப் பிடித்து வைத்தால் முன்பு போல் ஒன்றோடொன்று அன்புடன் இருக்குமா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது.

இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க இருபத்து எட்டு மனிதக் குரங்குகளை பிடித்து ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே கூண்டில் அடைத்தனர். அந்தக் காலம் முடிவடைந்த பின் குரங்குகளிடம் சோதனை நடத்தினர்.

முதலில் குரங்குகளுக்கு சாப்பாடு வைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு குரங்குகளும் தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும் தின்று விட்டு மற்ற குரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஆனால் மனிதக் குரங்குகள் உண்மையில் சாப்பாடு கிடைத்தால் தன்னுடைய இன குரங்குகளுக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதே போல வேறு சில சோதனைகளும் குரங்குகளுக்கு வைக்கப்பட்டன.

இந்த சோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறினார்கள்... தெரியுமா?
கூண்டில் அடைபட்ட குரங்குகளுக்கு மனித நேயம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல சோதனைகள் நடத்தினார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் தன்னுடைய தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கோள்ள ஆசைபட்டது. மற்றக் குரங்குகளை பற்றி அது சிறிதும் கவலைப்பட வில்லை.

ஆனால் இந்த சோதனையை காட்டில் உள்ள குரங்குகளுக்கு செய்து பார்த்த போது அவைகள் அனைத்தும் ஒற்றுமையோடு செயல்பட்டன. மேலும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் செயல்பாட்டுக்கும் காட்டில் வாழும் குரங்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த ஆய்வின் முடிவை வைத்து பார்க்கும் போது கூட்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் மனித நேயம் பெரிதும் குறைந்துவிட்டது என எண்ணத் தோன்றுகிறது, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தக் குரங்குகளின் மனித நேய ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

Wednesday, May 03, 2006

சுக்கு காப்பி குடிப்போமா!

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கழுவ வேண்டும்.

அதில் சுத்தமான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தீ மூட்டி, பாத்திரத்தை அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.

தேவையான அளவு சுக்கு, மல்லி, பனை வெல்லம் ஆகியவற்றைப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும் போது பொடி செய்த்வற்றைப் போட வேண்டும்.

நன்றாகக் கொதித்த பின் இறக்கி வடிகட்ட வேண்டும்.

சுவை பார்த்து தேவைப்பட்டால் கூடுதலாகப் பனை வெல்லம் சேர்க்க வேண்டும்.

சுக்கு காப்பி தயார்!!!!!

Saturday, April 29, 2006

தினமலர் இதழுக்கு நன்றி

எமது வலை தமிழ் சிறுகதை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 22-04-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு

Thursday, April 27, 2006

பாட்டிகாடா, பட்டப்ணமா? (பணம் நிம்மதியை தராது)

பட்டிக்காட்டு எலி ஒன்றும், பட்டணத்து எலி ஒன்றும் நண்பர்களாயின. ஒரு நாள், பட்டிகாட்டு எலி பட்டணத்து எலியை விருந்துக்கு அழைத்து வந்தது. இருவரும் வயல்வெளியில் அமர்ந்து நிதானமாக கதிர்களையும் காய்களையும் கொரித்துத் தின்றன. விருந்து முடிந்தவுடன் பட்டணத்து எலி, இதெல்லாம் ஒரு விருந்தா, நண்பரே என்னுடன் வாருங்கள். உங்களுக்கு விருந்து என்றால் என்ன என்று நான் காட்டுகிறேன், என்று கூறியது.

இரு எலிகளும் பட்டணம் நோக்கிச் சென்றன.

பட்டணத்தில் எலி ஒரு பெரிய வீட்டின் பொந்தில் வாழ்ந்து வந்தது. அடுக்களையிலிருந்து வெண்ணெய்க்கட்டி, ரொட்டித்துண்டு, கேக்குகள் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தன. அந்த நேரம் பார்த்து பூனை ஒன்று அங்கு வரவே எலிகள் ஓடின. சிறுது நேரம் கழித்து மீண்டும் சாப்பிடத் துவங்கின. பூனை அங்கு வரவே ஓடின. இப்படியாக நிம்மதியின்றி சாப்பிட்டு முடித்தன.

பட்டிக்காட்டு எலி, நண்பரே எங்கள் பட்டிக்காட்டு சாப்பாடு சுமாராக இருந்தாலும் நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடுகிறோம், உங்களைப் போல் பயந்து பயந்து சாப்பிடத் தேவையில்லை என்று கூறியவாறே பட்டிக்காட்டை நோக்கிச் சென்றது.

பணம் நிம்மதியை தராது

Tuesday, April 25, 2006

ஒரு மாணவனுக்கு எண்வகை குணங்கள் தேவை

1 உரக்க சிரிக்க கூடாது
2 புலனடக்கம் கொள்ளல் வேண்டும்
3 யாருடைய ரகசியத்தையும் வெளிப்படுத்தக் கூடாது.
4 அசுத்தமாக இருக்கக்கூடாது
5 கெட்ட நடத்தை கூடாது
6 சாப்பாட்டில் அதிக ஆசை கொள்ளகூடாது
7 கோபம் காட்டக்கூடாது
8 உண்மையில் பற்றுதல் கொள்ள வேண்டும்

Saturday, April 22, 2006

கலர் கலர் வாட் கலர்..........

சிவப்பு:

சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.பச்சை:

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.நீலம்:

என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.இளம் பச்சை:


எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.ஆரஞ்ச்:

உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.ரோஸ்:

செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.ஊதா:

அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.சாம்பல் நிறம்:

மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.மஞ்சள்:

இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.காப்பி கலர்:

நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.கருப்பு:


இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.


இங்கே சுட்டி புதிய தகவல்களை பெருங்கள்

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.


இஞ்சியை துவையாலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்


இஞ்சி சாற்றில், தேன் கலந்து காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


கலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பித பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.


பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி வாராமல் போகும்.


இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.


இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காயச்சாறு இம் மூன்றையும் கலந்து ஒரு வேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா இருமல் குணமாகும்.

இங்கே சுட்டி புதிய தகவல்களை பெருங்கள்

Friday, April 21, 2006

முடிவில்லாதது (தேர்தல் கவிதை)

முடிவில்லாதது

சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை
இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு
எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை

செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்
ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்
"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே
சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "

"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி
இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"
ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது
தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை

ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்
அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.
கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்
வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
மாறவில்லை வாக்குறுதி மறுபடியும் தேர்தல்
நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி
மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்

தேர்தல் கவிதைகள்

வாக்குறுதி (ஹைகூ )

எலும்புத் துண்டு
ஏழை நாய்
அட இதுவும் பிளாஸ்டிக்

மன்னர்கள்

கையிலே மை
ஊரெல்லாம் பொய்
முடிவுகள் வரும் வரை.

நாங்கள் மன்னர்கள்
ஆனால்
கிரிடம் அவர்கள் தலையில்

கையிலே காசு
விரல் நுனியில் மை
விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.

திருடனா பொறுக்கியா..
தேர்ந்தெடுக்க வாய்ப்பு
ஒரே முடிவு தான்..எனக்கு

நிலம் தருவார் இலவசமாய்
பயிரிட ஆசை தான்
வருவாளா பொன்னி

பட்டினியால் எலிவேட்டை
இனி தினம் மூன்று காட்சி
காணலாம் கலர் டிவியில்

ஓட்டுக்கு நூறு ரூபாய்
வட்டியொடு வசூலிக்க
திறப்பார்கள் கள்ளுக் கடை

Wednesday, April 19, 2006

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை,

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை, காலம் சோம்பேறியை மதிப்பதில்லை.

சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வரவேண்டும்.

கோபம் அன்பை அழிக்கிறது, செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.

அன்பில் வணிகத்திற்கு இடமில்லை, வணிகத்தில் அன்பிற்கு இடமில்லை.

அலைகடலில் அல்லி வளராது, அன்பு இல்லாத மனதில் நட்பு மலராது.

நாளைய நன்மைக்காக இன்றைய தேவையை குறைத்துக் கொள்.

காலத்தின் மதிப்பு உனக்கு தெரியுமா? அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்கு தெரியும்.

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது, ஆனால் உயிரை கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

வேதனை பொறுத்துக் கொள்பவனே, வெற்றி பெறுவான்.

உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும், நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

நிதானமாக சிந்திக்க வேண்டும், வேகாமாக செயல்பட வேண்டும்.

தோல்வியை கண்டு அஞ்சுபவரிடம் இருந்து வெற்றி விலகிவிடுகிறது.

அறிவு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரம் போல

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது, உழைப்பினால் அல்ல விடா முற்ச்சியினால்.

நீ வாழ பிறர் வாழ்வை கெடுக்காதே.

பிறருடைய அன்பிற்கு பாத்திரமாவதைவிட, பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாவதே மேல்.click here to see more

Wednesday, March 29, 2006

வெற்றுத் திண்ணை

Visit Tamil Parks

சத்தியவும் அவளுடைய தந்தையும் பேருந்திற்காகக் காத்திருந்தனர். சத்தியா ஆட்டுக்குட்டியைத் தன் கையில் பிடித்திருந்தாள். தேநீர்க் கடை வெளிச்சம் சத்தியா வைத்திருந்த ஆட்டுக்குட்டியின் மீது விழுந்தது.

ஊருக்கு வரும் முதல் பேருந்தது மெதுவாகத் தேநீர்க் கடை அருகே வந்து நின்றது. ஆட்டுக்குட்டியுடன் பேருந்தில் போகக்ப்போவதை நினைத்து சத்தியவுக்கு ஒரே மகிழ்ச்சி......


பேருந்து 'பாம்.....பாம்........' என்று ஒலி எழுப்பியது.... ஆடு 'ம்மே..........ம்மே..............' என்று கத்தியது........."ஏய் மணி! கத்தாதே..........! நாம் வண்டியில் ஏறிப் போகப் போகிறோம்" என்றாள் சத்தியா.

மூவரும் பேருந்தின் அருகில் சென்றனர்.

"யாராது? ஆட்டுக்குட்டியை வண்டியில் ஏற்றுவது? இறங்கு! இறங்கு!" என்று நடத்துனர் கத்தினார்.................

"ஐயோ, பேருந்தில் கூட்டமில்லையே, ஏற்றக் கூடாதா?" என்றர் சத்தியாவின் தந்தை.........

"சரி சரி ஓட்டுநரை கேட்டுப் பாருங்கள்..............என்றார்

திரும்பி பார்த்த ஓட்டுநர் "ஏற்றிகொள்ளுங்கள்" என்றார்.

மூவரும் பேருந்தில் ஏறினர் பேருந்து விரைந்தது.....................

பேருந்தின் சத்தத்தினாலும் குலுக்கலினாலும் ஆட்டுக்குட்டி மருண்டது............

'ம்மே...........ம்மே................."
ஆட்டுக்குட்டி சத்தியாவின் கையிலிருந்து துள்ளியோட முயன்றது............

அருகில் வந்த நடத்துனர் ஆட்டுக்குட்டியின் தலையை மெதுவாகத் தடவினார்....."எங்கே போக வேண்டும்?"...............

"சந்தைக்கு...." என்றார் சத்தியாவின் தந்தை..........

சத்தியா ஆட்டுக்குட்டியின் தலையை வளைத்து அணைத்துக் கொண்டாள்.......... அது தன் முகத்தை அவளது முகத்தில் உரசியது..........

"ஆட்டை என்னிடம் கொடு" என்றார் அப்பா

"வண்டாம் அப்பா நானே வைத்துக் கொள்கிறேன்" என்றாள் சத்தியா

பேருந்து சந்தையின் அருகில் நின்றது........

"அப்பா, எதற்காக நாம் சந்தைக்குப் போகிறோம்?"

"ஆட்டுக்குட்டியை விற்க"

சத்தியா...........திடுக்கிட்டாள்.................

"வேண்டாம் அப்பா, நான் என் மணியைத் தரமாட்டேன், மணி எனக்கு வேண்டும்: என்றாள் சத்தியா

"திருவிழா வருகிறது. துணிமணி எடுக்க வேண்டும்......செலவுக்குப் பணம் இல்லை........அதனால் ஆட்டுக்குட்டியை விற்கத்தான் வேண்டும்"

விக்க வேண்டாம் அப்பா.....................வீட்டுக்குப் போவோம் அப்பா.........................வாங்க................" (சத்தியாவின் கண்களில் நீர் ததும்பியது........)

பரபரப்பாக ஆட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார்........வியாபாரியிடம் ஆட்டுக்குட்டியை விலை பேசினார் சத்தியாவின் தந்தை...

"நான் தரமாட்டேன்..........தரமாட்டேன்........." கண்ணீருடன் சத்தியா அழத் தொடங்கினாள்..

"உன்னக் கூட்டி வந்தது தொந்தரவாகப் போயிற்றே..." என்றவர் ஆட்டுக்குட்டியை 'வெடுக்' எனப் பிடுங்கி வியாபாரியிடம் கொடுத்தார்... பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆட்டுக்குட்டி மிரண்டு 'ம்மே..........ம்மே......" என்று கத்தியது.....

திரும்பி திரும்பித் தன் ஆட்டுக்குட்டியைப் பார்த்தவாறே சென்றாள் சத்தியா......

'அங்கே பார்! குடைராட்டினம் சுற்றுகிறது. ஏறிப் பார்க்கிறாயா?'

'பொரி கடலை உனக்குப் பிடிக்குமே, வாங்கித் தரவா?'

பதில் இல்லை.

'உனக்குச் சட்டை வாங்கலாம், வா'

"வேண்டாம் அப்பா, வீட்டிற்குப் போகலாம்"

இருவரும் அமைதியாக வீட்டிற்குத் திரும்பினர். சத்தியா வீட்டிற்குள் போகாமல் திண்ணையிலேயே உட்கார்ந்தாள். ஆட்டுக்குட்டி கட்டியிருந்த தூணில் கயிறு மட்டும் இருந்தது. அந்தக் கயிற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்............

Monday, March 27, 2006

சொர்க்கத்தில் நரி

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது...?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி 'விரி'ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது.

'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?'

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

"அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது.

"நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

"நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்................!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் .......................

Friday, March 24, 2006

உலகில் மிகப்பெரியவை

1. ஆசியாக் கண்டம்

2. பசிபிக் சமுத்திரம்

3. ஆஸ்திரேலியா தீவு

4. எவரெஸ்ட் சிகரம்

5. இமயமலை

6. அமேசான் ஆறு

7. காஸ்பியன் ஏரி

8. லண்டன் நகரம்

9. சஹரா பாலைவனம்

Wednesday, March 22, 2006

புதிய வேகம்

இளைஞனே !
தோல்வி என்பது ரணங்கள்
வெற்றி என்பது
அதனை குணபடுத்தும் மருந்துகள்
தோல்வி என்பது முடிவில்லா
அது ஆரம்பத்தின் அஸ்திவாரம்
உனக்குள்
வேகத்தை தூண்டி விடுகிற
அதித சக்தி
தோல்வி உனக்கு
பாடத்தை கற்றுத் தருகிற
பள்ளி கூடம்
உனக்கு
அனுபவத்தை போதிக்கிற ஆசான்
தோல்வி எழும்போது
சிந்தித்தால் தான்
வெற்றியை நீ சாதிக்க முடியும்
அதனால்
தோல்விகளை ஏற்றுகொள்
சோதனைகளை தாங்கிக் கொள்
சோர்ந்து விடாதே!
புறபடு ...
புதிய வேகத்தோடு
வெற்றியின் இலக்கை நோக்கி!

(படித்தவை)

எழுதியவர்: தமிழ்மலர்

Tuesday, March 21, 2006

தமிழர் நோக்கில் பண்பாடும் மொழியும் - இ.அண்ணாமலை

தமிழ்ப் பண்பாடு பெருமையாகச் சொல்லிக்கொள்ளப்படும் ஒன்று. தமிழர்களுக்கே உரிய பண்புகள் சில உண்டு என்பதும்; அவை தமிழர்களைத் தனிப்படுத்திக்காட்டுவன, சிறப்புப்படுத்திக் காட்டுவன என்பதும் தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளிடம் பரவலாகக் காணப்படும் நம்பிக்கை. தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவதில் முதன்மையானது மொழி என்பதில் ஐயமில்லை. மொழி பண்பாட்டின் அடிப்படையான அம்சம்; பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனம். தனிப்படுத்திக் காட்டும் மற்ற பண்பாட்டுக் கூறுகள் எவை என்று நிறுவுவது எளிதானது அல்ல. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் மற்ற சமூகத்தினரிடம் இல்லாதவையாக இருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரிடையேயும் இருப்பவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தமிழருக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாகச் சொல்ல முடியும்.

இந்த இரண்டு அடிக்கோல்களின் அடிப்படையில் புறநோக்கில் தனித்தன்மையைக் கணிப்பது கடினமானது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் சொல்லும்போது அவர்கள் அகநோக்கில் தங்களைப்பற்றி மானசீகப்படுத்திக் கொள்வதையே குறிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அதுதான் உண்மையானது. இவ்வாறு மானசீகப்படுத்திக் கொள்வது பெரும்பாலும் அறிவுஜீவிகளால் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரவும் எனவே அது அறிவுஜீவிகளின் வாழ்க்கை மதிப்பீட்டை ஒட்டி அமைந்திருக்கும். இவ்வாறு மானசீகப்படுத்திய பண்புக் கூறுகள் வேறு சமூகத்தினரிடையேயும் இருக்கலாம். தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் இல்லாமலும் இருக்கலாம். மானசீகப்படுத்துவதற்கு இந்த நடைமுறை உண்மைகள் தடையாக இருப்பதில்லை.

தங்கள் பண்புக்கூறுகள் சிறந்தவை என்பதும் ஒருவகை வாழ்க்கை மதிப்பீட்டின் அடிப்படையில் கூறுவது தான், மதிப்பீடு இல்லாத நிலையில் பண்புகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.

கற்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தமிழ்க் கற்பு என்பது உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஒன்று. பொதுநிலையில் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் ஒழுக்க உறவை வரையறுக்கும் ஒரு பண்பு. எந்தச் சமூகத்திலும் அதன் கட்டுக்கோப்பைக் காக்கவும், அதன் சுயவளர்ச்சி¨யை உறுதிசெய்யவும் அவசியமாக இருக்கும் பண்பு. இந்தப் பண்பு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்குப் பலர் போன்ற பலவும் வெவ்வேறு சமூகங்களில் வழங்குகிற, அந்தந்தச் சமூகங்களுக்குத் தேவையான கற்பு நெறிகள்தான்.

ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பு நிலையே தமிழ்ப் பண்பாடாகப் பேசப்படுகிறது. ஏக பத்தினி விரதன், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆண் நிலையிலும் கற்பு பேசப்பட்டாலும் கற்பு, பெண்ணின் ஒழுக்க நெறியாகவே நடைமுறையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மழை வருவித்தல், ஊரை எரித்தல் போன்ற இயற்கை விதிகளை மீறும் ஆற்றலைப் பெண்ணின் கற்புக்குக் கொடுத்திருப்பதைப் போல ஆணின் கற்புக்குத் தனி ஆற்றல் எதுவும் கொடுக்காதது இதை வெளிப்படுத்தும். எனவே கற்பு என்பதற்குத் தமிழ் பண்பாட்டில் தனி அர்த்தம் கொடுக்கப்படுகிறது. அது பெண்ணின் பால் ஒழுக்க நெறியை வரையறுக்கும் பண்பாகவே கொள்ளப்படுகிறத.

மனத்தாலும் மற்ற ஆணை நினைக்கக்கூடாது என்று பெண் கற்பை வலியுறுத்தும் தமிழ்ச் சமூகத்தில்தான், திரைப்படக் கதாநாயகனை மனத்தால் கூடும் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ வும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதேபோல் பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவது தமிழ்ப் பண்பு என்று சிறப்பித்துக் கூறிக்கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில்தான் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடுகிற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பண்புகள் என்று போற்ப்படுபவை நடைமுறையில் இல்லாவிட்டாலும், அவை மானசீகப்படுத்திக் கொண்ட பண்புகளே.

மானசீகப்படுத்திக்கொண்ட பண்புகள் ஆதர்சநிலையை காட்டுகின்றன. ஆதர்சநிலை விதிநிலையை நிர்ணயித்தது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் பேசும்போது தாங்கள் ஆதர்ச நிலையிலும் விதிநிலையிலும் காண்கிற ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அது நடைமுறையில் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

இப்படி நடக்கவேண்டும் என்ற நடத்தை விதிகளும் பண்பாட்டின் கூறுதான். அவை இதை இப்படிச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் விதிப்பதுபோல சமூகத்தின் அறிவுஜீவிகள் விதிக்கும் பண்புக்கூறுகள். அவை ஒருவன் தன்னியல்பாக உண்ணும் உணவல்ல. மருத்துவர் விதிப்படி உண்ணும் பத்திய உணவு. மரபிலக்கண விதிகள் எப்படி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மொழி விதிகள், ஒருவனுடைய இயல்பான பேச்சின், எழுத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் விளக்க விதிகள் அல்ல. தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு என்று செல்லும்போது மேலே சொன்ன கட்டுப்பாடு விதிகளையே குறிக்கிறார்கள்.

இது இப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறையில் அல்லாமல் இது இப்படி இருக்கிறது என்று விளக்கமுறையில் பார்க்கும்போது உலகின் எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான, அடிப்படையான கூறு. வாழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்வது, உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது மட்டுமே மனித வாழ்க்கை அல்ல என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் இயற்கைப் பொருள்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம் தந்து தன் இருப்பைப் புரிந்து கொள்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது ஆகும். இந்த வாழ்க்கை அர்த்தம் கருத்துகள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படும். இவற்றின் தொகுப்பையே விளக்கநிலையில் பண்பாடு என்கிறோம்.

தமிழ்ச் சமூகத்தை இந்த நோக்கில் பார்த்து அதன் தனிப் பண்புகளை - அதாவது வாழ்க்கையைப் பற்றிய அதன் தனி அர்த்தங்களை - நிறுவும் போதுதான் விளக்கநிலையில் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் பற்றிப் பேச முடியும். விளக்கநிலையில் பண்பாடுகளுக்கிடையே - அர்த்தப்படுத்திக்கொண்ட - வாழ்க்கைகளுக்கிடையே - உயர்வு தாழ்வு இல்லை. இந்த நோக்கில் அமெரிக்கப் பண்பாடு, தமிழ்ப்பண்பாடு என்ற இரண்டில் எது உயர்ந்தது என்ற கேள்வி அர்த்தமில்லாதது. இதைப்போலவே தமிழ்ச் சமூகத்தின் சங்ககாலப் பண்பாட்டையும் இக்காலப் பண்பாட்டையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பதும் தவறானது. ஒரு சமூகத்தினுடைய, ஒரு காலத்தினுடைய பண்பாட்டின் அடிப்படையில் இன்னொரு சமூகத்தினுடைய, இன்னொரு காலத்தினுடைய பண்பாட்டை எடைபோடுவது தவறாகும். ஒவ்வொரு சமூகமும் தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் தன் சமகால வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இது பரிணாமநியதி. எனவே தான் பண்பாட்டு மாற்றம் இருக்கிறதே தவிரப் பண்பாட்டு அழிவு இல்லை என்கிறோம். ஒரு சமூகத்தினர் முற்றிலுமாக அழியும்போது, ஒரு சமூகத்தினர் தங்கள் பண்பாட்டை விட்டுவிட்டு இன்னொரு சமூகத்தினரின் பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும்போது பண்பாட்டு அழிவு நேரலாம். ஆனால் இது அபூர்வம். மொழிக்கும் இது பொருந்தும்.

வாழ்க்கையின் அர்த்தம் - பண்பாடு - நிலையானது அல்ல. அது காலந்தோறும் மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மனிதனைச் சுற்றியிருப்பவை மாறுகின்றன. அந்த மாறுதல்களோடு தன்னை இணைத்த வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும் மாறுகிறது. தமிழ்ப் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. நடக்க முடியாதது. அதே நேரத்தில் வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டில் உண்டு. ஆழ்நிலையில் இருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த இரண்டின் அடிப்படையிலும் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு என்ன என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். சங்ககால மரபுப் பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும், ஏற்றுக் கொண்ட மேல்நாட்டின் புதிய பண்பாடே இன்றைய தமிழ்ப்பண்பாடு என்பதும் விடை ஆகாது. இரண்டின் ஊடாட்டத்தில் விளைந்த ஒன்றே இன்றைய தமிழ்ப் பண்பாடாக இருக்க முடியும்.

பண்பாட்டின் அடிப்படை அம்சமான மொழியைப் பற்றிய தமிழர்களின் கருத்துகளும் மேலே சொன்ன பிற பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய அவர்களது கருத்துக்களைப் போன்றவையே. அவர்களுடைய மொழி நோக்கு, மொழியின் நடைமுறை வழக்கின் அடிப்படையில், விளக்கநிலையில் அமையாமல் மானசீகப்படுத்தப்பட்ட ஆதர்சநிலையில், விதிநிலையில் அமைந்திருக்கிறது. அமைப்பில் தமிழ் மொழி தனித்தன்மை உடையது. மற்ற மொழிகளைவிடச் சிறந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாதது என்ற கருத்து தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளால் போற்றப்படுகிறது.

ஒவ்வொரு சமூகமும் அதன் பண்பாட்டின் அடிப்படையில் சில சாதனைகள் புரிகிறது. வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு சாதனைகள் புரியலாம். பண்பாட்டின் சாதனைகளையே நாகரிகம் என்கிறோம். சாதனைகளில் உயர்வு, தாழ்வு உண்டு, வாழ்வு தாழ்வும் உண்டு. எனவே ஒரு நாகரிகம் சிறந்த நாகரிகம் என்றோ அழிந்த நாகரிகம் என்றோ சொல்லலாம். ஒரு சமூகம் தன் பண்பாட்டின் விளைவாக எழுத்தையோ வெடிமருந்தையோ கண்டுபிடித்து அதன் மூலம் அதிகார பலம் பெற்று உயர்ந்த நாகரிகம் என்று பெயர் பெறலாம். வேறு சாதனைகளால் அதைவிட அதிகார பலம் பெற்ற இன்னொரு நாகரிகத்தால் வெல்லப்பட்டு அழிந்த நாகரிகம் என்றும் பெயர் பெறலாம். பண்பாட்டிற்கு உயர்வோ அழிவோ இல்லை. நாகரிகத்துக்கு உண்டு. ஒருவன் பண்பாட்டை உயர்ந்தது, தாழ்ந்தது என்று வகைப்படுத்தினால் அது நாகரிகத்தை வகைப்படுத்துவதாகவே அமையும்.

தமிழ்ப் பண்பாடு கட்டடக்கலை, நுண்கலை, நீர்ப்பாசனம், கடல் வணிகம் முதலியவற்றில் முன்காலத்தில் படைத்த சாதனைகளைத் தமிழ் நாகரிகம் எனலாம். தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், ஓரளவு தத்துவம் ஆகியவற்றில் படைத்த சாதனைகளும் தமிழ் நாகரிகத்தில் அடங்கும். இரு பண்பாடுகளின் ஊடாட்டத்தால் புதிய சாதனைகள் - நாகரிகங்கள் - பிறப்பதை உலக வரலாறு காட்டுகிறது. மேலே சொன்ன மொழித்துறைகளில், முக்கியமாக இலக்கணத்திலும், தத்துவத்திலும், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வடமொழிகளின் ஊடாட்டம் தமிழ் மொழிக்குக் கிடைத்தது.

தமிழ்நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று நாம் பெருமைப்படலாம். இது தமிழ் முன்னோர்களின் பெருமை நம் பெருமை, இதற்கு நாம் வாரிசு என்பதே. இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ்மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. கலை, அறிவியல்,இலக்கியம், முதலியவற்றில் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் தனிப்பட்ட சாதனைகள், சிறப்பான சாதனைகள் என்று பெருமைப்பட எதுவும் இல்லை. ஆங்கிலப் பண்பாட்டின், மொழிக்கு இன்று இருக்கிறது. ஆனால் இதன் விளைவாகப் புதிய சாதனைக்ள எழக் காணோம். செய்தவை எல்லாம் ஆங்கிலப் பண்பாட்டினுடைய, மொழியினுடைய சாதனைகளி நிழலாகத்தான இருக்கின்றன. இப்படித் தமிழ் நாகரிகம் ஒடுங்கிவிட்டதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பண்பாட்டைப் பற்றியும் பண்பாட்டின் சாதனமான மொழியைப் பற்றியும் தமிழர்கள் கொண்டிருக்கிற மனப்பாங்கும் கருத்துகளும் ஒரு காரணம் ஆகலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி, இரண்டைப் பற்றிய தமிழர்களின் மனப்பாங்கும் கருத்துகளும் ஒரே மாதிரியானவை. தமிழ்ப்பண்பாடு தூய்மையானது. இந்த தூய்மையைப் போற்றவேண்டும் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் விளைவான செயல்களும் மொழிக்கும் ஏற்றப்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ் பெண்ணாக உருவகிக்கும் போது அதன் கன்னித்தன்மை - இளமை, தூய்மை என்ற இரண்டு பொருளிலும் - வலியுறுத்தப்படுகிறது. கன்னித்தன்மையைக் காக்கச் சுதந்திரமான வளர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. தமிழ்நாகரிகம் உயர்ந்திருந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தமிழ் வீட்டு மொழியிலிருந்து நாட்டுமொழி ஆகவேண்டுமென்றால் கட்டுபாடுகள் துணை செய்யாது. வீட்டைவிட்டு நாட்டுக்கு உழைக்கச் செல்லும் பெண் புடவையிலேயே இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது.

பழைய மரபை மேற்கோள்காட்டி நெறிபடுத்தும் பண்புகளுக்கும் இன்றைய வாழ்க்கையின் நிர்பந்தங்களுக்கு ஏற்ப நடைமுறையில் கடைப்பிடிக்கும் பண்புகளுக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போல மரபு இலக்கணங்களிலிருந்து மேற்கோள் காட்டி நெறிப்படுத்த முனையும் தமிழ் மொழிக்கும் இன்றைய தேவைகளை நிறைவு செய்யத் தேவையான தமிழ்மொழிக்கும் இடைவெளி இருக்கிறது. போற்றுவது ஒன்றும் பின்பற்றுவது ஒன்றுமாகப் பிற பண்பாட்டுக் கூறுகளில் இரட்டை நடத்தை இருப்பது போல, மொழியிலும் போற்றுவது தமிழ், பின்பற்றுவது ஆங்கிலம் என்ற நிலை இருக்கிறது. இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழுமலர்ச்சி அடையவில்லை. நம் ஆளுமையை உருப்படுத்தும் நம் பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய மனம் இல்லை. வாய்ப்பு இல்லை. நாம் முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்ளாத இன்னொரு பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய இயலவில்லை. மீறிச் சிலர் செய்கிற சாதனைகளைப் பிறப்பால் தமிழர்களின் சாதனைகள் எனலாமே தவிர தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் சாதனைகள் என்று கூறமுடியாது.

தமிழ்ப் பண்பாட்டிடம் தமிழர்களுக்கு ஒரு பக்தி இருப்பதுபோல் தமிழ் மொழியிடமும் ஒரு பக்தி இருக்கிறது. தமிழைத் தாயாக, தெய்வமாகக் கொள்வதன் விளைவு இது . பக்தி இன்னொருபடி போய்ப் பயபக்தி ஆகிறது. பயபக்தி மொழியை நம்மிடமிருந்து தூரப்படுத்துகிறது. மேலே சொன்னபடி மரபின் அடிப்படையில் மொழிக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் தூரப்படுத்துதலை உறுதிசெய்கின்றன. மொழிக்கு நாம் வணங்குவதைவிட மொழியை நமக்கு வளைக்க வேண்டும். மொழியைத் தூரத்தில் வைக்காமல் நெருக்கம் காட்ட வேண்டும். மொழியோடு தோழமை உறவுகொண்டு ஊடியும் கூடியும் அதன்மேல் ஆட்சி செலுத்தினாலே புதிய மொழி பிறக்கும். புதிய படைப்புகள் பிறக்கும். கலை, அறிவியல், இலக்கியப் படைப்புகளில் புதிய சாதனைகள் படைக்க மொழியிடம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் விளைவாகப் புதிய சாதனைகள் படைக்கும் போதுதான் புதிய தமிழ் நாகரிகம் பற்றிப் பேசலாம். அதைப்பற்றிப் பெருமைபடலாம்.

[நன்றி: காலச்சுவடு]

Wednesday, March 15, 2006

நான்கெழுத்து.............

'உலகம்' நான்கெழுத்து!
உலகில் வாழுகின்ற 'மக்கள்'
நான்கெழுத்து!

வாழ்க்கையின் 'பிறப்பு' நான்கெழுத்து!
பெற்றோர் பெறும் 'குழந்தை'
நான்கெழுத்து!

பள்ளி செல்லும் 'மாணவன்' நான்கெழுத்து!
மாணவன் 'இளைஞன்' ஆவது
நான்கெழுத்து!

இளைஞர்களின் 'கல்லூரி' நான்கெழுத்து!
கல்லூரியில் பயிலும் 'படிப்பு'
நான்கெழுத்து!

படிப்பு தருகின்ற 'பட்டம்' நான்கெழுத்து!
பட்டத்தினால் கிடைக்கின்ற 'ஊதியம்'
நான்கெழுத்து!

ஊதியம் தருகின்ற 'மதிப்பு' நான்கெழுத்து!
மதிப்புடன் பெண்ணுக்குக் 'கணவன்' ஆவது
நான்கெழுத்து!

கணவன் 'தலைவன்' ஆவதும் நான்கெழுத்து!
தலைவன் முதுமையினால் 'கிழவன்' ஆவது
நான்கெழுத்து!

இறுதியில் தூக்கிச் செல்லும் 'நால்வர்' நான்கெழுத்து!
னால்வர் கொண்டு சேர்க்கும் இடம் 'சுடுகாடு'
நான்கெழுத்து!

சுடுகாடு உள்ள இடமோ 'உலகம்' என்னும் நான்கெழுத்து!

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ரயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் - அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்


முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


-பாரதியார்

Monday, March 13, 2006

பாரதிதாசன்

கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்ததைப் போல
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதைத் யெல்லம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

- பாவேந்த்ர் பாரதிதாசன்

தமிழ் மொழி (பாரதியார்)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழிச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகம்மெலாம்
பராவும்வகை செய்தல் வேண்டும்

-தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார்